Wednesday, May 4, 2011

ஒசாமாவின் ம‌ர‌ணம், நமக்கு என்ன‌?


திரும்(ப்)பிய‌ ப‌க்க‌ம் எல்லாம் ஒசாமாவின் ம‌ர‌ணம் ப‌ற்றிய‌ செய்திக‌ள்.

செப்ட‌ம்ப‌ர் 11 2001 ல் அமெரிக்க‌ இர‌ட்டை கோபுர‌த்தை அதி புத்திசாலித்த‌ன‌மாய் திட்ட‌மிட்டு அழித்த‌ அந்த‌க்க‌ட்ட‌ ஜேம்ஸ்பாண்டு "வில்ல‌ன்." . "போக்குவ‌ர‌த்து சாத‌ன‌மாய்" இருந்த‌‌ விமான‌த்தை ஒரு "அழிவு ஆயுத‌மாக‌" மாற்றிய‌ அறிவாளி இந்த‌ வில்ல‌ன். அவ‌ரால் தான் விமான ப‌ய‌ண‌ம்/ச‌ர‌க்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அனைவ‌ரும், காப்பீட்டு தொகை என ஒரு பெரிய‌ புதிய‌ செல‌வும் செய்ய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் வ‌ந்த‌து

ஆப்கான் ர‌ஷ்யாவிட‌மிருந்த‌வ‌ரை இவ‌ர் அமெரிக்க‌ச் செல்ல‌ப்பிள்ளை. கேட்ட‌தெல்லாம் கொடுத்து கெடுக்க‌ப்ப‌ட்ட‌ வினைப் பிள்ளை.
அல்கொய்‌தாவின் ஆட்சி சாம்பிள் ஆப்கானில் அரங்கேறிய‌ அவ‌ல‌ம், உல‌க‌ம் அறிந்த‌து தான்.
இந்திரா பிர‌ந்த‌ன்வாலாவை வ‌ள‌ர்த்து, பின் ப‌கைத்து கொண்டு ஆப‌ரேசன் புளுஸ்டார் வ‌ரை போன‌து போல், இவ‌ர் அமெரிக்காபோர் வீர‌ர்க‌ளை, அர‌புநாடுக‌ளில் இருந்து வெளியேற‌ச் சொல்ல, எதிரியாகி இர‌ட்டை கோப‌ரம், பென்ட‌க‌ன் வ‌ரை போன‌து. க‌த்தி எடுத்த‌வ‌ன் முடிவு அப்படியே தான். மே ஒன்றில் அமெரிக்க‌ சூப்ப‌ர்மேன் ஒபாமா உத்த‌ர‌வில் வில்ல‌ன் த‌ண்ணீரில் த‌க‌ன‌ம் செய்ய‌ப்ப‌ட்டார்.


எடுத்த‌ காரிய‌ம் முடிப்ப‌தில், இஸ்ரேலும், அமெரிக்காவும் முத‌லிட‌த்திலிருக்கிற‌து. அந்த‌ நாட்டு ம‌க்க‌ளை வெறும் வாக்குறுதிக‌ளால் ம‌ட்டும் (இந்திய‌ர்க‌ளை மாதிரி) திருப்தி செய்துவிட‌ முடியாது.
சொந்த‌ ம‌ண்ணான‌ மும்பை ப‌ங்குச்ச‌ந்தை வ‌ளாக‌த்தை ந‌ம் அர‌சிய‌ல்வாதிக‌ள், அலுவ‌லர்க‌ள் துணையுட‌ன் (ச‌ர‌த்ப‌வார், காவல்‌/சுங்க‌த்துறை) தாக்கி தக‌ர்த்து விட்டு, க‌ராச்சியில் தொழில் ந‌டத்தும் ஓடுகாலி தாவூத் இப்ராஹிம் ப‌ற்றிப் பேச‌ ந‌ம் நாட்டு அறிவுஜீவி‌ளுக்கு நேர‌மில்லை. நாட்டை வ‌ளைத்து ஒடித்து த‌ன்ன‌ல‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்தும், ஆளும் வ‌ர்க்க‌த்தைப் பற்றிப் பேச‌ எழுத‌ ந‌ம்மால் முடிய‌வில்லை, ஆனால் அமெரிக்கா, சீனா, அல்க‌ய்தா, ஆப்கான் ப‌ற்றிய‌ ஆத‌ங்க‌ம் ம‌ட்டும் ப‌திவுக‌ளில் ப‌க‌க‌ம் ப‌க்க‌மாய் ப‌ர‌விக் கிட‌க்கிற‌து.

