'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்ற சொல் வழக்கு அனவரும் அறிந்ததுதான். ஆனால் அந்த மாதிரி ஆள் யார் எனக் கேட்டால், "பிள்ளையைக் கிள்ளி விட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுபவர்கள்" என்ற இன்னொரு பழமொழியைச் சொல்லி நழுவி விடலாம். இவர் நல்ல மனுஷன், அவர் கொஞ்சம் அப்படி இப்படி எனச் சொல்வது போல், இந்த வேடதாரிகளை, இன்னார் தான் அப்படி எனச் சுட்டிக்காட்டுவது சிரமம்.
ஏனெனில் இவ்வளவு கேவலமாய்/வேகமாய் இரட்டை வேடம் போடுபவர்களைப் பற்றி மக்கள் அறிந்திருந்தாலும், கேள்விப்பட்டிருந்தாலும், தெரிந்தே இருந்தாலும் வெளிப்படையாய் நிரூபித்தல் சிரமம். காரணம் அந்த கருத்தை ஆதரிக்க அல்லது எதிர்க்க அவர்களிடம் இரண்டுவிதமான கருத்துக்களும் இருக்கும். அவர்களே ஒரு வேஷதாரிகள் தானே. பச்சோந்தி போல இடத்திற்கு தக்க தன் கருத்தை மாற்றிக் கொள்வார்கள். சொல் ஒன்று, செயல் மற்றொன்று. உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றுமாய் வாழ்பவர்கள்.
சரி இந்த இரட்டை வேடதாரி யார்? ஏன் இவ்வளவு பெரிய அறிமுகம் எனில், இந்த கட்டுரையின் கதாநாயகி, இத்தாலிய வித்து, இந்திய காங்கிரசின் சொத்து, தமிழக திமுக தலைவரின் சொக்கத் தங்கம் திருமதி சோனியா காந்திதான். ராஜிவ் காலத்திலேயே அந்நிய வங்கியில் 2.2 மில்லியன் டாலர் அவர் பெயரில் இருக்கிறது என்பது பல வலைத்தளங்களில் ராஜிவ் படத்தோடு (மற்ற ஆப்பிரிக்க, வளைகுடா அதிபர்களின் படங்களோடு) கிடைக்கிறது. ஆனால் டாஸ்க் போஃர்ஸ் என்ற இந்திய சுயநலக் குழு அதைச் சொன்னால், சோனியா சோகமாகி விடுகிறாராம், இதயம் வலிக்கிறதாய், அத்வானிக்கு தனி கடிதம் எழுதுகிறார். அவரும் மன்னிப்பு கேட்கிறார். அதை அத்வானி பொய் குற்றம் சாட்டி பின் அதற்கு வருந்தியது போல் காங்கிரஸ் திரித்து கூறுகிறது.
60 கோடிகள் போபர்ஸ் ஊழலால், தேர்தலில் தன் சக நண்பரிடமே (V.P. சிங்) தோற்ற ராஜிவ், அதை மறைக்க ஆடிய சிபிஐ நாடகம், ஜெபிசி விசாரணை எல்லாம் அரசாங்க ரெகார்டுகளாக கிடங்கில் கிடக்கின்றன. இத்தாலிய தரகர் குவேட்ரோச்சி வாங்கிய கமிஷன் பணம் 41 கோடிக்கு வரி செலுத்த வேண்டும் என்று வருவாய் துறை தனிக்குழு கூறிய பின்பும், அவரை பிடிக்க முடியவில்லை ஆகவே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வழக்கையே இரண்டு மாதங்களுக்கு முன் கை கழுவி விட்டது சிபிஐ. ஆனால் குவேட்ரோச்சியின் முந்தைய கார் ஓட்டுநர், ராஜிவ் சாப் இறந்தபின்பு 21 முறை இவர் (குவேட்ரோச்சி) சோனியாவின் வீட்டுக்குப் போயிருக்கிறார் என்கிறார். சிபிஐ அவரை அந்த 21 முறையில் ஏன் ஒரு முறை கூட கைது செய்ய வில்லை?
யுபிஏ 1-ல், 123 யுஎஸ் அணு ஒப்பந்த பேர பாராளுமன்ற ஒப்புதலில் நடந்த வாக்கெடுப்பில் பணம் பயன்படுத்தப்பட்டதாய் விக்கிலீக் செய்தி வெளி வந்தது. அதை நம்பகத்தன்மை இல்லாத செய்தி என்கிறார் பிரதமர். தற்போது ஓய்வு பெற்ற, அப்போதைய, யுஎஸ் தூதுவர் மெல்பர்ட் லீக்கான செய்தியை ஒத்துக் கொள்கிறார். நம் அரசியல்வாதிகள் போல் யுஎஸ் தூதுவர்கள் பொய் சொல்ல முடியாது. மறுபடியும் மக்கள் எங்களுக்கே வாக்கு அளித்து விட்டதால் யுபிஏ 1ன் செயல்களை மக்கள் அங்கிகரித்தாய் எடுத்துக் கொள்கிறார். ஆனால், இதே மக்கள் போபர்ஸ் விசாரணையின் போது நடந்த தேர்தலில் ராஜிவ் காந்தியை தேற்கடித்தனர். அப்படியானால் அந்த ஊழலுக்கு காங்கிரசும் ராஜிவும் பொறுப்பு ஏற்று கொண்டார்களா? ஏன் இரட்டை வேடம் போடுகிறது இந்த காங்கிரஸ்?

