Saturday, October 8, 2011

"க‌ம்ப‌த்து ஆமை"

ஒரு தீவிர‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ருட‌ன், ந‌ட‌ப்பு அர‌சிய‌ல் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சு, ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌ல் முடிவு, சொத்துக் குவிப்பு, நில‌ அப‌க‌ரிப்பு,கைது ப‌ட‌ல‌ம், காவ‌ல்துறை மாற்ற‌ங்க‌ள், ப‌ர‌மக்குடி ச‌ம்ப‌வ‌ம், திமுக‌ முப்பெருவிழா, த‌னியார் க‌ல்லூரியில் அர‌சிய‌ல்வாதிக‌ளின் அளுமை. அர‌சுக்கே ப‌டிய‌ள‌க்கும் டாஸ்மாக் ம‌க்க‌ளுக்கு ச‌ர‌க்கு ச‌ப்ளை செய்யும் அர‌சிய‌ல்வாதிக‌ளின், உபிசா வின் க‌ம்ப‌னிக‌ள் அடிக்கும் கொள்ளை லாப‌ங்க‌ள், ஆட்சி மாறி இல‌வ‌ச‌ வீட்டு திட்ட‌ம் கைவிட‌ப்ப‌ட்டும் இற‌ங்காத‌ ம‌ணல், சிமெண்ட், செங்க‌ல் விலைக‌ள், சிறு க‌ட்சிக‌ளின் மீது திணிக்க‌ப்ப‌ட்ட‌ கூட்ட‌ணி இல்லாத‌ ப‌ஞ்சாய‌த்து தேர்த‌ல் என மாநில‌ விவ‌ர‌ங்க‌ள் ப‌ற்றி பேசி ஒரு வ‌ட்ட‌ம் முடிவுக்கு வ‌ந்த‌து.

அடுத்த‌ க‌ட்ட‌மாக பேச்சு மாநில‌ எல்லைக‌ள் தாண்டி மைய்ய‌ அர‌சில் மைய‌ம் கொண்ட‌து.
2ஜியின் முன்ன‌னி, பின்ன‌னி ப‌ற்றிய‌ அல‌ச‌ல், யுபிஏ 1க்கும் 2க்கும் ( இது வேற‌ 1, 2) ஆன ஒற்றுமை, வேற்றுமை, முர‌ண் (சினிமா அல்ல‌), சோனியாவின் உட‌ல்ந‌ல‌ம், க‌ருப்பு ப‌ணம், ராகுலின் பிர‌த‌ம‌ர் க‌ன‌வு, ம‌ந்திரி பிர‌தானிக‌ளின் "வ‌ருங்கால‌ பிர‌த‌ம‌ர் பாராக்" ஓசை ப‌ற்றிய‌ பேச்சில் வ‌ந்து நின்ற‌து.

எப்ப‌டி ம‌ன்மோக‌ன் பிர‌த‌ம‌ராய் இருக்கும் போதே, சித‌ம்ப‌ர‌மும், பிராணாப்பும் அடுத்த த‌லைவ‌ர் ராகுல் தான் என்கின்ற‌ன‌ர். நூற்றியிர‌ண்டு கோடி ம‌க்க‌ள் வாழும் இந்த மிக‌ப் பெரிய‌ ஜ‌னநாய‌க‌ நாட்டின் த‌லைமைக்கு இந்த‌ ஒரு குடும்ப‌ ந‌ப‌ர்க‌ள் (நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல்) த‌விர்த்து வேறு ஆட்க‌ளே இல்லையா? இந்த‌ பிர‌த‌ம‌ர் ஏன் இப்ப‌டி யுஎஸ் அணுநிலைய‌ பார‌ளும‌ன்ற‌ வோட்டெடுப்பில் நாணய‌ம் த‌வறுகிறார், காம‌ன்வெல்த்தில் க‌ண்ணைக்க‌ட்டிக் கொள்கிறார், சித‌ம்ப‌ரத்தை நம்புகிறேன் என்கிறார்,ச‌ராச‌ரி 32 ரூபாய் ச‌ம்பாதித்தால் ஏழையில்லை என்கிற திட்ட‌க‌மிஷன் த‌லைவ‌ரான இவ‌ரே எம்பிக‌ளூக்கு ச‌ம்ப‌ள‌த்தை மூன்று (80000.00) ம‌டங்கு உய‌ர்த்துகிறார்  போன்ற என் த‌விப்பிற்கு, சிரித்துக் கொண்டே, ம‌ன்மோக‌ன் சிங் ஒரு "க‌ம்ப‌த்து ஆமை" ('post turtle') என்றார். உவ‌மை புதிதாய் ஒன்றும் புரியாம‌ல் குழ‌ப்பியாதால்,  ம‌றுப‌டியும் சொல்லுங்க‌ளேன் என்றேன்.