போர்ப்ஸ் நாளித‌ழில் உல‌கப் ப‌ல‌ம் பொருந்திய‌ ந‌ப‌ராய்  9-வது இட‌த்தில் இருக்கும் சோனியா, (பிர‌த‌ம‌ருக்கு 18-வது இட‌ம்) விரைவில் ஊழ‌ல் வ‌ழக்கில் சிக்க‌லாம் என உல‌கத்த‌ர எழுத்தாள‌ர் திரு பாஸ்க‌ல் அவரது த‌ள‌ங்க‌ளில் ப‌திவிடுகிறார்.
பார்க்க‌: http://www.huffingtonpost.com/cleo-paskal/worlds-9-most-powerful-pe_b_853132.html

ஆனால் நாமோ, நம்மை ப‌ற்றி எனில், ர‌ஜினியும், சினிமாவையும், ர‌சிக‌னையும் த‌விர‌ வேறு த‌க‌வ‌லக‌ளே அற்று போய் விடுகிற‌து. ஒவ்வொரு வ‌ருட‌மும். மும்பையில் (28 செப்ட‌ம்ப‌ர், ப‌ங்குச்ச‌ந்தை, இர‌யில் பெட்டிக‌ளில் குண்டு வெடிப்புக‌ள்), டெல்லியில் (ச‌ந்தை, பாராளும‌ன்ற‌ தாக்குத‌ல்), பெங்க‌லூரில், கோவையில் என எத்த‌னையோ ந‌ட‌ந்து விட்ட‌து. ஒன்றுக்கும் இதுவ‌ரை ஒழுங்கான முடிவு வ‌ர‌வில்லை. ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ப‌ய‌ங‌க‌ர‌வாதி உயிருட‌ன் பிடிப‌ட்டும் (நன்றி, தியாகி துக்காராம், த‌லைமை காவ‌ல்கார‌ர்) இன்னும் தீர்வாகிக் கொண்டிருக்கிற‌து வ‌ழக்கு.


கூரையேறி கோழிபிடிக்க‌வே முடியாத‌ ந‌மக்கு ஏன், ஹெலிகாப்ட‌ர் ஏறி ஒசாமா பிடிக்கிற வேலை பற்றிய‌ க‌வ‌லையும் க‌ணிப்பும்?‌




25 comments:

  1. நச் வாசன்.

    பதில்களே இல்லாத கேள்விகளை உங்களைப் போல் எல்லோராலும் கேட்கமுடிவதில்லை.

    ReplyDelete
  2. தங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானதாகவே உள்ளது. திரு. சுந்தர்ஜி அவர்கள் கூறுவதுபோல பதிலே இல்லாத கேள்விகளையே முன்வைத்துள்ளீர்கள். காலம் ஒருநாள் மாறும். கவலைகள் யாவும் தீரும்.

    ReplyDelete
  3. நமது நாட்டினுள் குண்டு வைத்தவனுடன் கெஞ்சி / கொஞ்சும் அதே வேளையில், அடுத்த நாட்டினுள் நுழைந்து சென்று துவைத்த செய்தி பார்த்த பிறகாவது, நமக்கு சொறனை வருமா????

    ReplyDelete
  4. அமெரிக்காவில் செத்தது
    அமெரிக்கக் குடிமகன்கள்& மகள்கள்.
    இங்கே செத்துக் கொண்டிருப்பது
    அடிமைகள் அல்லவா?

