திரு அப்துல்கலாம் அவர்கள் ஹைதரபாதில் பேசியதாக வந்த ஈ மெயிலின் இறுதிப் பகுதி இது.
//Dear Indians, The article is highly thought inductive, calls for a greatdeal
of introspection and pricks one's conscience too.... I am echoing J. F.
Kennedy 's words to his fellow Americans to relate to Indians.....
ASK WHAT WE CAN DO FOR INDIA
AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA
WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'
Lets do what India needs from us.
Thank you,
Dr. Abdul Kalaam* *
“The future belongs to those who believe in the beauty of their dreams .." //
1960களில் இது போன்ற பத்திரிக்கை, வானொலி, வானொளி போன்ற ஊடகங்களின் தாக்கமில்லாத எளிய இந்தியாவிலேயே, அன்றைய அமெரிக்க அதிபர் திரு கென்னடியும் அவர் மணைவி ஜாக்குலின் கென்னடியும் மிகப் பிரபலம்.(சந்தேகம் இருந்தால் ஜாக்குலின் சமீபத்திய அமேஷான் டாப் லிஸ்டிலுள்ள "Jacqueline Kennedy: Historic Conversations on Life with John F. Kennedy" புத்தகததில் 'நேருவுடனான நேரங்களை' படியுங்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.
"நாடு உனக்கு என்ன செய்தது எனக் கேட்காதே!நீ, நாட்டுக்காக என்ன செய்கிறாய் எனக் கேட்டுக் கொள்"
என்ற அவர் பஞ்ச் டயலாக், அப்போதே கிராமங்களில் கூட பிரபலம்.
அதையே தான் நம் அணு/வின்வெளி மேதையும் இங்கு நினைவூட்டுகிறார். அதிர்ச்சியான ஆச்சரியமான உண்மை என்னவெனில், இதைக் கென்னடி, அமெரிக்கர்களின் நிரந்தர எதிரி நாடாகிய லிபிய கவிஞன், தத்துவஞானி, புரட்சியவாதியாகியா "திரு கலில் ஹிப்ரன் (1883 -1931) 'இடமிருந்து எடுத்துக் (திருடி!!) கொண்டார் என்பதே.
கொன்னடியின் காலத்திற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பே "தி நியூ பிராண்டியர்" என்கிற அரேபிக் கட்டுரையில், மத்திய கிழக்கு மக்கள் விழித்து எழ வேண்டி எழுதப் பட்டது இந்த வாசகம்.அதில் நாட்டின் நிகழ்காலம், வருங்காலத்தை இரு நபர்களாக உருவகித்து. நீ யாராய் இருக்கப் போகிறாய் என்கிற தோனியில் கேள்வி/பதில் வடிவில்,
'நீ யாராய் இருக்கிறாய்? என்னருகே வந்து சொல், நீ யார், எப்படிப்பட்டவன் என்று உன்னை உனது நடவடிக்கையாலும் தோற்றத்தினாலும் தீர்மானிக்கிறேன், நீ வெளிச்சத்திற்கு வருபவனா, அல்லது இருளுக்குள் செல்பவான என:
உனது நாடு, உனக்கு என்ன செய்ய வேண்டுமென அரசியவாதி போல் கேட்கிறாயா? அல்லது, நீ உன் நாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன் என மனப்பூர்வமாய் கேட்டுக் கொள்கிறாயா?
(Are you Politian asking what your country can do for you or a zealous one asking what you can do for your country? )
நீ முதல் வகையெனில், நீ ஒரு(அட்டைபூச்சி போன்ற) ஒ/ஓட்டுண்ணி,
இரண்டாம் வகையெனில், நீயே பாலைவனத்தின் இனிய நீர் நிரம்பிய பூஞ்சோலை' எனத் தொடர்கிறது அக்கட்டுரை. தொடந்து படித்தால் நம் இன்றைய இந்திய சூழலுக்கு மிகவும் பொறுத்தமாய், நமக்காவே எழுதியது போலிருக்கிறது.
.
ஆனால் அது நம் கட்டுரையின் பாதையை/திசையை மாற்றி (சோனியஜீ, ப.சி ஜி, முகர்ஜி 2ஜீ கடித விவகாரத்தை திசை மாற்றியது போல) விடும்.
இதை ' நாட்டின் நலம் விரும்பும் திரு அப்துல் கலாம் முதல்', "தன் வீட்டு வளம் மட்டும் விரும்பும் ஆண்டிமுத்து ராஜா வரை" ஏன் கென்னடி சொன்னதாகவே திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். (தலைப்புக்கு பொருத்தமாய் வந்துவிட்டதா?) எல்லாத்தையும் அமெரிக்காகாரன் சென்னான்னு சொல்லி, அதை கேட்கிறதுல, நம்ம மக்களும், மன்மோகன் சாரும் ஒரே மாதிரி தான்!! சரியா?

//இதை ' நாட்டின் நலம் விரும்பும் திரு அப்துல் கலாம் முதல்', "தன் வீட்டு வளம் மட்டும் விரும்பும் ஆண்டிமுத்து ராஜா வரை" ஏன் கென்னடி சொன்னதாகவே திரும்பத் திரும்ப சொல்கிறார்கள்.//
ReplyDeleteநீங்கள் சொன்னபிறகு தான் எனக்கும் தெரியும். கலீல் ஹிப்ரன் என்று இனிமேல் யார் கேட்டாலும் சொல்லி விடுவேன்.
தகவலுக்கு நன்றி வாசன். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. ஏதோ தோன்றியது.
ReplyDelete/ரிஷபன்
ReplyDeleteநீங்கள் சொன்னபிறகு தான் எனக்கும் தெரியும். கலீல் ஹிப்ரன் என்று இனிமேல் யார் கேட்டாலும் சொல்லி விடுவேன்./
கலீல் ஹிப்ரனின் சில பக்கங்களை புரட்டிய போதுதான், இந்த கருத்து திருட்டு தெரிந்தது.
அமெரிக்கர்கள் தான், தானிருக்கும் "நாட்டையே பூர்வீககுடிகளிடமிருந்து திருடியவர்கள்" தானே!
G.M Balasubramaniam
ReplyDeleteதகவலுக்கு நன்றி வாசன். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. ஏதோ தோன்றியது./
தங்களின் பின்னோட்டம் எனக்கு ஒரு துலாக்கோல்.
'சமன்செய்து சீர்தூக்கும் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி'