Saturday, October 8, 2011

"க‌ம்ப‌த்து ஆமை"

ஒரு தீவிர‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ருட‌ன், ந‌ட‌ப்பு அர‌சிய‌ல் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சு, ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌ல் முடிவு, சொத்துக் குவிப்பு, நில‌ அப‌க‌ரிப்பு,கைது ப‌ட‌ல‌ம், காவ‌ல்துறை மாற்ற‌ங்க‌ள், ப‌ர‌மக்குடி ச‌ம்ப‌வ‌ம், திமுக‌ முப்பெருவிழா, த‌னியார் க‌ல்லூரியில் அர‌சிய‌ல்வாதிக‌ளின் அளுமை. அர‌சுக்கே ப‌டிய‌ள‌க்கும் டாஸ்மாக் ம‌க்க‌ளுக்கு ச‌ர‌க்கு ச‌ப்ளை செய்யும் அர‌சிய‌ல்வாதிக‌ளின், உபிசா வின் க‌ம்ப‌னிக‌ள் அடிக்கும் கொள்ளை லாப‌ங்க‌ள், ஆட்சி மாறி இல‌வ‌ச‌ வீட்டு திட்ட‌ம் கைவிட‌ப்ப‌ட்டும் இற‌ங்காத‌ ம‌ணல், சிமெண்ட், செங்க‌ல் விலைக‌ள், சிறு க‌ட்சிக‌ளின் மீது திணிக்க‌ப்ப‌ட்ட‌ கூட்ட‌ணி இல்லாத‌ ப‌ஞ்சாய‌த்து தேர்த‌ல் என மாநில‌ விவ‌ர‌ங்க‌ள் ப‌ற்றி பேசி ஒரு வ‌ட்ட‌ம் முடிவுக்கு வ‌ந்த‌து.

அடுத்த‌ க‌ட்ட‌மாக பேச்சு மாநில‌ எல்லைக‌ள் தாண்டி மைய்ய‌ அர‌சில் மைய‌ம் கொண்ட‌து.
2ஜியின் முன்ன‌னி, பின்ன‌னி ப‌ற்றிய‌ அல‌ச‌ல், யுபிஏ 1க்கும் 2க்கும் ( இது வேற‌ 1, 2) ஆன ஒற்றுமை, வேற்றுமை, முர‌ண் (சினிமா அல்ல‌), சோனியாவின் உட‌ல்ந‌ல‌ம், க‌ருப்பு ப‌ணம், ராகுலின் பிர‌த‌ம‌ர் க‌ன‌வு, ம‌ந்திரி பிர‌தானிக‌ளின் "வ‌ருங்கால‌ பிர‌த‌ம‌ர் பாராக்" ஓசை ப‌ற்றிய‌ பேச்சில் வ‌ந்து நின்ற‌து.

எப்ப‌டி ம‌ன்மோக‌ன் பிர‌த‌ம‌ராய் இருக்கும் போதே, சித‌ம்ப‌ர‌மும், பிராணாப்பும் அடுத்த த‌லைவ‌ர் ராகுல் தான் என்கின்ற‌ன‌ர். நூற்றியிர‌ண்டு கோடி ம‌க்க‌ள் வாழும் இந்த மிக‌ப் பெரிய‌ ஜ‌னநாய‌க‌ நாட்டின் த‌லைமைக்கு இந்த‌ ஒரு குடும்ப‌ ந‌ப‌ர்க‌ள் (நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல்) த‌விர்த்து வேறு ஆட்க‌ளே இல்லையா? இந்த‌ பிர‌த‌ம‌ர் ஏன் இப்ப‌டி யுஎஸ் அணுநிலைய‌ பார‌ளும‌ன்ற‌ வோட்டெடுப்பில் நாணய‌ம் த‌வறுகிறார், காம‌ன்வெல்த்தில் க‌ண்ணைக்க‌ட்டிக் கொள்கிறார், சித‌ம்ப‌ரத்தை நம்புகிறேன் என்கிறார்,ச‌ராச‌ரி 32 ரூபாய் ச‌ம்பாதித்தால் ஏழையில்லை என்கிற திட்ட‌க‌மிஷன் த‌லைவ‌ரான இவ‌ரே எம்பிக‌ளூக்கு ச‌ம்ப‌ள‌த்தை மூன்று (80000.00) ம‌டங்கு உய‌ர்த்துகிறார்  போன்ற என் த‌விப்பிற்கு, சிரித்துக் கொண்டே, ம‌ன்மோக‌ன் சிங் ஒரு "க‌ம்ப‌த்து ஆமை" ('post turtle') என்றார். உவ‌மை புதிதாய் ஒன்றும் புரியாம‌ல் குழ‌ப்பியாதால்,  ம‌றுப‌டியும் சொல்லுங்க‌ளேன் என்றேன்.