இந்த‌ப் ப‌ட‌த்தைக் காட்டி, பின் விள‌க்கினார்.

                                           'post turtle'

இந்த‌ ஆமை அதுவாய் ஏறி போய் அங்கு அம‌ர‌வில்லை, அத‌ற்கான இட‌மும் அது இல்லை, ஆமைக்கு  த‌னக்கு சம்ப‌ந்த‌மேயில்லாத‌  அந்த இட‌த்திலிருந்து என்ன‌ செய்வ‌து எனவும் தெரியாது, செய்ய‌வும் முடியாது. த‌ன் த‌குதிக்கு மீறிய‌ உய‌ர்த்தி அம‌ர்த‌த‌ப்ப‌ட்ட‌ இட‌த்திலிருந்து ஒன்றும் செய்ய‌வியால‌து. அந்த‌ இட‌த்தில் அந்த‌ ஆமையை அம‌ர்த்திய‌  முட்டாள்க‌ளைத் தான் நாம் குற்ற‌ம் சொல்ல‌ வேண்டுமே த‌விர, பாவ‌ம்‌ அந்த‌ க‌ம்ப‌த்தின் மீது வாளாவிருக்கும் ஆமை மீது அல்ல‌ என்றார்.

இந்திய‌ ம‌க்க‌ளின் செய‌லுக்கு ச‌ரியான பாட‌ம் தான் என்றேன்.

முட்டாள், அவ‌ர் ராஜ்ஜிய‌ சபா வ‌ழியா சோனியா மேட‌த்தாலே கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர், ம‌ற‌ந்துட்டியா என்றார்.

த‌லையை சொரிந்து கொண்டே, ஆமால்ல‌, சே.. ம‌றந்‌துட்டேன் என்றேன்.  இந்தியன் இல்லையா நானும்!!

(அச‌டு வ‌ழிந்த‌து த‌னி...) 

21 comments:

  1. இந்திய‌ ம‌க்க‌ளின் செய‌லுக்கு ச‌ரியான பாட‌ம் தான்

    ReplyDelete
  2. நீங்களும் உங்கள் நண்பரும் தொடாத விஷயம் இல்லை இரண்டாவது பத்தியில்.அனல் பறந்திருக்கும் பேச்சாய் இருந்திருக்கும்.

    எல்லா உவமைகளும் நமக்கு நெருக்கம்தானோ வாசன்? அற்புதமான நினைவூட்டல்.

    ப்ளாக் ஒரு வழியாகப் புத்தம் புதுசா ஆக்கிட்டீங்க.சபாஷ்.

    ReplyDelete
  3. நாமும் ஒரு வகையில் கம்பத்து ஆமைகள் தானோ என்னவோ. இன்று நாமிருக்கும் நிலைக்கு ஏதாவது காரணம் கூறி மனசை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  4. சிரக்கம்பம்.. கரக்கம்பம் செய்து பாராட்டுகிறேன்..

    ReplyDelete
  5. Sir! As I have mentioned before-- I used to think 'the educated' must come to politics. But now that they are here- they solve no purpose. Then there is this notion- 'good people' must come to politics. Dad said this morning- Manmohan is not a bad person either. Still, the situation only got worse.

    the problem is- he is a good man. but he lacks something very important. something that can be said as- "the integrity of mind". a good person is not only someone who doesn't indulge in bad things. his hands may be clean. but he lets others carry on with their dirty deeds. that's what makes him- a man without "integrity of mind"...

