Saturday, September 24, 2011

'2ஜி' ஒரு "மஹா பாதகர்கள்" காவியம்

த‌யாநிதி மாற‌ன் அவர்க‌ள் தொட‌ங்கிய‌ 2ஜி பண்ப‌லை விவ‌கார‌ம் இது. டாடாவுட‌னான‌ இர‌சாய‌ன‌ம் ஒத்துப் போகாத‌‌ குழ‌ப்ப‌ நேர‌த்தில், ம‌துரை தின‌க‌ர‌ன் எரிப்பில் கைமாறி தொலை தொட‌ர்புத்துறை ராஜாவிட‌ம் சிக்கிய‌து. குள‌றுப‌டிக‌ள் ந‌ட‌ப்ப‌து அறிந்தே "யார் யார் த‌லையீடு" (எந்த புற்றில் எந்த‌ பாம்போ) இருக்கிற‌தோ எனப் பிரத‌ம‌ர் வாழா விருந்திருக்கிறார். "ராஜா த‌வ‌றே செய்ய‌வில்லை எனக்கூறுவ‌தால் த‌வ‌று ந‌ட‌ந்திருக்காது" என்கிறார். சித‌ம்ப‌ரமோ க‌ளவு போன‌பின் க‌த‌வை அவ‌ச‌ர‌, அவ‌ச‌ர‌மாய் மூடுவ‌தில் குறியாய் இருக்கிறார்.

ஊழ‌ல் க‌சிவு ஊட‌க‌த்தை எட்ட‌, ம‌க்க‌ளின் ஆர்வ‌ம் திரும்புகிற‌து. மத்திய‌ அரசோ விசார‌ணைக்குழுவின் உச்ச‌ ப‌த‌வியை (CVC) தொலைதொட‌ர்புத் துறை செய‌ல‌ராய் இருந்த, அப்போதே சிபிஐ விசாரணைக‌ளை எதிர்த்த‌ P.J. தாமஜுக்கு அளித்து பூசி மொழுக‌ப் பார்க்கிற‌து.

ஆனால், சிஏஜி (CAG)  எல்லோரையும் அதிர்ச்சி அடையும் வித‌மாய் ஊழ‌லால் நாட்டுக்கு இழ‌ப்பு 1.76 லட்ச‌ம் கோடி என்ற‌தும், அத‌ன் தாக்க‌த்தால், அடித்த‌ர‌ ம‌க்க‌ள் முத‌ல், உச்ச‌நீதி ம‌ன்ற‌ம் வ‌ரை அதிர்ந்த‌னர். (அது வ‌ரை 3000 ஆயிர‌ம் கோடி என்று தான் ஊட‌க‌ம் சொல்லி வ‌ந்த‌து) உச்சநீதிப‌தியாய் மே 2010ல் ப‌தியேற்ற‌ க‌ன‌ம் க‌பாடியாவும், இத‌னை (2ஜி வ‌ழ‌க்கை) விசாரிக்க‌ நீதிப‌திக‌ள் க‌ன‌ம் சிங்வீயும், க‌ங்குலியும் அமைந்த‌து, இந்த‌வ‌ழக்கின் ஓட்ட‌த்தை சீர‌மைத்த‌து. பிர‌சாந்த் பூஷன் ம‌ற்றும் சு,சாமி போன்ற‌வ‌ர்க‌ளின் பொது ந‌ல‌ வ‌ழக்குக‌ளும் இத‌ற்கு மேலும் வ‌லுவூட்டி புதிய‌ கோண‌ங்க‌ளையும் காட்சிப் ப‌டுத்திய‌து.  இதற்கிடையில் க‌சிந்த‌ "தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ சில தொலைபேசி ச‌ம்பாஷணைக‌ள்" நீரா ராடியா ப‌திவு வ‌ழியாய் ப‌ல புதிய‌ ம‌னிதர்க‌ளையும் வ‌ழிமுறைக‌ளையும் வெளிச்ச‌மிட்டு, குற்ற‌த்தை அடுத்த‌ நிலைக்கு உய‌ர்த்திய‌து. ம‌க்க‌ளின் ஆர்வ‌மும் கூடிய‌து.
2ஜி ஒரு மஹாபாரதம் போன்ற "மஹா பாதகர்கள்" காவியம். இதன் சூத்ரதாரி குந்தியைப் போன்ற சோனியா அம்மையார்தான். பெற்ற பிள்ளைகளின் சுக வாழ்க்கைகாக, கண்ணனின் துணை கொண்டு நாட்டையும் மக்களையும் அழித்து குருஷேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவை காக்க வேண்டி தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரி பிரதானிகள்,  நாட்டையும், மக்களையும் சுரண்டி, கொள்ளையடித்து அந்நிய மண்ணில் தன் சொந்த தலைமுறைகளுக்காக சேர்த்து தேசத்தைத் திவாலாக்கி விட்டார்கள். க‌பில் சிப‌ல் முழு பூச‌ணியை 'ஜீரோ' இழப்பு என இழுக்கிறார்.  பிர‌ணாப் முக‌ர்ஷியின் அலுவ‌ல‌க‌ அறை வேவு பார்க்க‌ப்பட்ட‌ தட‌ய‌ங்க‌ள் தெரிகிற‌து. ம‌ந்திரிக‌ளுக்குள் ஒற்றுமையின்மையும், நம்பிக்கை ப‌ற்ற‌க்குறையும் உல‌வுவ‌து க‌ண்கூடு. அர‌சு செய‌லிழ‌ந்து கொள்ளை, வ‌ழ‌க்குக‌ள், என்ற வ‌லையில் சிக்கி தீர்வின்றி திணறுகிற‌து.

