இன்று மக்களுக்கு ஒன்று மட்டும் நன்கு தெளிவாய் புரிந்து விட்டது.
குளறுபடிகளின் குத்தகைகாரர்களான காங்கிரஸின் ஒரே நோக்கம், சுயநலம், சுயலாபம் மட்டுமே. நாட்டு நலனை, வளத்தை, மேன்மையை, வலிமையை சிதைக்கும் இந்த லஞ்சத்தை ஆளும் வர்கத்திடமிருந்து பறித்து அழிக்கும் அண்ணா ஹசாரேவின் லோக் பால் மசோதா இவ்வளவு மகாத்தான ஆதரவை மக்களிடம் பெறும் என அரசியல்வாதிகள் எதிர்பார்க்கவில்லை.
பாஜக 'ஆகா! வடை போச்சே' எனக் குமு(ழ)றும் சத்தம் மெதுவாய் கேட்கிறது. எதிர்கட்சிகள் இதை முன்னெடுத்திருந்தால், மக்களின் ஆதரவு இதில் சரி பாதி கூட இருக்காது. "உங்க ஆட்சியில என்னத்தைக் கிழிச்சிங்க" என்ற பொது ஜனத்தின் குரலுக்கு அவர்களிடமும் சரியான பதில் இருந்திருக்காது. எதையும் சகித்து பழகிய மக்கள், கொஞ்சம் கொஞ்சமாய் நாம் செய்யும் எதையும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதையில் ஊறி விட்டது ஆளும் காங்கிரஸ்.
எப்படி இவ்வளவு கருப்பு பணங்களை அரசியல்வாதிகளும், அவர்களது ஆசி பெற்ற ஹாசன் அலி, குவாட்ரோச்சி போன்றவர்கள் ஆயுத கமிஷன்களை மற்றும், ஊழல் பணங்களையும் வெளிநாட்டு வங்கிகளில் சேமித்திருப்பதை ஒருவித சலனமும் இல்லாமல் இருக்க எப்படி மக்கள் பழகினார்கள்? பழக்கப்பட்டார்கள் என்பதே நிஜம். எப்படி?
இதை விளக்க ஒரு சீன கதை.
சீனர்கள் எதையும் உயிருடன் பிடித்து சமைத்து சாப்பிடுபவர்கள். அதன் சுவையும் சக்தியும் அதிகம் என நம்புபவர்கள். மூடாத சிறிய பாத்திரத்தில் தவளைகறி சமைக்க அவர்கள் செய்யும் தந்திரம், தவளையை பிடித்து பாத்திரத்தின் தண்ணீரில் விட்டுவிட்டு, அது அதற்கு பழகிய பின் பாத்திரத்தை மிக குறைந்த இளஞ்சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் சூடாக்குவர். தண்ணீரின் குளிர்ச்சி சிறுகச் சிறுக குறைந்து அறையின் வெப்பநிலைக்கு வரும் போதும் தவளை அந்த மாற்றத்தை அறியாது. பின் அது தண்ணீரின் வெப்பநிலைக்கு தொடர்ச்சியாக 10, 11, 12, 13, 14 டிகிரி என ஏற,ஏற தவளை அதனுடன் ஒத்து போகத் தொடங்கி, நீரின் சூட்டை தவளை உணரும் போது குதித்து தப்பிக்க அதனிடம் சக்தி இல்லை. 100 டிகிரி கொதிநிலையில் உயிர்த்தவளை, கறித்தவளையாகி இருக்கும். பிடித்தவுடனேயே 20 டிகிரி வெப்பத்தண்ணீரில் போட்டிருந்தால் உடனேயே தவ்வித் தாவிக் குதித்தோடியிருக்கும்.