    Congress loyalists may all very well promote Rahul Gandhi. But unless he gets out of his "reluctant prince"-"eternal work-in-progress" mode- nothing can be done... the pranab-chidambaram rift still required an ailing sonia's intervention, when the "reluctant prince" enjoyed meddling with youth congress affairs in a burning Kashmir- not to forget the 'pleasant company of the old chum'- omar (he's another another story...)!

    of late, i am beginning to feel that- there is no hope...

    ReplyDelete
  6. உயரத்தில் கொண்டு உட்கார வைத்ததது மக்களை சொல்லிகிரீரா அல்லது ஆண்டோமைனாவை அதவது இத்தாலி ஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து சோனியா என்ற பெயரைத் தங்கி உள்ளவரை சொல்லிரீரா என்பது புரியவில்லை மக்களை சொன்னால் அது குற்றமே . ஏனெலில் இந்திய அரசியல் அப்படி ..

    ReplyDelete
  7. இராஜராஜேஸ்வரி
    இந்திய‌ ம‌க்க‌ளின் செய‌லுக்கு ச‌ரியான பாட‌ம் தான்//

    உங்க‌ளின் பின்னோட்ட‌த்திற்கு நன்றி மேட‌ம்.
    மன்மோக‌ன் சாரைத் தேர்ந்தெடுத்த‌து இந்திய‌ ம‌க்க‌ள் அல்ல. ராஜ்ய‌ ச‌பை (மேல் ச‌பை/பின்வ‌ழி) மூல‌ம் தேர்ந்தெடுத்து பிர‌த‌ம‌ராய் அம‌ர‌ வைத்த‌து காங்கிர‌ஸ், அதாவ‌து அத‌ன் த‌லைமை இத்தாலியில் பிற‌ந்து இந்தியா வ‌ந்த‌ சொக்க‌த்த‌ங்க‌ம்?? சோனியா அம்மையார்.

    ReplyDelete
  8. //சுந்தர்ஜி

    எல்லா உவமைகளும் நமக்கு நெருக்கம்தானோ வாசன்? அற்புதமான நினைவூட்டல்.

    ப்ளாக் ஒரு வழியாகப் புத்தம் புதுசா ஆக்கிட்டீங்க.சபாஷ்.

    மிக நீ......ண்..........ட‌ இடைவெளிக்குப் பின் த‌ங்க‌ளின் பின்னோட்ட‌ம்.
    எதை எதையோ கிளிக் செய்து நீங்க‌ள் சொன்ன‌து போல் "ஒரு வ‌ழியாய்" தான் இப்ப‌டி வ‌ந்த‌து.
    "ஆக்குபை வால்ஸ்டீர்ட்" தாக்க‌த்தை ப‌ங்குச் ச‌ந்தைக‌ள் (குறிப்பாய் யுஎஸ் & யூரோப்) எப்படி பார்க்கின்ற‌ன‌?

    ReplyDelete
  9. //M Balasubramaniam
    நாமும் ஒரு வகையில் கம்பத்து ஆமைகள் தானோ என்னவோ. இன்று நாமிருக்கும் நிலைக்கு ஏதாவது காரணம் கூறி மனசை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.//

    நாமும் அப்ப‌டியெனில், யார் ந‌ம்மை அங்கு வைத்தார்க‌ளோ அவ‌ர்க‌ளைத் தான் அத‌ற்கு பொறுப்பாக்க‌ வேண்டும். ச‌ரியா ஐயா?

    ReplyDelete
  10. //ரிஷபன்
    சிரக்கம்பம்.. கரக்கம்பம் செய்து பாராட்டுகிறேன்..//

    உங்க‌ளின் "அசாதார‌ண‌ பாராட்டு வார்த்தைக‌ளுக்க‌வே", மேலும், மேலும் ப‌திவெழுத‌ வேண்டுமென்ற‌ ஆவ‌ல் பொங்கும். பின்பு ச‌ர‌க்கில்லாம‌ல் அட‌ங்கிவிடுவ‌து வேறு விச‌ய‌ம்.