    கசாப்புக்கு மரணதண்டனை கொடு
    என வலதுசாரி குரல் கொடுக்கும்.
    இந்து தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை
    கொடுத்தேயென இடதுசாரி முழக்கமிடும்.
    ஊடாலே மரணதண்டனை தவறேன
    ஓர் அறிவுஜீவி கூட்டம் அறிக்கை வெளியிட்டும்.
    அமெரிக்காவுடன் ஒப்பிட்டுக்கொள்ள நமக்குத்
    தகுதியில்லை. அந்த தகுதி நமக்கு
    வேண்டாமும் கூட.

    ReplyDelete
  5. வெறும் பாவனைகளே வாழ்கை முறையாக கொண்ட இந்திய சமூகத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் மிக அதிகம். பழம்பெருமை, அரசியல், கலை ,கலாச்சாரம் ,ஆன்மிகம், பண்பாடு என நிறைய பாவனைகள் இங்குண்டு.இந்த "பாவனைகள்" வழி வழியாக வருபவை. மாறப்போவதுமில்லை.

    ReplyDelete
  6. //santhanakrishnan said...
    அமெரிக்காவில் செத்தது
    அமெரிக்கக் குடிமகன்கள்& மகள்கள்.
    இங்கே செத்துக் கொண்டிருப்பது
    அடிமைகள் அல்லவா?//

    ச‌ரியாய் சொன்னீர்க‌ள் திரு ச‌ந்தான கிருஷ்ண‌ன்.

    அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளுக்காக வாழ்கிறார்க‌ள்.
    இவ‌ர்க‌ள் ம‌க்க‌ளை ஆள்கிறார்க‌ள்.

    ப‌ல ஆயிர‌மாண்டுக‌ளாய் அர‌ச‌ர்க‌ளின் கீழ‌டிமை.
    பாப‌ரின் வ‌ருகைக்குப் பின் முக‌ம‌திய‌ர் அல‌ல்து
    அவ‌ர்க‌ள‌து திவான்க‌ளிட‌ம் அடிமை.
    ராப‌ர்ட் கிளைவ்க்குப்பின் ஆங்கிலேய‌ரிட‌மும்
    அவ‌ர்க‌ளின் கும்பினிக‌ளிட‌மும் அடிமையாய்.
    இன்றோ ஓட்டுப் பிச்சைவாங்கிய‌ பிச்சைகாரர்க‌ளிட‌ம்
    முதுகு வ‌ளைந்து ம‌றுப‌டியும் அடிமைக‌ளாய்.

    ReplyDelete
  7. அன்பு வாசனுக்கு, நம் நாட்டில் ஒரு benevolent dictator ஆட்சிக்கு வந்தால் வரவேற்பீர்களா.?

    ReplyDelete
  8. ராஜாஜி குலக்க‌ல்வி குற்ற‌ம் சும‌ந்தார்,
    காம‌ராஜ் பிற‌ரை ந‌ம்பாத‌வ‌ர் என்கிறார் க‌ண்ணதாச‌ன்,
    சாஸ்திரியின் ஆளுமையில் தான் ஹிந்தி எதிர்ப்பு தீ எழுந்தது,
    மொராஜ்யின் பைய‌ன் பாதி அழ‌கிரி என்கிறார் பார‌தி ம‌ணிய‌ன்.

    ஆக‌வே எனக்கு இப்போது பீகார் நிதிஸ்குமார் போதும்.
    ஆட்சியிலிருப்ப‌வ‌ர் சொத்துக் க‌ணக்கு க‌ணணிக்கு வ‌ர‌ வேண்டும்.
    திடீர் செல்வ‌ங்க‌ள் எல்லாம் கைப்ப‌ற்றப‌டும், கணக்கை நேர் செய்து விட்டு மீட்டுக் கொள்ளலாம், இல்லையெனில், அது அர‌சு சொத்தாகும், தேர்த‌ல் க‌மிஷன் பிர‌வின்குமார் செய்த‌து போல்,
    இந்த‌ இன்ஷினிய‌ரின் க‌ட்டுமான‌ம் வ‌லிமையாய், அடுத்த‌ த‌லைமுறையையே தாங்கும் அளவு உறுதியான‌ சிமெண்டால் க‌ட்ட‌ப்படுகிற‌து.
    மோடியின் க‌ட்டிட‌ம் வ‌ளமாய், திர‌மாய் இருக்கிற‌து ஆயினும்....அந்த‌ கீற‌ல், நாளைய‌ த‌லைமுறையை தாங்கும்?