இந்த‌ப் ப‌ட‌த்தைக் காட்டி, பின் விள‌க்கினார்.

                                           'post turtle'

இந்த‌ ஆமை அதுவாய் ஏறி போய் அங்கு அம‌ர‌வில்லை, அத‌ற்கான இட‌மும் அது இல்லை, ஆமைக்கு  த‌னக்கு சம்ப‌ந்த‌மேயில்லாத‌  அந்த இட‌த்திலிருந்து என்ன‌ செய்வ‌து எனவும் தெரியாது, செய்ய‌வும் முடியாது. த‌ன் த‌குதிக்கு மீறிய‌ உய‌ர்த்தி அம‌ர்த‌த‌ப்ப‌ட்ட‌ இட‌த்திலிருந்து ஒன்றும் செய்ய‌வியால‌து. அந்த‌ இட‌த்தில் அந்த‌ ஆமையை அம‌ர்த்திய‌  முட்டாள்க‌ளைத் தான் நாம் குற்ற‌ம் சொல்ல‌ வேண்டுமே த‌விர, பாவ‌ம்‌ அந்த‌ க‌ம்ப‌த்தின் மீது வாளாவிருக்கும் ஆமை மீது அல்ல‌ என்றார்.

இந்திய‌ ம‌க்க‌ளின் செய‌லுக்கு ச‌ரியான பாட‌ம் தான் என்றேன்.

முட்டாள், அவ‌ர் ராஜ்ஜிய‌ சபா வ‌ழியா சோனியா மேட‌த்தாலே கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர், ம‌ற‌ந்துட்டியா என்றார்.

த‌லையை சொரிந்து கொண்டே, ஆமால்ல‌, சே.. ம‌றந்‌துட்டேன் என்றேன்.  இந்தியன் இல்லையா நானும்!!

(அச‌டு வ‌ழிந்த‌து த‌னி...) 

Thursday, October 6, 2011

"அப்துல்க‌லாம் முத‌ல் ஆண்டிமுத்து ராஜா வ‌ரை"


 திரு அப்துல்கலாம் அவர்கள் ஹைதரபாதில் பேசியதாக வந்த ஈ மெயிலின் இறுதிப் பகுதி இது.
//Dear Indians, The article is highly thought inductive, calls for a greatdeal
of introspection and pricks one's conscience too.... I am echoing J. F.
Kennedy 's words to his fellow Americans to relate to Indians.....
ASK WHAT WE CAN DO FOR INDIA
AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA
WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'
Lets do what India needs from us.
Thank you,
Dr. Abdul Kalaam* *
“The future belongs to those who believe in the beauty of their dreams .." //

1960களில் இது போன்ற பத்திரிக்கை, வானொலி, வானொளி போன்ற ஊடகங்களின் தாக்கமில்லாத எளிய இந்தியாவிலேயே, அன்றைய‌ அமெரிக்க‌ அதிப‌ர் திரு கென்னடியும் அவர் மணைவி ஜாக்குலின் கென்னடியும் மிகப் பிரபலம்.(ச‌ந்தேக‌ம் இருந்தால் ஜாக்குலின் ச‌மீப‌த்திய‌ அமேஷான் டாப் லிஸ்டிலுள்ள‌  "Jacqueline Kennedy: Historic Conversations on Life with John F. Kennedy" புத்த‌க‌த‌தில் 'நேருவுட‌னான‌ நேர‌ங்க‌ளை' ப‌டியுங்க‌ள்.
ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம்.