சிபிஐ, உள்துறை அமைச்ச‌க‌த்தின் அடியாட்க‌ளாய் இருக்கிற‌து. குவாட்ரோச்சியை காப்பாற்றிய‌வ‌ர்கள், காங்கிரஸுக்கு எதிரானவர்களை பொய் வலையில் சிக்க வைப்பார்கள். வ‌ழ‌க்கு வ‌ரும் முன்பே, உள்துறை அமைச்ச‌ர் (சித‌ம்ப‌ர‌ம்) த‌வ‌று இழைக்க‌வில்லை (அப்ப‌ன் குதிருக்குள் இல்லை) என்கிற‌து.

 ஒரு ஆங்கில தொலைக்காட்சி நேர்காண‌லில் நிதி அமைச்ச‌ராய் த‌ன‌து சாத‌ணையாக, 2008ன் உல‌க‌ப் பொருளாத‌ர‌ வீழ்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பிய‌ வ‌ங்கிக‌ள் ப‌ல மூட‌ப்ப‌ட்ட‌ போது, இந்தியாவில் ஒரு வ‌ங்கி கூட‌ நஷ்ட‌மாகி மூட‌ப்ப‌ட‌வில்லை என்றார். இது ம‌த்திய‌த‌ர‌ ம‌க்க‌ளின் வ‌ங்கி சேமிப்பும், க‌ம்ப‌னிக‌ள் வ‌சூலித்து கிட‌ப்பில் கிட‌க்கும் பிராவிட‌ண்ட் நிதியும், எல்ஐசி போன்ற‌வ‌ற்றின் வைப்பு நிதிக‌ளும் தான் இந்திய‌ நிதி நிலை காப்பாற்றிய‌து என்ப‌து ப‌ள்ளிக்கூட‌த்துக்கே போகாத‌ என் தாத்தா சொன்ன‌து. ஆனால் இந்த‌ ஹாவ‌ர்ட் எம்பிஏ நான் தான் தூக்கி நிறுத்தினேன் என்கிறார்.

 சித‌ம்ப‌ர‌த்தின் அப்ப‌ழுக்க‌ற்ற‌ வெள்ளை உடைக‌ளுக்கும், வியாப‌ர‌ புன்ன‌கைக்கும் பின்னே, அவ‌ரின் நிர்வாண‌ முக‌ம் சிவ‌க‌ங்கை தேர்த‌ல் வெற்றி, மாவோஸ்டுக்க‌ள் எதிர்க்கும் வேத‌ந்தாவின் முந்நாள் நிர்வாகி,  நாட்டை மின்சார‌ ச‌க்தி என்ற‌‌ பெய‌ரில் கொள்ளைய‌டித்த‌ 'என்ரான்' குழும‌த்திற்கு ச‌ட்ட‌ அலோச‌க‌ர் போன்ற‌ அவ‌ரின் முர‌ணான வேட‌ங்க‌ளை  அர‌சிய‌ல் விவ‌ர‌ம் அறிந்த‌வ‌ர்க‌ள் அறிவ‌ர், என்ப‌தை அவ‌ரும் அறிவார்.

