Friday, August 19, 2011

ஒரு உண்ணாவிர‌த‌ம்.


                                                        
                                                         ஒரு உண்ணாவிர‌த‌ம்.
காவேரி நீர் பிர‌ச்னைக்காக‌ ப‌ல அர‌சிய‌ல் ம‌ற்றும் சினிமா பிர‌ப‌ல‌ங்க‌ளின் (நாட‌க‌)மேடை உண்ணாவிர‌த‌ங்க‌ளையும், இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ கே(போ)லி உண்ணா விர‌த‌ங்க‌ளையும், பார்த்த‌ ந‌ம் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு, எழுப‌த்து மூன்று வ‌ய‌தான மூத்த‌ காந்திய‌வாதியான திரு அன்னா ஹ‌சாரே, சென்ற‌ ஏப‌ர‌ல் முத‌ல் வார‌த்தில் டெல்லி ஜ‌ந்தர் ம‌ந்த‌ரில் அர‌சாங்க‌த்தின் ஊழ‌லை எதிர்த்து, நாற்ப‌த்தி இர‌ண்டாண்டுக‌ளாக ச‌ட்ட‌மாகாம‌ல் ந‌டைபாதையில் கிட‌க்கும் 'லோக் பால்' மசோத‌வை ஆத‌ரித்து ந‌ட‌த்திய‌ உண்ணாவிர‌த‌ம் ப‌ற்றிய‌ செய்தி ஒரு "ம‌ற்றுமொரு" செய்தியாக‌ இருந்திருக்க‌லாம்.
                                                                                                                                             
ஆனால் அது தான் இன்று சுத‌ந்திர‌ இந்திய‌நாட்டின் அறுப‌த்தைந்தாண்டு கால‌ அர‌சிய‌லையே 'மாற்றுமொரு" ச‌க்தியாக‌, புய‌லாக மாறி இன்று 'திஹாரில்' இருந்து ராம்லீலா மைதான‌த்தில் மைய‌ம் கொண்டிருக்கிற‌து. திஹாரிலிருந்து வெளியே வ‌ர‌ யார் யாரெல்லாமோ, எதை எதையோ தியாக‌ம் செய்ய‌ துடிதுடித்துக் கொண்டிருக்கும் கால‌த்தில், சிறையிலிருந்து வெளியே வ‌ர‌மாட்டேன் எனப் பிடிவாத‌மாக புதுப் போராட்ட‌ம் ந‌ட‌த்தி, அர‌சாங்க‌த்தின் க‌ப‌ட‌ முக‌ங்க‌ளை க‌ழ‌ற்றி யார் நாட்டின் மாலுமி (கேப்ட‌ன்) என உல‌க‌த்திற்கு நிருபித்ததிருக்கிறார்.