//இதே வேலையை இப்போது அன்னா ஹசாரியாவின் லோக்பால் அமைப்பு குழு விவகாரத்திலும் பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் வேலை காட்டுகிறார்கள். //
ReplyDeleteஅச்சச்சோ.....அடடா, இது வேறா !
போதாதகாலம் தான் போலிருக்கு.
அன்னா ஹஸாரே மீதான சேறு வீசலில் முழு கவனம் இப்போது அரசுக்கு.
ReplyDeleteஎத்தனை செலவானாலும் பார்த்துவிடலாம் ஒரு கை என்று இறங்கியிருக்கும் இவர்களின் வேடம் இன்னொரு மழையில் கரையும் வாசன்.
வியர்வை சிந்திய தகவல்களுடன் வழக்கமான உழைப்புடன் உங்கள் பதிவு அருமை வாசன்.
உங்க பதிவுகளின் மூலம் நடப்பு அரசியலை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. எல்லாவற்றையும் புரட்டிப் போட யார்? எப்போது??
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete/அச்சச்சோ.....அடடா, இது வேறா !
போதாதகாலம் தான் போலிருக்கு./
காங் செய்தி தொடர்பாளர் சிங்வி, கட்சி பொது காரியதரிசி திக் விஜய் சிங், காபினட் மந்திரி கபில்சிபல், பேச்சுக்களை கவனித்தால், அன்னையின் அடிமனம் தெரியும் வைகோ சார்.
/சுந்தர்ஜி said...
ReplyDeleteஅன்னா ஹஸாரே மீதான சேறு வீசலில் முழு கவனம் இப்போது அரசுக்கு.
எத்தனை செலவானாலும் பார்த்துவிடலாம் ஒரு கை என்று இறங்கியிருக்கும் இவர்களின் வேடம் இன்னொரு மழையில் கரையும் வாசன்.
வியர்வை சிந்திய தகவல்களுடன் வழக்கமான உழைப்புடன் உங்கள் பதிவு அருமை வாசன்./
எத்தனையோ மாமங்களை கண்ட கட்சி இது சுந்தர்ஜி. நம்மின்,(மக்கள்) பலமும், பயமும் நம்மைவிட அதிமாகமாய் ஆள்பவர்களுக்கு தெரிந்திருக்கிறது. எப்போது பறக்கும் பட்டத்தின் நூலை சுறுக்க/நீட்ட வேண்டும்,எப்போது காற்றின் துணையோடு எதிரியின் பட்டத்தை வெட்ட வேண்டும் என்ற நூதனம் கற்றிருக்கிறார்கள். நாமோ சரியான செயலை, தவறான் நேரத்திலும், தவறான செயலை சரியான் நேரத்திலும் செய்து குழம்புகிறோம். சரியானதை சரியான் நேரத்தில் செய்யும் நேரம் நெருங்குவதாய் தெரிகிறது. ஒரு 'கை'(யை) பார்ப்போம்.
நிலாமகள் said...
ReplyDeleteஉங்க பதிவுகளின் மூலம் நடப்பு அரசியலை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. எல்லாவற்றையும் புரட்டிப் போட யார்? எப்போது??
உண்மைகளை உறக்கச் சொல்வோம். பொதுவிடங்களில், பஸ்களில், பார்கில், நண்பர்களுக்குள், உறவினர்களுக்குள் பகீங்கரமாய் அரசியல் தவறுகளை, பாதிப்புக்களை, முரண்களை பேசுவோம்.
இது ஒரு மக்கள் பிரச்னை எனப் பங்கெடுப்போம். நம் எண்ணங்களை துணிவாய் வெளிப்படுத்துவோம். நாமோ 120 கோடி. அந்த அரசியல் கேடிகளோ சில ஆயிரம்.
அருமையான பதிவு தோழர்.
ReplyDelete” இந்த தேசத்தில்
சுள்ளி திருடியவனை
சந்தனம் திருடியவன்
சவுக்கால் அடிக்கிறான்”
என்பது மாதிரி எப்போதோ வாசித்தது.
மிக மிக அருமையான பதிவு
மிக்க நன்றி இரா.எட்வின் சார்.
ReplyDelete"சொந்தக் காட்டில் சுள்ளி பொறுக்கிறவனை,
சந்தன மரம் திருடுபவன் தண்டிக்கிறான்"
இந்த அரசியல் சட்டம் ஒழுங்கை இதைவிடச்
இரத்திணச் சுருக்கமாய் யாரும் சொல்லிவிட முடியாது.
கருத்து அறுசுவை விருந்து.
தொடர்ந்து உங்கள் ஆதங்கம், சீற்றம், விமர்சனம் பார்க்கும்போது கடைசி காட்சி வரை பலமான வில்லன் உள்ள த்ரில்லர் படம் போல நம் நாட்டு நிலை தோன்றுகிறது.. சினிமாக்களில் ஹீரோ ஜெயிப்பது போல நிஜத்தில் சத்தியம் ஜெயிக்க பிரார்த்தனை தவிர வேறு வழி தெரியவில்லை
ReplyDelete