அது போல நேருகாலத்தில் தொடங்கிய ஜீப் ஊழல் 80 லட்சத்தில் தொடங்கி, இந்திரா காலத்தில் பிரிந்தின் வாலா, அம்பானி, கோயல்களை வளர்த்து நகர்வாலாவில் சிக்கி, ராஜீவ் போபர்ஸில் புதைந்து,ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்படிக்கையில் சிதைந்து, நரசிம்மராவின் உலகமயமாக்களில் மயங்கி, சோனியாவின் எண்ணற்ற "எதிலும் ஊழல்"களையும் சகித்துக் கொள்ள சமைக்கப் பட்டவர்களாய் அனைத்து இந்திய மக்களும் ஆக்கப் பட்டுள்ளோம்.
நமக்கு சேவை செய்ய, நாம் தேர்ந்தெடுத்த இவர்கள், நமக்கே எஜமானர்கள் ஆகி நாட்டையே அயோக்கியர்களுக்கு விலைபேசி விற்று பணத்தை சுவிஸ் வங்கியில் தங்களது தலைமுறைகளுக்காக சேமித்து வைக்கிறார்கள். நம் தலை முறைக்கோ சொந்தமாய் வீடு என்ன, சொந்த நாடே இருக்காது போலும். நாடிருந்தாலும் அதில் கனிம வளம் இருக்காது, நீர் இருக்காது, விளை நிலம் இருக்காது. நல்ல மண் இருக்காது, மரம் இருக்காது, சுவாசிக்க சுத்தமான காற்று இருக்காது.
வானோங்கிய அமெரிக்க அணு உலைகள், வேதந்தா, அள்ளி முடித்த பின்னான அதலபாதள பள்ளங்கள், ரெட்டிகள் வெட்டி முடித்த பின்பான பாழும் கேணிகள், பாஸ்கோ விட்டுப் போன துருத் துணுக்குகள், அணுமிச்சங்கள், ஆலைக்கழிவுகள் மிதக்கும் நாறும் நதிகள், கட்டடங்கள், கட்டாந்தரைகள், காலியான கேணிகள் மட்டுமே மிஞ்சும்.
இந்த நிலைக்கு நாம் தள்ளப்படக் காரணம், அறம் பிழைத்த ஆட்சியாளர்கள் தான். ஆகவே "சட்டத்தின் முன் அனைவரும் சமம்", என்கிற மக்களாட்சி கோட்பாட்டின் படி பிரதமரும், நீதிபதிகளும், முதன் மந்திரிகளும் (தமிழக மக்கள் முழுமையாய் ஒத்துக் கொள்வோம்) அண்ணா ஹசாரே குழுவினரின் லோக் பால் மசோதாவை சட்டமாக்கி இந்தியத் திருநாட்டை இவர்களின் தி(இ)ருட்டில் இருந்து காத்து, ஒளிறச் செய்து வரும் தலைமுறை வளமாய் வாழ அனைவரும் அண்ணாவின் முயற்சியை முன்னேடுப்போம். குடும்ப வாரிசு முறையை (மன்னர் ஆட்சி) அழித்தொழிப்போம்.
வாழ்க வளமான இந்தியா. "அண்ணா இந்திய"னாய் இருப்பதில் பெருமை அடைவோம்.


இந்த நிலைக்கு நாம் தள்ளப்படக் காரணம், அறம் பிழைத்த ஆட்சியாளர்கள் தான்..
ReplyDeleteஇந்த நிலை மாறும் என்கிற நம்பிக்கை மீண்டும் துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.
So many ironies since the past few days... the name "Ramleela maidaan"! Was that coincidence- I wonder! Another one was- Lalu Yadav talking about corruption! "Doctors should research and write a book to reveal the secret behind Annaji's stamina for standing such a long hunger strike." - Lalu Yadav said, during his debate today on the Lokpal Bill in the Lok Sabha. Why Doctors? I say- the secret behind Anna's stamina is Moral strength, will and dedication towards a "Cause", with no personal axe to grind. Alas! None of these could be explained to Lalu, for he wouldn't understand the meaning of any of these...
ReplyDeleteBut now, there is this strange satisfaction that we have achieved something! And the famous cliche`- "If one man has the will- he can change the entire nation"- it rose above the 'unreality' platform and proved itself to be true! Hope this stays!
