Saturday, May 21, 2011

'அம்மா பிள்ளை பாச‌ம்'


ம‌ரண த‌ண்ட‌னைக் கைதி. நிருபிக்க‌ப்ப‌ட்ட‌ குற்ற‌ங்க‌ள். க‌ளவு, திருட்டு, வ‌ழிப்ப‌றி, அடித‌டி, கொள்ளை, கொலை முயற்சி, நில‌மோச‌டி, கொலைக‌ள். (அரசிய‌ல்வாதிக‌ளுக்கான இத்த‌கு எல்லா த‌குதிக‌ள் இருந்தும், அந்த‌ள‌வு அறிவு, தெளிவு இல்லாத‌ சாம‌னிய‌ன்) க‌டைசியாய் துக்குமேடையில் கை கால்க‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ நிலையில் துக்குக்க‌யிறு முன் முகமூடி அணிவ‌த‌ற்கு த‌யாராய் இருக்கிறான். க‌ண்க‌ளில் நீர், முக‌த்தில் க‌ல‌க்க‌ம். ச‌ம்பிரதாயம், சூழ்நிலை க‌ருதி, சிறை அதிகாரிக‌ளில் ஒருவ‌ர், "ஏதாவ‌து ஆசை இருந்தால் சொல், முடிந்தால் முய‌ற்சிக்கிறேன்" என்றார். 'ஐயா, க‌டைசியா ஒரு த‌ர‌ம் என் அம்மாவை பார்க்க‌னும், செய்விங்க‌ளா?" கெஞ்சிக் கேட்டான்.

'அம்மா பிள்ளை பாச‌ம்' அப்ப‌டிப் ப‌ட்ட‌து, என நின‌த்துக் கொண்ட‌ அதிகாரி, அம்மாவை வ‌ர‌வ‌ழைத்து அவ‌னருகே மேடைக்கு அனுப்பி வைத்துவிட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் திரும்பிக் கொண்டார்கள். அழைத்த ம‌க‌னின் அருகில் சென்ற‌ தாய், புள்ளை கொள்ளைய‌டிச்சு ம‌றைச்சு வைச்சிருக்கிற‌ ர‌க‌சிய‌த்தை சொல்ல‌ப் போற‌ன்னுட்டு மிக‌ மிக‌ அருகில் யாருக்கும் கேட்காத‌ அள‌வு நெருங்கி  காதை நீட்டினாள். "ஐயோ..சாமி, காது போச்சே" அலறி க‌த்திய‌ப‌டி ஓடிவ‌ந்து விழுந்து அழுதாள். "ஏன்டா பாவி! க‌டைசி கால‌த்தில‌யும் பாவ‌த்தை சேர்த்துகிட்டே இருக்க‌, ஏன்டா இப்ப‌டிப் உங்கம்மா காதையே க‌டிச்சு துப்பிட்டியேடா?", எனக் கோப‌ப்ப‌ட்டார் மூத்த‌ சிறை அதிகாரி. தூக்குக் கைதியை க‌டைசி கால‌த்தில் அடிக்க‌ ம‌னமும், மார்க்க‌மும் இல்லாம‌ல்.
"ஐயா, நான் இந்த‌ சின்ன‌ வ‌ய‌சில‌ இவ்வ‌ள‌வு போக்கிரி, கொலைகாரான ஆகி இன்னைக்கு தூக்குல தொங்கி சாக‌ப் போறதுக்கு கார‌ணமே இந்த‌ அம்மாதான், நம்புவிங்க‌ளா!" எனக் க‌த‌றி அழுதுவிட்டு த‌ன் க‌தையைச் சொன்னான்.
"சின்ன‌ப்ப‌ய‌லா, ப‌க்க‌த்து வீட்டு மாம‌ர‌த்து கீழ‌ கிட‌ந்த‌ மாங்காயை எடுத்துட்டு வீட்டுக்கு ஓடிப் போனேன். மாங்காயைப் பாத்த‌ எங்க‌ம்மா, இன்னும் இரண்டு மூனு கிடைச்ச‌ ‌ப‌றிச்சுட்டு வாடா, ஊறுகாய் போட‌லாம் என்றார்க‌ள். நானும் திருட்டுத்த‌ன‌மாய் கொண்டு வ‌ந்தேன்.
த‌ட்டிக் கொடுத்து திற்மைசாலின்னாங்க‌.