அவர் மீது  ஊழ‌ல் குற்ற‌ம் சாட்டிய‌ (இர‌ண்ட‌ரை ல‌ட்ச‌ம் பிற‌ந்த‌நாள் செல‌வு) காங்கிர‌ஸ் ஊட‌க‌ பேச்சாள‌ர்க‌ளையும், 'அர‌சிய‌ல் கோமாளி, சோனியாவின் குர‌ல், திக்' திக் விஜ‌ய் சிங், 'ஜீரோ' புக‌ழ் க‌பில் சிப‌ல், 'க‌ருப்புப‌ண‌ம் வ‌ராது' புக‌ழ் பிர‌ணாப், 'காவி ப‌ய‌ங்க‌ரம்' காட்டும் ப‌.சித‌ம்ப‌ர‌ம், 'குடிசை புகுத‌ல்' புக‌ழ் வ‌ருங்கால‌ க‌ன‌வு பிர‌த‌ம‌ர் ராகுல், 'யுஎஸ் அணுச‌க்தி' புக‌ழ், பெய‌ர‌ள‌வுப் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் ஆகியேரின் எல்லா க‌னவுக‌ளையும், கற்ப‌னைக‌ளையும் க‌லைத்து எரித்த‌து, அன்னாவின் பின் நிற்கும் ம‌க்க‌ள் வெள்ள‌ம். உள்ளே ஒரு நொடியில் கொண்டு போன தில்லி காவ‌ல்துறை, திஹாரிலிருந்து அவரை வெளியே கொண்டுவ‌ர இயல‌வில்லை. கூடிய‌ ம‌க்க‌ள் நினைத்திருந்தால். திஹார் சிறையே இருந்திருக்காது. ஆனால் உள்ளிருக்கும் ப‌ல‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை  நினைத்த‌தால் த‌ப்பிய‌து போலும் திஹார்!!   
ம‌க்க‌ள் கூட்ட‌ம் என்ற‌வுட‌ன். ந‌மக்கு ம‌னக்க‌ண் முன், ந‌டிக‌னுக்காக 1008 மொட்டை போடும் ர‌சிக‌ கும்ப‌ல், தியேட்ட‌ரில் அதிகாலை 4.30 காட்சிக்கு முண்டிய‌டித்து நிற்கும் கூட்ட‌ம், ந‌டிக‌ரின் க‌ட் அவுட்டுக‌ளுக்கு பீர், பால் அபிஷேக‌ம் ப‌ண்ணும் கும்ப‌ல் தான் தோன்றும். ஆனால், தில்லியில் கூடியிருக்கும் கூட்ட‌ம் நாட்டின் த‌லையெழுத்தை ச‌ரி செய்து வ‌லிமையான, திற‌மையான‌, நேர்மையான, உன்ன‌த‌மான‌ தேச‌மாக மாற்ற விரும்பும் கூட்ட‌ம். மும்பையில் 120 ஆண்டுகால‌ம் த‌டைய‌ற்ற பணியாற்றி வரும் தாபா வாலாக்க‌ள்(தின‌மும், 2 ல‌ட்ச‌ம் பேர்க‌ளுக்கு சாப்பாடு விநியோகிப்ப‌வ‌ர்க‌ள்) அன்னாவின் போர‌ட்ட‌த்திற்கு ஆத‌ர‌வாய் முத‌ன் முறையாய் இன்று வேலை நிறுத்த‌ம் செய்திருக்கிறார்க‌ள்.
இந்த‌ அதிகார ம‌ம‌தையேறிய‌ யுபிஏ(காங்கிர‌ஸ்) ஆட்சியின் மீதான ம‌க்க‌ளின் சின‌மும், ஆத‌ங்க‌மும் தான் அன்னாவின் பின்னால் நாட்டின் உண்மையான ம‌க்க‌ளை செல்ல‌ வைத்திருக்கிற‌து. சென்ற‌ ஏப்ர‌ல் மாத‌த்திற்கு முன் 'யாரோ'வாக‌ இருந்த‌ அன்னா, இன்று இந்திய‌வின் ஒட்டு மொத்த‌ 'ஹீரோ' ஆனாதிற்கு ஒரே காரண‌ம், இந்த‌ திருட்டு, சுய‌ந‌ல‌ தேச‌ துரோக‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் தான். 
காங்கிர‌ஸின் இந்த‌ இமால‌ய த‌வ‌றுக‌ளுக்குப் பின்பும், இத்த‌னை சொத‌ப்ப‌ல்க‌ளுக்கிடையிலும், ஹாச‌ரேவுக்கு எதிராய் சொல்லும் ஒரு காரண‌ம், மக்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பாராளும‌ன்ற‌ முறையை அவ‌ம‌தித்து, மைதானத்தில், ச‌ட்ட‌ம் இய‌ற்றுகிறார் என்ப‌தே. எங்க‌ள் பிர‌த‌ம‌ரே ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட‌வில்லை, உள்துறை ம‌ந்திரி ப‌.சித‌ம்ப‌ர‌ம் தேர்த‌லே நீதிம‌ன்ற‌த்தில் நிற்கிற‌து. அன்னா, "ஜ‌ன் லோக்பால் ம‌சோதாவை" ச‌ட்ட‌மாக்குங்க‌ள், என்றுதான் மைதான‌த்தில் கேட்கிறார். ச‌ட்ட‌மாக்க‌ அங்கே கூட‌வில்லை. ம‌க்க‌ளுக்கு தெரிந்த இந்த‌ எளிய‌ உண்மையைக் கூட‌ ஏன் ம‌றைக்கிறீர்க‌ள். இது என்ன‌ உங்க‌ளின் சிவிஸ் வ‌ங்கி க‌ணக்கு எண்ணா? என்ன‌?    
                                        

