மத்தியதர மக்கள், நாட்டிற்கு ஒழுங்காய் வரி செலுத்தும், சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து 'தான் உண்டு, தன் வேலையுண்டு' எனத் அடங்கி தன் வழியே புலம்பிக் கொண்டு வாழும், இந்த நாட்டின் முதுகெழும்பு இந்த பிரிவினர்தான் என்பதில் அதிக சந்தேகம் இருக்காது, சரியா?
இவர்கள் இப்படி "தன் வழி, தனி வழி" என சமுதாயத்தின் மீதான அவதானிப்பு, அக்கறை, பிரச்சனை மற்றும் தீர்வுகளை முன்னெடுக்காததால் தான் நாட்டின் எல்லா துறையிலும் அதன் தரம் தாழ்ந்து வருகிறது!!
வரி, விலைவாசி, அசுத்தம், சத்தம்,அரசியல், லஞ்சம் என எல்லாத் துன்பங்களையும் சுமக்கும் நம் மீது அந்த பழியையும் சுமத்துகிறார்களே? மத்தியதர மக்கள் என்றால், வலைபதிவாளர்களுக்கு கூட நக்கல் தானா? சற்று சிந்திப்போம்.
வரி, விலைவாசி, அசுத்தம், சத்தம்,அரசியல், லஞ்சம் என எல்லாத் துன்பங்களையும் சுமக்கும் நம் மீது அந்த பழியையும் சுமத்துகிறார்களே? மத்தியதர மக்கள் என்றால், வலைபதிவாளர்களுக்கு கூட நக்கல் தானா? சற்று சிந்திப்போம்.
நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம், நமக்கு என்ன தரவேண்டும் என்பதை அடித்தட்டு மக்கள் இலவசம் என வாங்கிக் கொள்கிறார்கள்.(இலவச வீடு, மாடு ஆடு, உணவு, அரிசி, அடுப்பு, பேன், மருத்தவ காப்பீடு, சேலை வேஷ்டி போன்றவை).
உயர்தர வர்க்கம் புதுத் தொழில் தொடங்க, சலுகை, ஊக்குவிப்பு, வரிக் குறைப்பு, ஏய்ப்பு, தள்ளுபடி, வங்கிகளின் பணமுதலீட்டு சலுகை, பெரும் அரசியல் தொடர்பு என பல சலுகைகளை, வாய்ப்பு வசதிகளை பெற்றுக் கொள்கிறார்கள். (அம்பானி, டாடா, கலாநிதி, சசிகலா, ராமஜெயம், கிங் கெமிக்கல்ஸ், வேதாந்தா, ரெட்டி சகோதர்கள், கோயங்கா, அப்பல்லோ ரெட்டி இப்படி எத்தனையோ) குறிப்பாய் சொல்வதானால், ஆட்சியாளர்களை ஆட்டுவிப்பவர்களே இவர்கள் தான்.

ஆனால் இந்தப் பாவப்பட்ட மத்திய வர்க்கத்தினர் மட்டும் தனக்கு நியாமாய் கிடைக்க வேண்டிய குடிநீர், காற்று, கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, எதிர் காலத் திட்டம் என காரட்டுக்கு பின் ஓடும் குதிரையாய் (Upper Middle Class) அல்லது கழுதையாய் (Lower Middle Class) மூச்சிழைக்க கடைசிக் காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அரசாங்கம் தர வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், கல்வி, மருத்துவம் போன்றவையாவது இலவசமாய் கிடைக்கிறதா?
குடிநீர்: நாம் கடைகளிலிருந்து கேன் வாட்டர் வாங்கிவிடுகிறோம் அல்லது ஹேமா மாலினி சொல்லும் ஆர்வோ வாட்டர் பூரிஃபையர் வாங்கி விடுகிறோம். கார்பரேஷன் குழாய்களில் நல்ல தண்ணீர் வருகிறதா என்பதே நமக்குத் தெரியாது,
கல்வி: அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரிவர இல்லை, வகுப்பறைகளில் மாணவர்கள் சாராயம் அருந்துகிறார்கள், சில பள்ளிகளில் மாணவர்களே இல்லை ஆகவே கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வணிக வளாகமாக்கி கோக்கும், சிகரெட்டும், மதுபானங்களும் விற்குமிடமாக்கலாம் என்கிறது கார்பரேஷன்.நம் பிள்ளைகள் ஆக்ஸ்போர்டு நர்சரியிலோ, பத்மஷேசத்திரிலோ, லையோலாவிலோ, எஸ்எஸ்எனிலோ படித்துக் கொண்டிருப்பதால் இந்த மாதிரி பள்ளிகள் பக்கம் நம் பார்வை கூட போவதில்லை. பின் எப்படி அந்த பள்ளிகளின் தரம் பற்றி, அந்த குழந்தைகள், ஆசிரியகள் பற்றி தெரியும்.