மவோஸ்டு பிர‌ச்னை தீவிர‌மாய் இருந்த‌ நேர‌த்தில் ச‌மாதான ஒப்ப‌த்தந்திற்கு அவர்க‌ளை சுவாமி அக்னிவேஷிட‌ம்  அழைத்து வ‌ரச் சொல்லிவிட்டு, கூட்ட‌த்திற்கு வ‌ந்த‌ ஆஸாத் ம‌ற்றும் ப‌த்திரிக்கையாள‌ர் பாண்டே மீதான‌ என்க‌வுண்ட‌ர் சித‌ம்ப‌ர‌த்தின் க‌ண்ணிய‌த்திற்கு ஒரு வாழும் சாட்சி. வீக்கிலீக்கில் இந்திய‌ர்க‌ளின் அந்நிய‌வ‌ங்கி முத‌லீட்டின் முத‌ல் ப‌ட்டிய‌லில் சாட்சாத் சித‌ம்ப‌ர‌த்தின் பெய‌ரும், ராஜீவ்,ல‌ல்லு, ச‌ர‌த்ப‌வ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இட‌ம் பெற்றிருக்கிற‌து.

இவ‌ரின் வா‌ரிசு ம‌க‌ன் கார்த்திக்கும். க‌ருணாநிதியின் க‌லைவாரிசு க‌னிமொழியும் இண‌ந்து "க‌ருத்து" என்ற‌ வ‌லைய‌த‌ள‌த்தை, த‌மிழ்மைய‌ம் வ‌ருவ‌த‌ற்கு முன்பு வ‌ரை ந‌ட‌த்தி வ‌ந்த‌ன‌ர். விக்கி லீக், வோட்டுக்கு ப‌ண‌ம் வ‌ழ‌ங்கிய‌ வ‌கையில் இவ‌ர‌து குழ‌ந்தையும், க‌ருணாநிதியின் ம‌துரை மைந்த‌னும் ஒரே த‌ராசில் இருக்கிறார்க‌ள்.  


இவ‌ர் அர‌சியல் அறிமுக‌ம் ஒரு வ‌ரச‌ட்ணையாய் வ‌ந்த‌து தான். திரும‌தி செளந்திர‌ கைலாச‌ம் (உச்சநீதி ம‌ன்ற‌ நீதிப‌தி கைலாச‌ம் துணைவியார்) த‌னது ம‌க‌ள் வ‌க்கீல் ந‌ளினியை இவ‌ர் ம‌ண‌ம் செய்த‌தால், தில்லியில் இவ‌ரது அர‌சிய‌ல் செல்வாக்கு மூல‌ம்  இந்திராவிட‌ம் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டார் என்ப‌து  ப‌ல‌ருக்குத் தெரியாது.
  
இந்த‌ ந‌வீனயுக‌த்தில் கொள்ளைகார‌ர்க‌ள் யாரும் லுங்கி க‌ட்டிக் கொண்டு, த‌டித்த‌ தாடி மீசையோடு, க‌ல‌ர் ப‌னிய‌ன், பெல்ட்ல‌ பிச்சுவா க‌த்தியின்னு, சினிமால, கார்டூன்ல‌ காட்டுற‌ மாதிரி நிஜ‌த்தில் வ‌ருவ‌தில்லை. இவ‌ர்க‌ள், தின‌மும் மழித்த, வெண்ணெய் பூசிய‌, புன்ன‌கை வ‌ழியும் முக‌மும், தும்பைபூ வேஷ்டியும் (பைஷாமா குருதா) ச‌ட்டையுமாய், மினுக்கும் கால‌ணியும், கைக‌ளில் வ‌ழுக்கும் க‌ண‌னியுமாய் தான் வ‌ல‌ம் வ‌ருகிறார்க‌ள். இந்தக் கொள்ளைய‌ர்க‌ள், அந்த‌ கொள்ளைய‌ர்க‌ளைவிட ப‌ல ம‌ட‌ங்கு அபாய‌மான‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் ம‌ண்புழுக்க‌ள் போல‌, இவ‌ர்க‌ளோ விஷ‌ப் பாம்புக‌ள்.
                                        
சதுர‌ங்க‌ம், நீதிம‌ன்ற‌ம், விசார‌ணை க‌மிஷ‌ன், ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், போர், க‌ல‌வ‌ர‌ம் என எதிலும் முத‌லில் ப‌லியாவ‌து எப்போதும் அப்பாவி மக்க‌ள் (PAWN) தான். இந்த‌ வ‌ழக்கும், வ‌ழ‌க்க‌ம் போலவே முடிவற்ற‌ அடியைத் தேடி முடியுமா? விதி வில‌க்காய், உண்மைக் குற்றவாளிக‌ளுக்கு வில‌ங்கிடுமா? ம‌க்க‌ளின் விழிப்பில் இருக்கிற‌து வ‌ழக்கின் விதி.