 சென்னையில், திருவான்மியூர், எல்பி சாலை, ஹைச்டிஎஃப் வ‌ங்கி கிளை அருகில் உள்ள க‌ட்டிட‌த்தில் அன்னாவின் இய‌க்க‌த்திற்கான ஆத‌ர‌வுக் கூட்ட‌ம், தொட‌ர் உண்ணாவிர‌த‌ம், அடையாள‌ ஒருநாள் உண்ணாவிர‌த‌ம், ஊர்வ‌ல‌ம் மற்றும் சிற்றுரைக‌ள் என‌ ந‌டைபெற்றுக் கொண்டிருக்கிற‌து.
நாம் ஒவ்வொருவ‌ரும் அவ‌சிய‌ம் அங்கு சென்று ந‌ம‌து ஆத‌ர‌வினை எல்லா வ‌கையிலும் ப‌ங்கேற்று அர‌சாங்க‌த்திற்கு, நாங்க‌ள் தான் உங்க‌ளின் விதியை தீர்மானிப்ப‌வ‌ர்க‌ள் என உர‌க்க‌/உறைக்க‌ சொல்வோம், வெல்வோம் வாருங்க‌ள்.

இப்போ இல்லையினா பின்ன‌ எப்போ?

14 comments:

  1. அருமையான பாய்ண்ட் பாய்ண்ட் ஆன அலசல் பதிவு.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  2. மிக அருமையான வெளிப்பாடு!

    இப்போது இல்லை என்றால் எப்போது?

    இந்தக் கேள்வி, நம் ஒவ்வொருவர் முன்னாலும் நிறையத்தரம் வந்து போயிருக்கிறது.என்ன செய்வது என்பதில் தெளிவில்லாமலேயே, இத்தனைநாள் அரசியல்வாதிகள் அழுகி அரசியல்வியாதிகளான பின்னாலும், தொடர்ந்து சகித்துக் கொள்ள முடியாமல் வெறும் புலம்பல்களோடு நின்று போன கதையாகிப் போனது.

    எல்லாவற்றிலும் அவநம்பிக்கை என்பது இப்போதிருக்கும் பலவீனம். கண்முன் தெரிகிற வெளிச்சக் கீற்றைப் பிடித்துக் கொண்டு வெளியே வர இதுவே தருணம்.

    ReplyDelete
  3. ஊழலுக்கெதிர் என்பதில் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை.உணர்வு பூர்வமாக அணுகினால் உண்மை நிலைகள் தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. நானும் இது குறித்து எழுதி வருகிறேன்.இனியும் எழுதுவேன்.மாற்றுக்கருத்துகளையும் படியுங்கள்.

    ReplyDelete
  4. இந்த‌ அதிகார ம‌ம‌தையேறிய‌ யுபிஏ(காங்கிர‌ஸ்) ஆட்சியின் மீதான ம‌க்க‌ளின் சின‌மும், ஆத‌ங்க‌மும் தான் அன்னாவின் பின்னால் நாட்டின் உண்மையான ம‌க்க‌ளை செல்ல‌ வைத்திருக்கிற‌து. சென்ற‌ ஏப்ர‌ல் மாத‌த்திற்கு முன் 'யாரோ'வாக‌ இருந்த‌ அன்னா, இன்று இந்திய‌வின் ஒட்டு மொத்த‌ 'ஹீரோ' ஆனாதிற்கு ஒரே காரண‌ம், இந்த‌ திருட்டு, சுய‌ந‌ல‌ தேச‌ துரோக‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் தான்.

    மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.. மௌனமாய். பலர் இப்போது பேசாமல் இருப்பது போல் தோன்றினாலும் வெளிப்படும்போது அதன் சக்தி தீயசக்திகளுக்கு புரிய வைத்து விடும்

    ReplyDelete
  5. (நாட‌க‌)மேடை உண்ணாவிர‌த‌ங்க‌ளையும், இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ கே(போ)லி உண்ணா விர‌த‌ங்க‌ளையும்//

    "ம‌ற்றுமொரு" 'மாற்றுமொரு"//

    வார்த்தை விளையாட்டில் தெறிக்கும் எள்ள‌லும் அற‌ச்சீற்ற‌மும் ப‌திவை க‌ன‌ப்ப‌டுத்துகிற‌து.காங்கிர‌சார் ஒவ்வொருவ‌ருக்குமான‌ அடைமொழி பிர‌மாத‌ம்!

    நாங்க‌ள் தான் உங்க‌ளின் விதியை தீர்மானிப்ப‌வ‌ர்க‌ள் என உர‌க்க‌/உறைக்க‌ சொல்வோம், வெல்வோம்

    ReplyDelete
  6. பாயிண்ட், பாயிண்டாக அலசி எழுதி இருக்குஇங்க.
    நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. /வை.கோபாலகிருஷ்ணன் said...
    அருமையான பாய்ண்ட் பாய்ண்ட் ஆன அலசல் பதிவு.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். /

    ந‌ன்றிக‌ள் ப‌ல‌ வைகோ சார்.
    த‌ங்க‌ளின் வாழ்த்துக்க‌ள் த‌ரும் ச‌க்தியே த‌னி தான்

    ReplyDelete
  8. //எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
    மிக அருமையான வெளிப்பாடு!

    இப்போது இல்லை என்றால் எப்போது?

    இந்தக் கேள்வி, நம் ஒவ்வொருவர் முன்னாலும் நிறையத்தரம் வந்து போயிருக்கிறது.என்ன செய்வது என்பதில் தெளிவில்லாமலேயே, இத்தனைநாள் அரசியல்வாதிகள் அழுகி அரசியல்வியாதிகளான பின்னாலும், தொடர்ந்து சகித்துக் கொள்ள முடியாமல் வெறும் புலம்பல்களோடு நின்று போன கதையாகிப் போனது.

    எல்லாவற்றிலும் அவநம்பிக்கை என்பது இப்போதிருக்கும் பலவீனம். கண்முன் தெரிகிற வெளிச்சக் கீற்றைப் பிடித்துக் கொண்டு வெளியே வர இதுவே தருணம்./

    இந்த‌ வெளிச்ச‌க் கீற்று ஒரு புதிய‌ விடிய‌லுக்கான / விடுத‌லைக்கான தொட‌க்க‌மாக இருக்கும் திரு எஸ் கே சார்.

    ReplyDelete
  9. / G.M Balasubramaniam said...
    ஊழலுக்கெதிர் என்பதில் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை.உணர்வு பூர்வமாக அணுகினால் உண்மை நிலைகள் தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. நானும் இது குறித்து எழுதி வருகிறேன்.இனியும் எழுதுவேன்.மாற்றுக்கருத்துகளையும் படியுங்கள்./

    உங்க‌ள் ப‌திவுக‌ளில் எண்ண‌ங்க‌ளைப் ப‌கிர்ந்திருக்கிறேன். த‌ங்க‌ள் த‌ள‌ம் ஒரு நல்ல‌ விவாத‌ மேடையாக திக‌ழ்கிற‌து. மிக்க‌ ம‌கிழ்ச்சி.