"நாடு உன‌க்கு என்ன‌ செய்த‌து எனக் கேட்காதே!
நீ, நாட்டுக்காக என்ன‌ செய்கிறாய் எனக் கேட்டுக் கொள்"


என்ற‌ அவர் ப‌ஞ்ச் ட‌ய‌லாக், அப்போதே கிராம‌ங்க‌ளில் கூட‌ பிர‌ப‌ல‌ம்.
அதையே தான் ந‌ம் அணு/வின்வெளி மேதையும் இங்கு நினைவூட்டுகிறார். அதிர்ச்சியான ஆச்ச‌ரிய‌மான உண்மை என்ன‌வெனில், இதைக் கென்ன‌டி, அமெரிக்க‌ர்க‌ளின் நிர‌ந்த‌ர‌ எதிரி நாடாகிய‌ லிபிய‌ க‌விஞன், த‌த்துவ‌ஞானி, புர‌ட்சிய‌வாதியாகியா "திரு க‌லில் ஹிப்ரன் (1883 -1931) 'இட‌மிருந்து எடுத்துக் (திருடி!!) கொண்டார் என்ப‌தே.

கொன்ன‌டியின் காலத்திற்கு ஐம்ப‌தாண்டுக‌ளுக்கு முன்பே "தி நியூ பிராண்டிய‌ர்"  என்கிற‌ அரேபிக் க‌ட்டுரையில், ம‌த்திய‌ கிழ‌க்கு ம‌க்க‌ள் விழித்து எழ‌ வேண்டி எழுதப் ப‌ட்ட‌து இந்த‌ வாச‌க‌ம்.
அதில் நாட்டின் நிக‌ழ்கால‌ம், வ‌ருங்கால‌த்தை இரு ந‌ப‌ர்க‌ளாக உருவ‌கித்து. நீ யாராய் இருக்க‌ப் போகிறாய் என்கிற‌ தோனியில் கேள்வி/ப‌தில் வ‌டிவில்,
'நீ யாராய் இருக்கிறாய்? என்ன‌ருகே வந்து சொல், நீ யார், எப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ன் என்று உன்னை உன‌து ந‌ட‌வ‌டிக்கையாலும் தோற்றத்தினாலும் தீர்மானிக்கிறேன், நீ வெளிச்ச‌த்திற்கு வ‌ருப‌வ‌னா, அல்ல‌து இருளுக்குள் செல்ப‌வான‌ என‌:
உன‌து நாடு, உன‌க்கு என்ன‌ செய்ய‌ வேண்டுமென அர‌சிய‌வாதி போல் கேட்கிறாயா?
அல்ல‌து, நீ உன் நாட்டுக்கு என்ன செய்ய‌ப் போகிறேன் என‌ ம‌னப்பூர்வ‌மாய் கேட்டுக் கொள்கிறாயா?
(Are you Politian asking what your country can do for you or a zealous one asking what you can do for your country? )
நீ முத‌ல் வ‌கையெனில், நீ ஒரு(அட்டைபூச்சி போன்ற‌) ஒ/ஓட்டுண்ணி,
இரண்டாம் வ‌கையெனில், நீயே பாலைவ‌ன‌த்தின் இனிய‌ நீர் நிர‌ம்பிய‌ பூஞ்சோலை' எனத் தொட‌ர்கிற‌து அக்க‌ட்டுரை.  தொட‌ந்து ப‌டித்தால் ந‌ம் இன்றைய‌ இந்திய‌ சூழ‌லுக்கு மிக‌வும்  பொறுத்த‌மாய், ந‌மக்காவே எழுதிய‌து போலிருக்கிற‌து.
.
ஆனால் அது ந‌ம் க‌ட்டுரையின் பாதையை/திசையை  மாற்றி (சோனிய‌ஜீ, ப.சி ஜி, முக‌ர்ஜி 2ஜீ க‌டித விவ‌கார‌த்தை திசை மாற்றிய‌து போல)‌ விடும்.