4 comments:

  1. இந்த‌ ந‌வீனயுக‌த்தில் கொள்ளைகார‌ர்க‌ள் யாரும் லுங்கி க‌ட்டிக் கொண்டு, த‌டித்த‌ தாடி மீசையோடு, க‌ல‌ர் ப‌னிய‌ன், பெல்ட்ல‌ பிச்சுவா க‌த்தியின்னு, சினிமால, கார்டூன்ல‌ காட்டுற‌ மாதிரி நிஜ‌த்தில் வ‌ருவ‌தில்லை. இவ‌ர்க‌ள், தின‌மும் மழித்த, வெண்ணெய் பூசிய‌, புன்ன‌கை வ‌ழியும் முக‌மும், தும்பைபூ வேஷ்டியும் (பைஷாமா குருதா) ச‌ட்டையுமாய், மினுக்கும் கால‌ணியும், கைக‌ளில் வ‌ழுக்கும் க‌ண‌னியுமாய் தான் வ‌ல‌ம் வ‌ருகிறார்க‌ள். இந்தக் கொள்ளைய‌ர்க‌ள், அந்த‌ கொள்ளைய‌ர்க‌ளைவிட ப‌ல ம‌ட‌ங்கு அபாய‌மான‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் ம‌ண்புழுக்க‌ள் போல‌, இவ‌ர்க‌ளோ விஷ‌ப் பாம்புக‌ள்.

    இதை விட துல்லியமாய் சொல்லி விட முடியாது..
    நாகரீகப் போர்வையில் அநாகரீக மனிதர்கள் ஆட்சி செய்வதுதான் இன்றைய கலாச்சாரம்.

    ReplyDelete
  2. what you have mentioned here about chidambaram, reminded me of a shlok that my dad quoted from "neethi shaastra":

    "mukham padmadalaakaaram
    vachas chandana sheethalam
    hruth kathree samam
    chaa adhi vinayo dhoordha lakshanam"

    Lotus faced, speech as cool as sandal paste, but heart- beguiling like scissors; extreme submissive nature- these are the qualities of wicked people... - goes the shloka

    i have watched this play by Cho Ramaswamy- "nermai urangum neram". he places an argument that educated people must come to politics. i used to think of it as a very logical argument. but now- our parliament is filled with IITs, Harvards and Oxfords... The argument makes no sense any more!

    India Against corruption movement seemed like a ray of hope for many. like all things, the cause is lost to a committee of bureaucrats. is there still a hope- i do not know. but i read recently, that Lokpal is jinxed and that whenever it was raised, the ruling party crashed badly. will the jinx work this time? only time will tell...

    ReplyDelete
  3. மாத‌ங்கி எழுதிய‌தில் கொஞ்ச‌ம்.
    /Lotus faced, speech as cool as sandal paste, but heart- beguiling like scissors; extreme submissive nature- these are the qualities of wicked people... - goes the shloka

    i have watched this play by Cho Ramaswamy- "nermai urangum neram". he places an argument that educated people must come to politics. i used to think of it as a very logical argument. but now- our parliament is filled with IITs, Harvards and Oxfords... The argument makes no sense any more/

    புதிய‌ கோண‌ங்கி அப்போதே இவ‌ர்க‌ளின் செய‌ல‌றிந்து சாப‌மிட்டு விட்டான் திரும‌தி மாத‌ங்கி.
    `ப‌டிச்ச‌வ‌ன் சூதும் பாவ‌மும் ப‌ண்ணினால்,
    போவான்,போவான், ஐயோவென்று போவான்!(திகாருக்கு??)

    ப‌தில் எழுத‌ தாம‌த‌மான‌திற்கு, சிஸ்ட‌த்தில் சில‌ இடைஞ்ச‌ல்க‌ள் கார‌ண‌மாகி விட்டன. அது சோம்ப‌லையும் வ‌ள‌ர்த்து விட்ட‌து. பொறுத்த‌ருள்க‌.

    ReplyDelete
  4. ரிஷ‌ப‌ன் சொன்ன‌து,
    /இதை விட துல்லியமாய் சொல்லி விட முடியாது..
    நாகரீகப் போர்வையில் அநாகரீக மனிதர்கள் ஆட்சி செய்வதுதான் இன்றைய கலாச்சாரம்./

    அன்பு ரிஷ்ப‌ன், நெற்றி பொட்டுக்கார‌னின் நெற்றிய‌டி வ‌ரிக‌ள் இவ‌ர‌களுக்கான‌து தானோ?
    "மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெறிதென் றெண்ணும்
    ஈன‌ர்க் குல‌க‌ந்த‌னில் ... இருக்க‌ நிலைமை யுண்டோ?
    ........
    `நாட்டில் அவ‌ம‌திப்பும் நாணின்றி இழி செல்வ‌த்
    தேட்டில் விருப்ப‌ங் கொண்டே....சிறுமைய‌டைவார‌டீ..

    ReplyDelete