பின்பு ஒருமுறை ப‌க்க‌த்துத் தெரு கோழி ஒன்னு சிக்குச்சு, ஈர‌த்துண்டுல‌ சுத்திக் கொண்டாந்து க‌றிக்கொழ‌ம்பு வைச்சு சாப்பிட்டோம். அம்மாவுக்கு ச‌ந்தோச‌ம். கொஞ்ச‌ நாள் க‌ழிச்சு ப‌க்க‌த்து ஊருல‌யிருந்து மேய‌ வ‌ந்த‌ ஆட்டுக் குட்டி ஒன்னை 'ஆட்டைய‌'ப் போட்டு அம்மாட்ட‌ கொடுத்த‌ப்போ ரெம்ப‌ ச‌ந்தோசத்தில‌ முத்த‌மெல்லாம் கொடுத்தாங்க‌.

ஒருநாள் அவுங்க‌ளே 'என்ன‌டா உன் கைவ‌ரிசை ஒன்னும் காணோமேன்னு' என்னை உசுப்பி விட்டாங்க‌. ராத்திரி கிடையில கிட‌ந்த‌ ஆட்டை தூக்கும் போது, நாய் கொறைக்க‌, காவ‌ல்கார‌ப் ப‌ச‌ங்க‌ளோட‌ ச‌ண்டையாகி, முத‌ முத‌லாப் போலிசு கேசாகிப் போச்சு. அப்புற‌ம் எந்த‌க் க‌ள‌வுன்னாலும் என்னைய‌க் கூப்புட்டு விசாரிக்க‌ தொட‌ங்கி, அவுங்க‌ ச‌க‌வாச‌ம், ம‌ற்ற‌ குற்ற‌வாளிங்க‌ ச‌க‌வாச‌முன்னு ஆகிப்போச்சு.

அப்புற‌ம் சில‌ திருட்டுக‌ளை கூட்டாச் செஞ்சு கிடைச்ச‌த‌ப் பிரிச்சுக் கிட்டோம். அது அப்ப‌டியே ப‌ழ‌கி, வீடு, க‌டை, பேங்குன்னு இராத்திரில திருட‌ ஆர‌ம்பிச்சு, லீவு நாட்க‌ள்ல‌ தொழிற்சாலைன்னு வ‌ள‌ர்ந்து ஒரு நாள் காவ‌ல்கார‌னை அடிச்ச‌துல‌ அவன் செத்துப் போக‌, கொலைகார‌னாவே ஆகிட்டேன். இப்ப‌டி ப‌ல ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு பிற‌கு ஒரு நாள் போலிசுல‌ மாட்டி, கேஷு, விசாரணையின் முடிஞ்சு இதோ, உங்க‌ முன்னாடி க‌டைசி நிமிஷத்தை‌ எண்ணிக்கிட்டு இருக்கேன்".
"நீங்க‌ளே சொல்லுங்க‌,  அந்த‌ மாங்காயை கொண்டு வ‌ந்த‌ அன்னைக்கு, இவுங்க, 'சீ. இந்த‌ மாதிரி அடுத்த‌ வீட்டு மாங்காய் எல்லாம் எடுக்க‌க் கூடாது. அடுத்த‌வுங்க பொருள் மேல‌ ஆசைப் ப‌ட‌க்கூடாது. வேணுமின்னா, க‌டையில‌ வாங்கிச் சாப்பிடு, அல்ல‌து நீ ஒரு மாம‌ர‌ம் வை"ன்னு சொல்லி திட்டி. திருத்தி இருந்தா நான், இப்ப‌ இப்ப‌டி ஆகியிருக்க‌ மாட்டேந்தானே ஐயா?. அன்னைக்கு, இன்னும் ரெண்டு மாங்கா கொண்டா, ஊறுகாய் போட‌லாமுன்னு அனுப்பினதால‌ தானே நான் திசை மாறி திருட‌னா ஆகிப் போனேன். அதுனால‌தான் அவுங்க‌ காதைத் க‌டிச்சேன்" எனக் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான்.

க‌தை முடிந்த‌து.

(நீங்க‌ள் வேறு யாரையே நினைத்துக் கொண்டால், ப‌திவாள‌ர் அதற்கு பொறுப்ப‌ல்ல‌.  பால்ய‌ காலத்தில்‌ நான் கேட்ட‌ கிராமிய‌க் க‌தையுட‌னான த‌ழுவ‌ல் இது.)



22 comments:

  1. தெரிந்த கதையே என்றாலும், அதை சுவைபட, மரத்தில் தொங்கும் மாங்காய்களுடன், காலத்திற்கேற்றாற்போல அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.

    நல்ல கருத்துள்ள கதை.