    ReplyDelete
  11. //Matangi Mawley
    Sir! As I have mentioned before-- I used to think 'the educated' must come to politics. But now that they are here- they solve no purpose. Then there is this notion- 'good people' must come to politics. Dad said this morning- Manmohan is not a bad person either. Still, the situation only got worse.

    the problem is- he is a good man. but he lacks something very important. something that can be said as- "the integrity of mind". a good person is not only someone who doesn't indulge in bad things. his hands may be clean. but he lets others carry on with their dirty deeds. that's what makes him- a man without "integrity of mind"...

    Congress loyalists may all very well promote Rahul Gandhi. But unless he gets out of his "reluctant prince"-"eternal work-in-progress" mode- nothing can be done... the pranab-chidambaram rift still required an ailing sonia's intervention, when the "reluctant prince" enjoyed meddling with youth congress affairs in a burning Kashmir- not to forget the 'pleasant company of the old chum'- omar (he's another another story...)!

    of late, i am beginning to feel that- there is no hopஎ...

    உங்க‌ளின் எண்ண‌ங்க‌ளும், பார்வைக‌ளும் ஐப்ப‌சி/கார்த்திகை காவேரியாய் பொங்கி பிர‌வாக‌மாய் க‌ரை புர‌ண்டு வ‌ந்து இறுதியில் நாட்டு ந‌ட‌ப்பு, அர‌சிய‌ல், ம‌க‌களின் விழிப்பு போன்ற‌ அணைக‌ளால் தேக்க‌ப்ப‌ட்டு, இளைத்து,க‌லைத்து, உங்க‌ளின் பிர‌க்டிக‌லான பார்வையில் ந‌லிந்து, இறுதியில் எதிர்ம‌றையாய் திருச்சிக்கு வ‌ரும் காவெரியாய் ஆகிவிடும். நீங்க‌ள் சொல்வ‌து தான் நெற்றில் அறையும் நிஜ‌ம்.
    Absolutely we appreciate your Dad`s view. PM is a good man, of course, but not HONEST to his POST. He is loyal and toiling for the interest of Madam Sonia but NOT to the Nation. That is ‘THE’ tragedy.
    அர‌சிய‌லில் (ம‌த்திய‌/மாநில‌) வாரிசுக‌ளை அகற்றினாலே அர‌சுக் கிண்றுக‌ள் புது ஊற்றெடுத்து ம‌க்க‌ளின் தாக‌ம் த‌ணிக்கும்.

    ReplyDelete
  12. //மாலதி
    உயரத்தில் கொண்டு உட்கார வைத்ததது மக்களை சொல்லிகிரீரா அல்லது ஆண்டோமைனாவை அதவது இத்தாலி ஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து சோனியா என்ற பெயரைத் தங்கி உள்ளவரை சொல்லிரீரா என்பது புரியவில்லை மக்களை சொன்னால் அது குற்றமே . ஏனெலில் இந்திய அரசியல் அப்படி ..//

    மன்மோக‌ன் சாரைத் தேர்ந்தெடுத்த‌து இந்திய‌ ம‌க்க‌ள் அல்ல. ராஜ்ய‌ ச‌பை (மேல் ச‌பை/பின்வ‌ழி) மூல‌ம் தேர்ந்தெடுத்து பிர‌த‌ம‌ராய் அம‌ர‌ வைத்த‌து காங்கிர‌ஸ், அதாவ‌து அத‌ன் த‌லைமை இத்தாலியில் பிற‌ந்து இந்தியா வ‌ந்த‌ சொக்க‌த்த‌ங்க‌ம்?!! (நன்றி முக‌) சோனியா அம்மையார். ஆமையை க‌ம்ப‌த்தில் வைத்த‌து ராஜீவின் ம‌ண‌வியாய் இந்தியா வ‌ந்து, ராஜ்ஜிய‌த்தை ஆளும் அம்மையார்தான். ஆக‌வே அந்த‌ குற்ற‌ம் அம்மையாருடைய‌து. ஆனால் அவ‌ருக்கு அந்த‌ அதிகார‌ம் கொடுத்த‌ அந்த‌ க‌ட்சிக்கு வாக்க‌ளித்த‌து நாம் தானே! என்ன‌சொல்கிறீர‌கள் மால‌தி Madam?