மருத்துவம்: சிறு தலைவலி, காய்ச்சல் தொடங்கி, குழந்தை பேறு, அவசரசிகிச்சை, விபத்து, இதயமாற்றுவரை நம் தரத்திற்கு ஏற்ற பிரைவேட் நர்சிங்ஹோம் / ஹாஸ்பிடல் தான். (அப்போலோவில் சேர்த்து ஒரு வாரம் ஏசி ரூம்ல வைச்சிப் பார்த்தோம், என்னென்னவோ டெஸ்ட் எடுந்தாங்க,.. ச்சு. கடைசில ஒண்ணும் ஆகலை, அஞ்சு லட்சத்த அழுதுட்டு.. பாடியக் கொண்டந்தோம்..) அரசாங்க மருத்துமணைகள் பெரிய கட்டிடங்களில், முக்கிய இடங்களில்.பாவம் கேட்பாரின்றி அழுக்குக் கூடாரமாய் கிடக்கிறது. அங்குள்ள மருத்துவர்கள் வெளியே தனியாய் சுத்தமான சுகாதரமான கிளினிக்யை சந்துகளில் நடத்தி வருகிறார்கள்.
நாம் தண்ணீரை வெளியே வாங்காவிடில், அரசை சுத்திகரித்த தண்ணிர் தரவேண்டுமென வற்புறுத்தி வாங்கி இருப்போம்.
தனியார் பள்ளிக்கு அனுப்பாமல் அரசு பள்ளிகளுக்கு நம் பிள்ளைகள் போயிருந்தால். கல்வித்துறைக்கு கடிதங்கள் பறந்திருக்கும். மாற்றம் வந்திருக்கும்.
அரசு மருத்துவமனைக்கு நாம் சிகிச்சைக்கு போயிருந்தால், வராத மருத்தவர்களையும், இல்லாத மருந்துகளையும், வசதிகளையும் பற்றி லட்டர் டு தி எடிட்டருக்கும், மருத்துவ கழகத்திற்கும் கடிதங்கள் விரைந்திருக்கும். அலையேன வரும் குறைகளை தாங்காது அரசு அதன் அலுவல்களை செம்மைப் படுத்தி ஒழுங்காய் தர வேன்டியதை தந்திருக்கும்.
"விழிப்பற்ற மக்களால் ஜனநாயகத்தின் சுகத்தை அனுபவிக்க இயலாது"

I am a college student.doing MBA.Its really pains seeing these.wat should we do to uplift our country..Yesterday i saw a program in a TV channel..one gal saying that Mr.Manmohan Singh is the Chief minister of DElhi.how shall we change these types of people.they are educated but not bothered about the country.oops...only god can help.
ReplyDeleteநன்கு யோசிக்க வைக்கும் பதிவு. அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk
ReplyDeleteஆமாம்.. ஆமாம் என்று அசட்டுத்தனமாய் தலையாட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை..