    யார் மிகச்சிறிய தப்போ, தவறோ, திருட்டோ செய்தாலும் உடனுக்குடன் “அம்மா” எச்சரிக்கை செய்து, புத்திமதி சொல்லி, தண்டனை கொடுத்து திருத்திப்புட்டாங்கன்னாத்தான் அம்மாவுக்கும் நல்லது, நமக்கும் நல்லது.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நீதி புரிகிறது!
    அம்மா சொல்லிக் கொடுத்தது அல்ப திருட்டு.. 2/3 மாங்காய்.. மாந்தோப்பையே கொள்ளை போட்டால்..
    அரசிய‌ல்வாதிக‌ளுக்கான இத்த‌கு எல்லா த‌குதிக‌ள் இருந்தும், அந்த‌ அறிவு, தெளிவு இல்லாத‌ சாம‌னிய‌ன்..
    நையாண்டியை வெகுவாக ரசித்தேன்.

    ReplyDelete
  3. இடித்துரைப்பது வாசனுக்குப் புதிதல்ல. ஆனால் இந்த முறை இடித்துரைத்த விதம் புதிது.

    ReplyDelete
  4. (அரசிய‌ல்வாதிக‌ளுக்கான இத்த‌கு எல்லா த‌குதிக‌ள் இருந்தும், அந்த‌ அறிவு, தெளிவு இல்லாத‌ சாம‌னிய‌ன்)//

    நல்ல கருத்து!!!
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்....

    ReplyDelete
  5. சகோ, ஒரு சில இடங்களில் கண்டிப்புக்களைத் தவிர்ப்பதால், அவை பிற்காலத்தில் எவ்வாறன விளைவுகளைத் தருகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் கதையினைத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  6. "chinna vayasileye naalu saaththu saaththi valakkaathathu thappaa pochchu"... nnu enga amma solluvaal! niraiyaa perukku ithu porunthum-nu unga kathaila kaamichchuttenga! :)

    good one!

    ReplyDelete
  7. ஆகா அருமை.
    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் ( மகன்/மகள்)
    கெடுப்பாரும் இன்றிக் கெடும்

    ReplyDelete
  8. எங்கே எரிதழல் சில நாட்களாகக் காணோமே என்றிருந்தேன்.கனல் அணையாமல் திரும்பி வந்துவிட்டீர்கள்.நல் வரவாகுக. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கேட்ட‌ க‌தையை த‌ழுவியெழுதிய‌ க‌தை வெளிப்ப‌ட்ட‌ நேர‌ம் பொறுத்து க‌ன‌ம்பெறுகிற‌து. என் சிறு வ‌ய‌தில் கிராம‌த்தில் க‌ண்ணால் பார்த்தேயிருக்கிறேன்... இப்ப‌டியான‌ அம்மாக்க‌ளையும், பிள்ளைக‌ளையும். இன்று வ‌ள‌ர்ந்த‌ பிற‌கு அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிக் கேள்விப்ப‌டுவ‌தெல்லாம் ஒன்றும் ச‌ரியாக‌ இல்லை. 'குற்ற‌வாளிக‌ள் பிற‌ப்ப‌தில்லை; உருவாக்க‌ப் ப‌டுகிறார்க‌ள்' என்ப‌து எத்த‌கு உண்மை! இவ‌ர்க‌ள் சூழ்நிலைக் கைதிக‌ள‌ல்ல‌... சூழ‌லையே ந‌ச்சாக்கும் முட்செடிக‌ள்.

    ReplyDelete
  10. /வை.கோபாலகிருஷ்ணன் said...
    தெரிந்த கதையே என்றாலும், ....

    யார் மிகச்சிறிய தப்போ, தவறோ, திருட்டோ செய்தாலும் உடனுக்குடன் “அம்மா” எச்சரிக்கை செய்து, புத்திமதி சொல்லி, தண்டனை கொடுத்து திருத்திப்புட்டாங்கன்னாத்தான் அம்மாவுக்கும் நல்லது, நமக்கும் நல்லது./


    எதிர்கால‌ம் 'அம்மா' "கை"க‌ளில் இருக்கிற‌து...