இதை ' நாட்டின் ந‌ல‌ம் விரும்பும் திரு அப்துல் க‌லாம் முத‌ல்', "தன் வீட்டு வ‌ள‌ம் மட்டும் விரும்பும் ஆண்டிமுத்து ராஜா வ‌ரை" ஏன் கென்ன‌டி சொன்ன‌தாகவே திரும்ப‌த் திரும்ப‌ சொல்கிறார்க‌ள். (தலைப்புக்கு பொருத்த‌மாய் வ‌ந்துவிட்ட‌தா?)

எல்லாத்தையும் அமெரிக்காகார‌ன் சென்னான்னு சொல்லி, அதை கேட்கிற‌துல‌, நம்ம‌ ம‌க்க‌ளும், ம‌ன்மோக‌ன் சாரும் ஒரே மாதிரி தான்!! ச‌ரியா?

 

Saturday, October 1, 2011

விழிப்ப‌ற்ற‌ ம‌த்திய‌த‌ர‌ ம‌க்க‌ள்

ம‌த்திய‌த‌ர‌ ம‌க்க‌ள், நாட்டிற்கு ஒழுங்காய் வ‌ரி செலுத்தும், ச‌ட்ட‌ திட்ட‌ங்களுக்கு ம‌திப்ப‌ளித்து 'தான் உண்டு, த‌ன் வேலையுண்டு' எனத் அட‌ங்கி த‌ன் வ‌ழியே புல‌ம்பிக் கொண்டு வாழும், இந்த‌ நாட்டின் முதுகெழும்பு இந்த‌ பிரிவின‌ர்தான் என்ப‌தில் அதிக‌ சந்தேக‌ம் இருக்காது, ச‌ரியா? 

இவ‌ர்க‌ள் இப்ப‌டி "த‌ன் வ‌ழி, த‌னி வழி" என ச‌முதாய‌த்தின் மீதான அவ‌தானிப்பு, அக்க‌றை, பிர‌ச்ச‌னை ம‌ற்றும் தீர்வுக‌ளை முன்னெடுக்காததால் தான் நாட்டின் எல்லா துறையிலும் அத‌ன் த‌ர‌ம் தாழ்ந்து வ‌ருகிற‌து!!
வ‌ரி, விலைவாசி, அசுத்த‌ம், ச‌த்த‌ம்,அர‌சிய‌ல், ல‌ஞ்ச‌ம் என எல்லாத் துன்ப‌ங்க‌ளையும் சும‌க்கும் நம் மீது அந்த‌ ப‌ழியையும் சும‌த்துகிறார்க‌ளே? மத்திய‌த‌ர‌ ம‌க்க‌ள் என்றால், வ‌லைப‌திவாள‌ர்க‌ளுக்கு கூட‌ ந‌க்க‌ல் தானா? ச‌ற்று சிந்திப்போம்.



நாம் தேர்ந்தெடுக்கும் அர‌சாங்க‌ம், ந‌மக்கு என்ன‌ த‌ர‌வேண்டும் என்ப‌தை அடித்த‌ட்டு ம‌க்க‌ள் இல‌வ‌ச‌ம் என‌ வாங்கிக் கொள்கிறார்க‌ள்.(இல‌வ‌ச‌ வீடு, மாடு ஆடு, உண‌வு, அரிசி, அடுப்பு, பேன், ம‌ருத்த‌வ காப்பீடு, சேலை வேஷ்டி போன்ற‌வை).