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது . எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
ReplyDeleteதவளைக் கதை வழியே சமூக நிலையை அழகாகப் பிரதிபலித்திருக்கிறீர்கள்.
ReplyDelete//ரிஷபன் said...
ReplyDeleteஇந்த நிலைக்கு நாம் தள்ளப்படக் காரணம், அறம் பிழைத்த ஆட்சியாளர்கள் தான்..
இந்த நிலை மாறும் என்கிற நம்பிக்கை மீண்டும் துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.//
அன்பு ரிஷபன், மக்களின் விழிப்'புணர்ச்சி' தான் மக்களாட்சி தழைத்தோங்க முழு காரணம்.
மக்கள் விழிக்கத் துவங்கி விட்டனர். நன்றி மக்களின் இயக்கங்களுக்கு.
//Matangi Mawley said...
ReplyDeleteSo many ironies since the past few days... the name "Ramleela maidaan"! Was that coincidence- I wonder! Another one was- Lalu Yadav talking about corruption! "Doctors should research and write a book to reveal the secret behind Annaji's stamina for standing such a long hunger strike." - Lalu Yadav said, during his debate today on the Lokpal Bill in the Lok Sabha. Why Doctors? I say- the secret behind Anna's stamina is Moral strength, will and dedication towards a "Cause", with no personal axe to grind. Alas! None of these could be explained to Lalu, for he wouldn't understand the meaning of any of these...
But now, there is this strange satisfaction that we have achieved something! And the famous cliche`- "If one man has the will- he can change the entire nation"- it rose above the 'unreality' platform and proved itself to be true! Hope this stays!//
உங்களின் பதிவில் இந்த பின்னோட்டத்தின் முற்(ழு) பகுதியையும் படித்தேன்.
பரந்த நுண்ணிய பார்வை. லாலுவும், முலயாம்சிங் யாதவும் தங்களின் முரண் தன்மையை மீண்டும் (விளம்பர)விகாரப்படுத்தி இருக்கிறார்கள். மனைவியை மீட்க ராமன், ராவணனிடம் போனான். ராமலீலா திடலுக்கு அன்னா ஜனநாயக்த்தை எனச் சிலேடை செல்லலாமா?
/G.M Balasubramaniam said...
ReplyDeleteஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது . எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்./
கண்ணன் அன்று சொன்னது, அது அர்த்தமுள்ளது என்றும் என்று, இன்று நீங்கள் அதையே கூறியதும் மேலும் அர்த்தமானது அது. நன்றி திரு பாலா சார்.
/முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteதவளைக் கதை வழியே சமூக நிலையை அழகாகப் பிரதிபலித்திருக்கிறீர்கள்./
மிக்க நன்றி தங்களின் முதல் வருகைக்கும், நுட்பமான பின்னோட்டத்திற்கும்.
தங்களின் எளிய வார்த்தைகளின் வலிமையான படைப்புக்கள் மிக அற்புதம்.
அரசியல் ’பிழை’த்தோர்க்கு அறம்
ReplyDeleteஎப்போது கூற்றூ ஆகும்?
அருமையான சமூகப் பொறுப்புணர்வுடன் வரையப் பட்ட இடுகை!
வாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
தவளை கதை வழியா முழூ பதிவையும் ரசித்தேன்....
ReplyDelete/அருமையான சமூகப் பொறுப்புணர்வுடன் வரையப் பட்ட இடுகை!
ReplyDeleteவாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்./
நீண்ட இடைவெளிக்குப் பின் தங்களின் பின்னோட்டம்.
நன்றி திரு.ஆர் ஆர் ஆர்.
/தக்குடு said...
ReplyDeleteதவளை கதை வழியா முழூ பதிவையும் ரசித்தேன்..../
அன்புத் தக்குடு, நிழலின் அருமையை, அருகாமையை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள்.
மீண்டும் தவளைப் பாய்ச்சலாய் வெயிலை நோக்கி...