    ReplyDelete
  11. ரிஷபன் said... நீதி புரிகிறது!/
    (அத‌னால் தான் நீதிப‌திக‌ள் தீர்வுக்கு வ‌ந்திருக்கிற‌து)
    /அம்மா சொல்லிக் கொடுத்தது அல்ப திருட்டு.. 2/3 மாங்காய்.. மாந்தோப்பையே கொள்ளை போட்டால்../
    (குட்டி 176 அடி பாய்கிற‌து.)
    அரசிய‌ல்வாதிக‌ளுக்கான இத்த‌கு எல்லா த‌குதிக‌ள் இருந்தும், அந்த‌ அறிவு, தெளிவு இல்லாத‌ சாம‌னிய‌ன்..
    நையாண்டியை வெகுவாக ரசித்தேன்.
    (மிக்க‌ ம‌கிழ்ச்சி திரு ரிஷ‌ப‌ன்)

    ReplyDelete
  12. /சுந்தர்ஜி said...
    இடித்துரைப்பது வாசனுக்குப் புதிதல்ல. ஆனால் இந்த முறை இடித்துரைத்த விதம் புதிது./

    என்ன‌த்தைச் சொல்லி, எதை உரைச்சாலும், க‌ந்த‌னுக்கு...ன்னு ஒரு ப‌ழமொழி போல‌,
    நம் 'எண்ண‌த்தைச் சொல்ல‌ இந்த‌ முறை' இந்த‌ முறையைத் தேர்ந்தெடுத்தாலும், நம்மால்
    தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் புனித‌மாய் இருந்தால் ந‌ல‌ம். நன்றி சுந்த‌ர்ஜி.

    ReplyDelete
  13. /இராஜராஜேஸ்வரி said...
    நல்ல கருத்து!!!
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.... /
    உங்க‌ளின் பாராட்டு ம‌கிழ்ச்சி அளிக்கிற‌து. நன்றிக‌ள் ப‌ல‌.உங்க‌ளின் ஆன்மீக‌ ப‌ய‌ண‌மும் தேடுத‌லும் எங்கும் ப‌ட‌ர்கிற‌து (இந்தியா முத‌ல் ஆஸ்திரேலிய‌ வ‌ரை)

    ReplyDelete
  14. /நிரூபன் said...
    சகோ, ஒரு சில இடங்களில் கண்டிப்புக்களைத் தவிர்ப்பதால், அவை பிற்காலத்தில் எவ்வாறன விளைவுகளைத் தருகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் கதையினைத் தந்துள்ளீர்கள்./

    அதேதான் அன்பு நிரூப‌ன். அல்ல‌வெனில், 'வீடுக்க‌ட‌ங்கா பிள்ளையை ஊர் திருத்தும்' என்பார்க‌ள்.
    போலிஸுக்கு அட‌ங்காத‌ பிள்லைக‌ளை சிபிஐ அட‌க்க‌ வேண்டி வ‌ர‌லாம்.

    ReplyDelete
  15. /Matangi Mawley said...
    "chinna vayasileye naalu saaththu saaththi valakkaathathu thappaa pochchu"... nnu enga amma solluvaal! niraiyaa perukku ithu porunthum-nu unga kathaila kaamichchuttenga! :)
    good one!/
    நீங்க‌ள் 'ஒரு சொல்'லில் வ‌ளர்ந்த‌வ‌ர்க‌ள் என்ப‌து உங்க‌ள் எழுத்து சொல்கிற‌து.
    "நல்ல‌..... ஒரு சூடு, நல்ல‌ புள்ளைக்கு ஒரு சொல்" ப‌ழமொழி கேள்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ளா? நன்றி திரும‌தி மாத‌ங்கி.

    ReplyDelete
  16. /சிவகுமாரன் said...
    ஆகா அருமை.
    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் ( மகன்/மகள்)
    கெடுப்பாரும் இன்றிக் கெடும் /
    நன்றி ப‌ல திரு சிவ‌குமார‌ன்.
    அய்ய‌னுக்கு கோட்ட‌ம் க‌ட்டி, 133 அடியில் சிலை வைத்த‌ சிற்பி. குற‌ளுக்கு "ஓவிய‌ம்" தீட்டிய‌ க‌லைஞர், இதை ப‌டித்திருக்க‌ மாட்டாரா என்ன‌? கொடுமை என்னவெனில், ஒரு பிள்ளை ஆளும் கூட்ட‌ணியில் அமைச்ச‌ர், இன்னொரு பிள்ளை கொள்ளையில் கூட்டு எனக் குற்ற‌ம்சாட்ட‌ப்ப‌ட்ட‌ காவல் கைதியாய் திஹார் சிறையில். (ஐயோ கொல்றாங்க‌ளே!!) அத‌ற்குள் ம‌ற‌ந்து விட்ட‌தா? அவ‌ரே ம‌றதி நல்ல‌து என்பார்.