    ReplyDelete
  10. //ரிஷபன் said...
    இந்த‌ அதிகார ம‌ம‌தையேறிய‌ ..... சுய‌ந‌ல‌ தேச‌ துரோக‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் தான்.

    மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.. மௌனமாய். பலர் இப்போது பேசாமல் இருப்பது போல் தோன்றினாலும் வெளிப்படும்போது அதன் சக்தி தீயசக்திகளுக்கு புரிய வைத்து விடும்//
    ம‌க்க‌ளின் மெளன‌ம் ராம்லீலா மைதான‌த்தில் நிர‌ம்பி, தில்லியின் வீதிக‌ளில் வ‌ழிந்து அதிகார‌ மைய‌த்தை சூழ்ந்து கொண்டிருக்கிற‌து. 'தீ'ய‌ச‌க்திக‌ள் அணையும் கால‌ம் க‌னிந்து கொண்டிருக்கிற‌தா?
    ம‌வுன‌ம், கூச்ச‌ல்க‌ளை விட‌ வ‌லிமையான‌தாய் மாறிக்கொண்டிருக்கிறதா, அன்பு ரிஷப‌ன்?

    ReplyDelete
  11. /nilaamaghal said...
    (நாட‌க‌)மேடை உண்ணாவிர‌த‌ங்க‌ளையும், இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ கே(போ)லி உண்ணா விர‌த‌ங்க‌ளையும்//

    "ம‌ற்றுமொரு" 'மாற்றுமொரு"//

    வார்த்தை விளையாட்டில் தெறிக்கும் எள்ள‌லும் அற‌ச்சீற்ற‌மும் ப‌திவை க‌ன‌ப்ப‌டுத்துகிற‌து.காங்கிர‌சார் ஒவ்வொருவ‌ருக்குமான‌ அடைமொழி பிர‌மாத‌ம்!

    நாங்க‌ள் தான் உங்க‌ளின் விதியை தீர்மானிப்ப‌வ‌ர்க‌ள் என உர‌க்க‌/உறைக்க‌ சொல்வோம், வெல்வோம் /

    உங்க‌ளின் நுட்பமான‌ அவ‌தானிப்பும், 'பின்னூட்ட‌மும்', எழுதிய‌வ‌னின் எழுத்திற்கு மேலும் சிறகுக‌ளைச் சேர்க்கும் தன்மையுடைய‌து. குழ‌ந்தையின் சிறு முய‌ற்சியைக் கூட‌ முதுகில் த‌ட்டி மேலும் மேலும் மேன்மையுற‌ச் செய்யும் பாங்கு அது, என அறிந்து ம‌கிழ்ந்து அமைகிறேன். நன்றி.

    ReplyDelete
  12. Lakshmi said...
    பாயிண்ட், பாயிண்டாக அலசி எழுதி இருக்குஇங்க.
    நல்லா இருக்கு.

    த‌ங்க‌ளின் மேலான வ‌ருகைக்கும், ப‌திவை பாயிண்ட் டு பாயிண்ட் ப‌டித்து, பின்னோட்ட‌ம் இட்ட‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி திரும‌தி ல‌க்ஷ்மி மேட‌ம்.

    ReplyDelete
  13. பிடிவாத‌மாக புதுப் போராட்ட‌ம் ந‌ட‌த்தி, அர‌சாங்க‌த்தின் க‌ப‌ட‌ முக‌ங்க‌ளை க‌ழ‌ற்றி யார் நாட்டின் மாலுமி (கேப்ட‌ன்) என உல‌க‌த்திற்கு நிருபித்ததிருக்கிறார்.

    ReplyDelete
  14. வ‌ருகைக்கும், பின்னோட்ட‌ப் ப‌திவுக்கும் ந‌ன்றி திரும‌தி இராஜராஜேஸ்வரி மேட‌ம்.

    ReplyDelete