    ReplyDelete
  9. \\இந்த‌ இன்ஷினிய‌ரின் க‌ட்டுமான‌ம் வ‌லிமையாய், அடுத்த‌ த‌லைமுறையையே தாங்கும் அளவு உறுதியான‌ சிமெண்டால் க‌ட்ட‌ப்படுகிற‌து.
    மோடியின் க‌ட்டிட‌ம் வ‌ளமாய், திர‌மாய் இருக்கிற‌து ஆயினும்....அந்த‌ கீற‌ல், நாளைய‌ த‌லைமுறையை தாங்கும்?//

    எனக்குப் புரியவில்லை வாசன். கொஞ்சம் தெளிவாய் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  10. அன்பின் சிவ‌குமார‌ன்,
    நிதீஸின் பீகார், லாலுவின் ப‌ள்ளத்தாக்கிலிரிந்து மேலெழும்பி வ‌ருகிற‌து.
    நரேந்திர‌ மோடி, குஜ‌ராத்தின் கொடியை ஐநாவுக்கே தெரியும‌ள‌வு உய‌ர்த்தினாலும்,
    கோத்திராவுக்கு பின்னான தொட‌ர் நிக‌ழ்வு 'கீற‌ல்', அரசின் த‌லைய‌சைப்பில் (சீக்கிய‌ ப‌டுகொலை போல்) ந‌ட‌ந்த‌தோ என்ற‌ ச‌ந்தேக‌த்தால் இந்திய‌ இறையாண்மையில் சிறுபான்மையின‌ரின் வாழ்விய‌லால் வ‌ரும் ச‌ந்ததிக்கு அத்த‌கு ஆட்சி வ‌ளமாய், ந‌ல‌மாய் இருக்குமா என்ற‌ ஒரு சிறு ச‌ந்தேக‌க் கீற‌ல்.

    ReplyDelete
  11. /சுந்தர்ஜி said...
    நச் வாசன்.

    பதில்களே இல்லாத கேள்விகளை உங்களைப் போல் எல்லோராலும் கேட்கமுடிவதில்லை./

    ப‌தில்க‌ள் கிடைக்காத‌ கோள்விக‌ளால் என்ன‌ ப‌ய‌ன் சுந்த‌ர்ஜி?
    ஏன் உங்க‌ள் ப்திவிக‌ளின் பின்னோட்ட‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் இப்போதெல்லாம் க‌மெண்ட் எழுதுவ‌தில்லை?

    ReplyDelete
  12. /வை.கோபாலகிருஷ்ணன் said...
    தங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானதாகவே உள்ளது. திரு. சுந்தர்ஜி அவர்கள் கூறுவதுபோல பதிலே இல்லாத கேள்விகளையே முன்வைத்துள்ளீர்கள். காலம் ஒருநாள் மாறும். கவலைகள் யாவும் தீரும்./

    தேர்த‌ல் 'கால‌ம் ஒருநாள்' வ‌ந்தது, "க‌வ‌லைக‌ள் மாறுமா"? காத்திருக்கிறோம் வைகோ சார்.

    ReplyDelete
  13. //திருமூர்த்தி said...
    நமது நாட்டினுள் குண்டு வைத்தவனுடன் கெஞ்சி / கொஞ்சும் அதே வேளையில், அடுத்த நாட்டினுள் நுழைந்து சென்று துவைத்த செய்தி பார்த்த பிறகாவது, நமக்கு சொறனை வருமா????//

    அமெரிக்கா மாதிரி வேறு யாராவ‌து முய‌ன்றால்...பாக், எச்ச‌ரிக்கை விட்டாகிவிட்ட‌து ந‌ம்மை நோக்கி. 26/11 க்கு பின்னால் உள்ள‌ குற்ற‌வாளிக‌ளை ஒப்ப‌டைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது என்ற‌ இந்தியா, எந்த‌ குற்ற‌மும் அவ‌ர்க‌ளால் ஒத்துக் கொள்ள‌ப்ப‌டாம‌ல் இருக்கும் போதே, ம‌றுப‌டியும் உய‌ர்ம‌ட்ட‌ பேச்சுவார்த்தையை தொட‌ங்கினோம். நம் வார்த்தைகளை நாமே ம‌திக்காவிடில், எப்ப‌டி அடித்த‌வ‌ன் நம்மையே அல்ல‌து ந‌ம் வார்த்தையையோ ம‌திப்பான்? இது தான் இப்போதைய‌ இந்திய‌ அர‌சிய‌ல் த‌லைமையின் த‌ன்மை.