ReplyDeleteஎரிதழல் வாசனுக்கு, ஒரு புறம் நம் எல்லா ஆதங்கங்களையும் கொட்டித் தீர்க்கலாம். மறுபுறம் நாம் செய்ய வேண்டியதை சிந்திக்கலாம். நாம் நமக்கென்று சில கோட்பாடுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம் தவறென்று சொல்லவில்லை. சீர்கேடுகள் நிறைந்து விட்டன. உண்மைதான். செல்வம் படைத்தவன் மேலும் பண்க்காரனாகிறான். ஏழை மேலும் ஏழையாகிறான். நடுத்தர மக்கள் முன்னேற வில்லையா.மினெரல் தண்ணீர்தான் குடிக்கிறான். தனியார் பள்ளிகளில்தான் அவன் குழந்தைகள் படிக்கிறார்கள். தனியார் மருத்துவ மனைகளில் தான் சிகிச்சை பெறுகிறார்கள்.ஆனால் தான் உபயோகிக்காத , கவலைப் படாத விஷயம் பற்றிப் புலம்புவார்கள் அரசு நியமித்த கட்டணம் ரூ. 40,000/- என்றால் கல்லூரிகள் கேட்கும் ரூ. 100,000/- என்றாலும் கொடுத்துவிட்டு அதுவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கொடுத்துவிட்டு குய்யோ முறையோ என்று அலறுவார் கள். முதலில் நம்மை நாமே திருத்திக் கொள்வோம். நமக்கென்று வரும்போது நம் குறைகள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதற்காக நடப்பதை நான் நியாயப் படுத்தவில்லை. CHARITY BEGINS AT HOME என்பார்கள். முதலில் நாம் திருந்துவோம். அக்கரை இருந்த்தனால் இவ்வளவு எழுதினேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மையான, நெஞ்சு சுடும் வார்த்தைகள். உங்கள் கடைசி வாக்கியத்தின் நியாயம் மறுக்க இயலாதது, மறக்கக் கூடாதது.
ReplyDeleteபடிப்பவர்களுக்கு இந்த கருப்பு நிறம் சோர்வை தரும்.
ReplyDeletePeople do not care. I don't see any hope. It may sound pessimistic- but it is a reality. Most of my contemporaries have just one dream in their life. U.S.A. Either through GRE/GMAT/Onsite opportunities in S/W firms. This is very much real. Most of them don't care if they have to pay a bribe of 100.
ReplyDeleteThe other day, there was a huge fight between a share-auto-wala and passenger. The difference was Rs. 10 and Rs. 7. The automan, being a friend, said- "petrol prices are out of reach, auto owner demands 600 per day, one time trip to RTO for FC- 500 bribe to get FC cleared... 10-7=3 makes all the difference in the world for us..."
And Mr. Ahluwalia feels we can survive the city with Rs. 32!
the concept of "Sovereignty"- etched on the Preamble of our Constitution by our Founding Fathers- finds itself threatened. the threat is not from people with guns who refuse to abide by the constitution. they at least know of its presence. The threat is from the ignorant mass- who fail not only the nation- by not recognizing its sovereignty, but also failing themselves as humans. For "India is in ruins" is a thought found very commonly among most people I talk to...
"என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்"???
That is indeed- the million dollar question!
Anonymous
ReplyDeleteI am a college student.doing MBA.Its really pains seeing these.wat should we do to uplift our country..Yesterday i saw a program in a TV channel..one gal saying that Mr.Manmohan Singh is the Chief minister of DElhi.how shall we change these types of people.they are educated but not bothered about the country.oops...only god can help./
அவள் சோனியவை பிரதமர் என்று சரியாய் நினைத்திருக்கலாம்.திரு மன்மோகனுடன் ஷீலா திக்ஷித், "என் சீட்டு என்ன அவ்வளவு கேவலாமான்னு" சண்டைக்கு போகாமல் இருந்தால் போதும். தான், தான் மட்டுமே என்று வாழுவதாய் தோன்றும் இளைய தலைமுறையின் ஊழலுக்கு எதிரான அண்ணாவின் இயக்கத்திற்கு அளித்த ஆதரவு ஆச்சரமூட்டுகிறது, நாட்டை ஏமாற்றுபவர், ஏமாறும் காலம் மிக அருகில்.
/வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteநன்கு யோசிக்க வைக்கும் பதிவு. அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்./
மிக்க நன்றி வைகோ சார். பின்னோட்டமிட இயலாமல் சில டெக்னிகல் பிரச்னை பதிவேற்றத்தில் இருந்தது. காலதாமத்திற்கு அதுவே முக்கிய காரணம்.
//ரிஷபன்
ReplyDeleteஆமாம்.. ஆமாம் என்று அசட்டுத்தனமாய் தலையாட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை..//
நீங்களுமா ரிஷபன்!! உங்களின் ஓரிரு கூரிய எழுத்துக்களே இதை புரட்டும் நெம்புகோலாகிவிடாதா?