 உய‌ர்த‌ர‌ வ‌ர்க்க‌ம் புதுத் தொழில் தொடங்க‌, ச‌லுகை, ஊக்குவிப்பு, வ‌ரிக் குறைப்பு, ஏய்ப்பு, த‌ள்ளுப‌டி, வ‌ங்கிக‌ளின் ப‌ணமுத‌லீட்டு ச‌லுகை, பெரும் அர‌சிய‌ல் தொட‌ர்பு என ப‌ல‌ ச‌லுகைக‌ளை, வாய்ப்பு வ‌ச‌திக‌ளை பெற்றுக் கொள்கிறார்க‌ள். (அம்பானி, டாடா, க‌லாநிதி, ச‌சிகலா, ராமஜெய‌ம், கிங் கெமிக்க‌ல்ஸ், வேதாந்தா, ரெட்டி ச‌கோத‌ர்க‌ள், கோய‌ங்கா, அப்ப‌ல்லோ ரெட்டி இப்ப‌டி எத்த‌னையோ) குறிப்பாய் சொல்வ‌தானால், ஆட்சியாள‌ர்க‌ளை ஆட்டுவிப்ப‌வ‌ர்க‌ளே இவர்க‌ள் தான்.

ஆனால் இந்த‌ப் பாவ‌ப்ப‌ட்ட‌ ம‌த்திய‌ வ‌ர்க்க‌த்தின‌ர் ம‌ட்டும் த‌னக்கு நியாமாய் கிடைக்க‌ வேண்டிய‌ குடிநீர், காற்று, க‌ல்வி, ம‌ருத்துவ‌ம், பாதுகாப்பு, எதிர் காலத் திட்ட‌ம் என‌ கார‌ட்டுக்கு பின் ஓடும் குதிரையாய் (Upper Middle Class) அல்ல‌து க‌ழுதையாய் (Lower Middle Class) மூச்சிழைக்க‌ க‌டைசிக் கால‌ம் வ‌ரை ஓடிக் கொண்டே இருக்கிறார்க‌ள். அர‌சாங்க‌ம் த‌ர‌ வேண்டிய‌ அடிப்ப‌டை வ‌ச‌திக‌ளான‌ குடிநீர், க‌ல்வி, ம‌ருத்துவ‌ம் போன்ற‌வையாவ‌து இல‌வ‌சமாய் கிடைக்கிற‌தா?

குடிநீர்:  நாம் க‌டைக‌ளிலிருந்து கேன் வாட்ட‌ர் வாங்கிவிடுகிறோம் அல்ல‌து ஹேமா மாலினி சொல்லும் ஆர்வோ வாட்ட‌ர் பூரிஃபைய‌ர் வாங்கி விடுகிறோம். கார்ப‌ரேஷன் குழாய்க‌ளில் நல்ல‌ த‌ண்ணீர் வ‌ருகிற‌தா என்ப‌தே ந‌மக்குத் தெரியாது,
க‌ல்வி: அர‌சு ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ள் ச‌ரிவ‌ர இல்லை, வ‌குப்ப‌றைக‌ளில் மாண‌வ‌ர்க‌ள் சாராயம் அருந்துகிறார்க‌ள், சில‌ ப‌ள்ளிக‌ளில் மாண‌வ‌ர்க‌ளே இல்லை ஆக‌வே க‌ட்டிட‌ங்க‌ள் இடிக்க‌ப்பட்டு வ‌ணிக‌ வ‌ளாகமாக்கி கோக்கும், சிக‌ரெட்டும், ம‌துபான‌ங்க‌ளும் விற்குமிட‌மாக்கலாம் என்கிற‌து கார்ப‌ரேஷன்.