    ReplyDelete
  14. /கக்கு - மாணிக்கம் said...
    வெறும் பாவனைகளே வாழ்கை முறையாக கொண்ட இந்திய சமூகத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் மிக அதிகம். பழம்பெருமை, அரசியல், கலை ,கலாச்சாரம் ,ஆன்மிகம், பண்பாடு என நிறைய பாவனைகள் இங்குண்டு.இந்த "பாவனைகள்" வழி வழியாக வருபவை. மாறப்போவதுமில்லை./
    ப‌ழம் பெருமையை "ந‌டிப்பு சுதேசிக‌ளில்" நெஞ்சில் உர‌மில்லா நாம், சொந்த‌ச் ச‌கோத‌ர‌க‌ள் துன்ப‌த்தில் சாத‌ல் க‌ண்டும் கிரிக்க‌ட் பார்க்கிற‌ கூட்ட‌ம் என்று அக்கினி புல‌வ‌ன் அன்றே சாட்டை சொடுக்கு விட்டான்

    ReplyDelete
  15. Of late-- ever since Hindu started the Wiki leaks dedicated pages- I have been extremely impressed with the american work efficiency! their meticulous 'placement' of some of our politicians struck me with an awe about their top notch brilliance...

    i work in the much clichéd IT sector. Sometimes, it pains me to say this- but sometimes, during the 15th aug... or whn india won the world cup ... these kind of times- i feel bad about writing off my precious work-energy-time to an alien power, rather than my country. but during my work- i have come to believe that- these people-- they know what they want. they are very specific. they know where/when to place bureaucracy. it's all facts/figures. no talk... i feel that India badly needs this kind of govt.

    in the recent issue of the india today (eng.) i happened to read abt 'Nitish kumar's achievements. to give a state like Bihar a face like this- is not an easy job. it's a state that has been rotting under a no good ruler for almost 15 yrs. Bihar had become synonymous to inefficiency and corruption. But Mr.kumar's schemes and policies have seriously done wonders there! they are not just some details off magazine- but a view begotten from a Bihari colleague too... Same goes for Modi- though i don't support BJP and their ideals. But Modi is a great administrator. I happened to watch his speech in one of Cho's Tuglak Annual meeting... I was riveted. His efficiency shown itself in his talks...

    India may have a million faults... it is no secret that half of our politicians and Bollywood stars are best buddies with the notorious Dawood... But india also has people with potential... i did support the Hazare episode... But i am a skeptic. if womens' bill had to face a 'walk-out' on the D-Day- 'Lokpal' doesn't stand a chance... It's my honest opinion.

    i, in fact, hold a personal vendetta against kasab- but i have no hope that he would be hanged in this country...

    So why did we celebrate Laden's death?

    our inefficiency and lack of trust in the govt. has forced us all to find solace in an alien achievement.

    PS: pardon me for the lengthy comment!

    ReplyDelete
  16. Dear Ms. Matangi Mawley,
    Appreciate your detailed comments, which shows your involvement.
    USA policy is wellknown to every one “Do what I say, Don`t do what I do”. It is as simple as that. They scratch their own itching, where as India expect other should do that. Though they are the strategic partners, US seldom trust but carried the vital operation under their very nose of Pak in secrecy. US meticulous intelligence and their advanced technology are remarkable, resourceful, and reliable, where as ours are engaged to help and cover the dirty trial of ourpolotician`s corruption and/or help to deposit their swindled trash in the foreign bank.
    Let us change ourselves in selecting and electing the right representative for us.

    ReplyDelete
  17. /ஹரிஹரன் said...
    good post/

    THANK YOU DEAR ஹரிஹரன்.
    Appreciate your 1st Comment.