    ReplyDelete
  13. புதிய உவமை. மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியது . எவ்வளவு பொருத்தம்.
    நம் தமிழ் இலக்கியங்களில் ஆமை உவமானம் நிறைய வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான ஒன்று.
    எனக்கு இப்போதெல்லாம் அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல மனம் வருவதில்லை. நம் மக்கள் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட ஆரம்பித்து விட்டார்கள். படித்தவர்கள் உட்பட. ( சிலர் இரண்டு பக்கமும் காசு வாங்கிக் கொண்டு யாருக்கும் ஒட்டு போடவில்லை, விரலில் மையில்லாமல், தோற்ற வேட்பாளரிடம் அடி வாங்கிய திருவாளர் படித்த மேதாவியை எனக்குத் தெரியும் )

    ReplyDelete
  14. 'க‌ம்ப‌த்து ஆமை'யை எப்ப‌டித் த‌வ‌ற‌ விட்டேன்?! அர‌சிய‌லில் நானொரு 'அரிச்சுவ‌டி' அள‌வும் அறியாமையாலோ...?!

    ReplyDelete
  15. /சிவகுமாரன் said...
    புதிய உவமை. மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியது . எவ்வளவு பொருத்தம்.
    நம் தமிழ் இலக்கியங்களில் ஆமை உவமானம் நிறைய வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான ஒன்று./
    //nilaamaghal said...
    'க‌ம்ப‌த்து ஆமை'யை எப்ப‌டித் த‌வ‌ற‌ விட்டேன்?! அர‌சிய‌லில் நானொரு 'அரிச்சுவ‌டி' அள‌வும் அறியாமையாலோ...?!// (அரின் சுவ‌டு??)

    நீண்ட‌ நாட்க‌ளுக்குப் பின் வ‌ந்து வாசித்து க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொண்ட‌ நெடுங்கால‌த் தோழ‌ருக்கும், தோழி அவ‌ர்க‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள்.

    ReplyDelete
  16. அப்படியானால் நாம் அடித்த தேர்தலுக்கு அம்மையாரை வீட்டுக்கு அனுப்பிடலாம் என கூறுகிறீர்கள் இவர்கள் இருந்தால் நாடு விற்ப்பனைக்கு வந்துவிடும் தானே ?

    ReplyDelete
  17. கம்பத்து ஆமை...அறிந்துகொண்டேன்.நன்றி வாசன் !

    ReplyDelete
  18. அம்மையாரை, அவ‌ர்க‌ளது நாட்டிற்கு அனுப்பிவிட‌ வேண்டும்.
    அப்போது தான் ந‌ம் நாடு ந‌ம்'மோடி'ருக்கும். (நான் பிஜேபி ஆள் அல்ல. சும்மா எழுத்துச்சுவைக்காய் ஒரு ஏட்டு சுர‌க்காய் மாதிரி).

    ReplyDelete
  19. /ஹேமா said...
    கம்பத்து ஆமை...அறிந்துகொண்டேன்.நன்றி வாசன் !/

    வ‌ருகைக்கும் க‌ண்டுகொண்ட‌மைக்கும் ந‌ன்றி மேம்.

    ReplyDelete
  20. //முட்டாள், அவ‌ர் ராஜ்ஜிய‌ சபா வ‌ழியா சோனியா மேட‌த்தாலே கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர், ம‌ற‌ந்துட்டியா என்றார்.

    த‌லையை சொரிந்து கொண்டே, ஆமால்ல‌, சே.. ம‌றந்‌துட்டேன் என்றேன். இந்தியன் இல்லையா நானும்!!//

    நல்லாவே சொன்னிக்க போங்க..

    ReplyDelete
  21. என்னவாயிற்று வாசன் சார்?
    பதிவுகளையே காணோம் .... வலைப்பக்கமும் வரவில்லை.

    ReplyDelete