 ந‌ம் பிள்ளைக‌ள் ஆக்ஸ்போர்டு நர்ச‌ரியிலோ, ப‌த்ம‌ஷேச‌த்திரிலோ, லையோலாவிலோ, எஸ்எஸ்எனிலோ ப‌டித்துக் கொண்டிருப்ப‌தால் இந்த‌ மாதிரி ப‌ள்ளிக‌ள் ப‌க்க‌ம் நம் பார்வை கூட போவ‌தில்லை. பின் எப்ப‌டி அந்த‌ ப‌ள்ளிக‌ளின் த‌ர‌ம் ப‌ற்றி, அந்த‌ குழ‌ந்தைக‌ள், ஆசிரிய‌க‌ள் ப‌ற்றி தெரியும்.

ம‌ருத்துவ‌ம்: சிறு த‌லைவ‌லி, காய்ச்ச‌ல் தொட‌ங்கி, குழ‌ந்தை பேறு, அவச‌ர‌சிகிச்சை, விப‌த்து, இத‌யமாற்றுவ‌ரை ந‌ம் த‌ர‌த்திற்கு ஏற்ற‌ பிரைவேட் ந‌ர்சிங்ஹோம் / ஹாஸ்பிட‌ல் தான். (அப்போலோவில் சேர்த்து ஒரு வார‌ம் ஏசி ரூம்ல‌ வைச்சிப் பார்த்தோம், என்னென்ன‌வோ டெஸ்ட் எடுந்தாங்க‌,.. ச்சு. க‌டைசில‌ ஒண்ணும் ஆக‌லை, அஞ்சு ல‌ட்ச‌த்த‌ அழுதுட்டு.. பாடிய‌க் கொண்ட‌ந்தோம்..)

அர‌சாங்க‌ ம‌ருத்தும‌ணைக‌ள் பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ளில், முக்கிய‌ இட‌ங்க‌ளில்.பாவ‌ம் கேட்பாரின்றி அழுக்குக் கூடார‌மாய் கிட‌க்கிற‌து. அங்குள்ள‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் வெளியே த‌னியாய் சுத்த‌மான சுகாத‌ர‌மான கிளினிக்யை ச‌ந்துக‌ளில் ந‌ட‌த்தி வ‌ருகிறார்க‌ள்.

நாம் த‌ண்ணீரை வெளியே வாங்காவிடில், அர‌சை சுத்திக‌ரித்த‌ த‌ண்ணிர் த‌ரவேண்டுமென‌ வ‌ற்புறுத்தி வாங்கி இருப்போம்.
த‌னியார் ப‌ள்ளிக்கு அனுப்பாமல் அர‌சு ப‌ள்ளிக‌ளுக்கு ந‌ம் பிள்ளைக‌ள் போயிருந்தால். க‌ல்வித்துறைக்கு க‌டித‌ங்க‌ள் ப‌ற‌ந்திருக்கும். மாற்ற‌ம் வ‌ந்திருக்கும்.


அரசு ம‌ருத்துவ‌ம‌னைக்கு நாம் சிகிச்சைக்கு போயிருந்தால், வ‌ராத‌ ம‌ருத்த‌வ‌ர்க‌ளையும், இல்லாத‌ ம‌ருந்துக‌ளையும், வ‌ச‌திக‌ளையும் ப‌ற்றி ல‌ட்ட‌ர் டு தி எடிட்ட‌ருக்கும், ம‌ருத்துவ‌ க‌ழ‌கத்திற்கும் க‌டித‌ங்க‌ள் விரைந்திருக்கும். அலையேன‌ வ‌ரும் குறைக‌ளை தாங்காது அர‌சு அத‌ன் அலுவ‌ல்க‌ளை செம்மைப் படுத்தி ஒழுங்காய் த‌ர‌ வேன்டிய‌தை த‌ந்திருக்கும்.

"விழிப்ப‌ற்ற‌ ம‌க்க‌ளால் ஜ‌ன‌நாய‌க‌த்தின் சுக‌த்தை அனுப‌விக்க‌ இய‌லாது"