    ReplyDelete
  17. / G.M Balasubramaniam said...
    எங்கே எரிதழல் சில நாட்களாகக் காணோமே என்றிருந்தேன்.கனல் அணையாமல் திரும்பி வந்துவிட்டீர்கள்.நல் வரவாகுக. வாழ்த்துக்கள்./
    பாலா ஐயா, த‌ங்க‌ளின் வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ப‌ணிவான வ‌ண‌க்க‌ங்க‌ள். வேறு ப‌ணி நிமித்த‌ம் அதிக‌மாக ப‌திவின் ப‌திவேட்டில் வருகையை ப‌திவு / பின்னோட்ட‌ம் செய்ய‌‌ முடியாது ஆகிவிட்ட‌து.

    ReplyDelete
  18. /நிலாமகள் said...
    கேட்ட‌ க‌தையை த‌ழுவியெழுதிய‌ க‌தை வெளிப்ப‌ட்ட‌ நேர‌ம் பொறுத்து க‌ன‌ம்பெறுகிற‌து. என் சிறு வ‌ய‌தில் கிராம‌த்தில் க‌ண்ணால் பார்த்தேயிருக்கிறேன்... இப்ப‌டியான‌ அம்மாக்க‌ளையும், பிள்ளைக‌ளையும். இன்று வ‌ள‌ர்ந்த‌ பிற‌கு அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிக் கேள்விப்ப‌டுவ‌தெல்லாம் ஒன்றும் ச‌ரியாக‌ இல்லை. 'குற்ற‌வாளிக‌ள் பிற‌ப்ப‌தில்லை; உருவாக்க‌ப் ப‌டுகிறார்க‌ள்' என்ப‌து எத்த‌கு உண்மை! இவ‌ர்க‌ள் சூழ்நிலைக் கைதிக‌ள‌ல்ல‌... சூழ‌லையே ந‌ச்சாக்கும் முட்செடிக‌ள்./

    த‌ங்க‌ள‌து ப‌ர‌ந்த‌ அவதானிப்பும், துல்லிய‌மும் உங்க‌ளின் சிறு வ‌ய‌து முதலே "கூட‌வே" வ‌ளர்ந்து வ‌ந்திருக்கிற‌து. இவ‌ர்க‌ள் சூழ்நிலையை சுய‌லாப‌த்துக்காய் ந‌ச்சாக்கும் ந‌ச்சுச் செடிக‌ள். க‌ளை எடுக்கும் போது கூட மிக‌க் க‌வ‌ன‌மாய் இருக்க‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌ம்.

    ReplyDelete
  19. சின்ன வயதில் இடித்துரைத்து புத்திமதி கூறி வளர்க்க வேண்டும். புனைவோ, நிகழ்வோ... நன்றாக இருந்தது சொல்லிய விதம். :-)

    ReplyDelete
  20. என்ன வாசன் சார் ? ஆளையேக் காணோம் ?

    ReplyDelete
  21. /சிவகுமாரன் said...
    என்ன வாசன் சார் ? ஆளையேக் காணோம் ? /

    "ப‌ண்ணிப்பார், க‌ட்டிப்பார்" எனப் பெரிய‌வ‌ர்க‌ள் எச்ச‌ரித்த‌ ஒரு 'பார்'ல் ஊஞ்ச‌ல் ஆடுவ‌தால் கொஞ்ச‌ம் வ‌லைக்கு வ‌ரவியலா நிலை. மீண்டு, மீண்டும் வ‌ருவேன் சிவ‌கும‌ரன்க‌ளோடு உற‌வாட‌.

    ReplyDelete
  22. /RVS said...
    சின்ன வயதில் இடித்துரைத்து புத்திமதி கூறி வளர்க்க வேண்டும். புனைவோ, நிகழ்வோ... நன்றாக இருந்தது சொல்லிய விதம். :-)/

    சிறுவ‌ய‌தில் கேட்ட‌ க‌தையை, நேற்று இட்லியை பிச்சுப்போட்டு உப்புமா ஆக்கிய‌து‌ மாதிரி வீட்டில் அடித்து வ‌ள‌ர்க்காத‌ குழ‌ந்தையை, ஊர் அடித்து திருத்தும் என்ற‌ வ‌ழ‌க்குப் படி, க‌ட்டுப்பாடின்றி வ‌ள‌ர்ந்த‌/வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ள் இறுதியில் இந்த‌ நிலைக்கு வ‌ந்துவிடும் என்ற செய்‌தியாய் இது.
    நன்றி த‌ங்க‌ளின் வ‌ருகைக்கும், வார்ப்புக்கும்.

    ReplyDelete