    ReplyDelete
  18. வாசன்.. நிஜமாவே இந்தியாவுக்கு சுதந்திரம் வருமா?

    ReplyDelete
  19. /ரிஷபன் said...
    வாசன்.. நிஜமாவே இந்தியாவுக்கு சுதந்திரம் வருமா?/

    இந்திய‌ன் சுத‌ந்திரமான‌வ‌னாய் ஆனால்,
    இந்தியா சுத‌ந்திர‌ம் அடைந்துவிடும்.

    ReplyDelete
  20. வாசன் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதத் துவங்கிவிட்டேன். அடிக்கடி வந்து போகவும்.

    புதிய வீட்டு நிர்மாண வேலைகள் எந்த அளவில் உள்ளன?

    ReplyDelete
  21. சுந்தர்ஜி said...

    /புதிய வீட்டு நிர்மாண வேலைகள் எந்த அளவில் உள்ளன?/

    வீட்டு வேலை, வ‌ழக்க‌மாய் ஆட்ட‌ம் போட்டுவிட்டு, முழுப்பரிட்சைக்கு முத‌ல் நாள் ப‌டிக்க‌த் துவ‌ங்குவ‌து போல், ஒரே அவ‌ச‌ர‌க‌தியில் முதல் ப‌க்கதிலிருந்து க‌டைசி ப‌க்க‌ம்வ‌ரை புர‌ட்டிக் கொண்டிருப்ப‌தைப் போல் பின்னுக்கும் முன்னுக்குமாய் உருண்டு புர‌ண்டு கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  22. /ரிஷபன் said...
    வாசன்.. நிஜமாவே இந்தியாவுக்கு சுதந்திரம் வருமா?/

    மே 13, பாண்டி, த‌மிழ்நாடு, மேற்கு வ‌ங்க‌ தேர்த‌ல் முடிவுக‌ள், ம‌க்க‌ள் சுத‌ந்திர‌மான‌வ‌ர்க‌ளாய் தான் இருக்கிறார்க‌ள் என நிருபிக்கிற‌து. ஆனால் ஆளவ‌ருப‌வ‌ர்க‌ள் அத‌னை புரிந்து கொள்வார்க‌ளா என்ப‌து தான் (சில‌ இட‌ங்க‌ளில்) சந்தேக‌மாய் இருக்கிற‌து. அன்றைய‌ காலை நிகழ்வு, பேப்ப‌ர் போடும் பைய‌ன், முத‌லாளியிட‌ம், பார்த்திங்க‌ளா, முடிவு எப்ப‌டி வ‌ந்திருக்குன்னு என்றான். போடா, கொள்ளைக்கார‌ன் போய், கொள்ளைக்காரி வ‌ந்திருக்காங்க‌. போயி, பேப்ப‌ரை போட்டுட்டு வாடா, நம்ம‌ பொழைப்பை பாருடா, என்றார் அந்த‌ வ‌ய‌தான முத‌லாளி. நீங்க‌ என்ன‌ சொல்லுரிங்க‌ ரிஷப‌ன்?

    ReplyDelete
  23. உண்மைதான்.. தேர்தல் முடிவுகள் கணிப்புகளை மீறி புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் கொள்ளைக்காரி என்கிற பிரயோகம் சற்றே முரட்டுத்தனமாய் இருந்தாலும் அதில் தொக்கி நிற்கிற எக்காளம் உண்மைக்கு மிக அருகில் தான் இருக்கிறது. நம்மால் யாரையும் நம்ப முடிவதில்லை என்பதை விட அரசியல்வாதிகளை நிச்சயமாய் நம்ப முடியவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  24. வாசன்!
    பயங்கரவாத செயல்கள் இங்கு வெகு விரைவில் மறக்கப்பட்டு விடுகின்றன! எதிர் நடவடிக்கையில் வேகமிருப்பதில்லை! இந்தியா எளிய வேட்டைக்காடு போலாகிவிட்டது!
    உறுதியான, நாட்டுப் பற்றுள்ள தலைமை தேவை!

    தொடர்பிலிருப்போம்!

    ReplyDelete