Friday, April 8, 2011

ந‌ல்ல‌ ச‌ம‌ய‌ம் இதை ந‌ழுவ‌ விடாதீர்க‌ள்.!!

                                              
சுத‌ந்திர‌ இந்தியாவின் 64 ஆண்டு காலத்தில், நாட்டை ஆண்ட‌வ‌‌ர்களின் ஒட்டு மொத்த‌ செயல்பாடுக‌ளின் ந‌ன்மை, தீமைக‌ளை நடுநிலையில் ப‌ரிசீலித்தால், த‌ன்ன‌ல‌மற்ற‌ தேசவளர்ச்சியை முன்னெடுத்த‌ செய‌ல்க‌ளை விட‌, சுய‌ லாப‌ம் சார்ந்த‌ தேச நாச‌ங்க‌ளே சிறியாதாய் தொட‌ங்கி கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அதிக‌ரித்து இப்போது முழுவ‌துமாய் ஆட்சி செலுத்துகிற‌து. நேருகால‌த்திய ஜீப் ஊழ‌ல் தொட‌ங்கி தற்போதைய‌ எஸ் பாண்டு ஊழ‌ல் வ‌ரை அது எண்ணிக்கையில் அட‌ங்காதது. இந்தியாவில் வ‌றுமை, ஆப்பிரிக்க‌ ம‌க்க‌ளை விஞ்சிவிட்ட‌து. ஆனால் உல‌க வ‌ங்கியில் இந்திய‌ரின் ப‌ண‌ம் தான் அதிக‌மாய் இருக்கிற‌து. விவ‌சாயத்தில் த‌ன்னிறைவு கொண்டிருந்த‌ இந்தியா எம்.எஸ் சுவாமி நாத‌ன் போன்றோரின் சுய‌ந‌ல‌த்தால், விளைபூமிக‌ள் இர‌சாயண சுடுகாடாய் ஆகிவிட்ட‌து. வற்றாத‌ புண்ணிய‌ ஜீவ‌ந‌திக‌ள் இன்று தொழிற்சாலை க‌ழுவுக‌ளை, பிண‌ங்க‌ளை, ம‌னித‌ க‌ழிவுக‌ளை சும‌க்கும் ‌சாக்க‌டைக‌ளாகி விட்ட‌ன. சித்த‌ர்க‌ள் வ‌ல‌ம் வ‌ந்த‌ வ‌னங்க‌ள், இன்று தாதுச்சுர‌ங்க‌மாய் சொந்த‌ம‌க்க‌ளையும் துர‌த்திவிட்டு பொலிவிழ‌ந்து கிட‌க்கிற‌து.

அறிவியல்,வான சாஸ்திர‌ம், ம‌ருத்துவ‌ம், க‌லை, க‌ப்ப‌ல், வ‌ணிக‌ம், க‌ட்டுமான‌ம் என எல்லாத் துறையிலும் விண்ணைத் தொட்ட‌ இந்திய‌ ச‌முதாய‌ம், இன்று மேலை நாட்டின‌ரின் க‌ணக்கு வ‌ழ‌க்குக‌ளை, மருத்துவ‌ குறிப்புக்க‌ளை, க‌வ‌னித்துக் கொண்டு இராப்ப‌க‌லாய் அலைகிற‌து. கொரியா, ஜ‌ப்பான், ம‌ற்றும் மேலை நாட்டு கார் க‌ம்ப‌னிக‌ளில் மூன்றாந்த‌ர‌ வேலையும், கைபேசி க‌ருவிக‌ள் இணைப்பு கூலி வேலையும் செய்யும் டை க‌ட்டிய‌ வேலைக்கார‌ அடிமைக‌ள் நாடாய் வ‌ளர்ந்து விட்ட‌து. ஆட்சியாள‌ர்க‌ளும், அர‌சு அதிகார‌க‌ளிலும், அந்நிய‌ ஏஜ‌ண்டுக‌ளும், அம்பானியும், மிட்ட‌ல்க‌ளும், டாடாக‌ளும், ப‌ஜாஜ்க‌ளும், மாற‌ன்க‌ளும், ரெட்டி ச‌கோத‌ர்க‌ளும், ம‌து கோடாக்க‌ளும், கேத‌ன் தேசாய்க‌ளும் இந்திய‌ வ‌ள‌த்தை ஒட்டுண்ணிக‌ளாக உறுஞ்சி, ந‌ம் நாட்டை ந‌டை பிண‌மாக ஆக்கி விட்டார்க‌ள்.

நாம் இன்று இவ‌ர்க‌ளை அடையாளம் க‌ண்டு நாட்டை மீட்க‌ வில்லை எனில், இந்திய‌ தேச‌த்தையே அப்ப‌ல்லோவில் சேர்த்து, அத‌ற்கும் இடிஐ ஸ‌டார் ஆயுள் காப்பிட்டு திட்ட‌ம் போட்டு க‌மிஷன் வாங்கி அதையும் முழுங்கி விடுவார்க‌ள். வாருங்க‌ள், சேருங்க‌ள் அன்னா ஹசாரே யின் "லஞ்ச‌ எதிர்ப்பு இய‌க்க‌த்தில்". பூனைக்கு யார் ம‌ணி க‌ட்டுவ‌து? என்ற‌ ப‌ழைய‌ கேள்விக்கு புதிய‌ வ‌ழி கிடைத்திருக்கிற‌து. எழுச்சியில் சேர்ந்து, ம‌க்க‌ளின் வ‌லிமையை, ச‌த்திய‌த்தின் வ‌லிமையை அந்த‌ ப‌ணப் பேய்க‌ளுக்கு, பிற்போக்கு வ‌ர்க்க‌த்திற்கு எதிராய் இம‌ய‌மாய் எழுவோம். ஐபிஎல் போன்ற‌ மாய‌ ம‌ய‌க்க‌ங்களிலிருந்து விடுப‌ட்டு, ந‌ம் அடுத்த‌ த‌லைமுறைக‌ளுக்காக‌ நாட்டை காப்பாற்றும் இந்த சீரிய‌ இய‌க்க‌த்தில் இணைவோம். நாட்டை மீட்டெடுப்போம். வாருங்க‌ள்.
                                                        


Register in: http://www.indiaagainstcorruption,org/.
SMS to 52424: JOIN

10 comments:

  1. ”அன்னா ஹசோரி” அவர்களின் அறப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிப்போம்.

    ReplyDelete
  2. Dear Mr Vasan, Sir,
    Today I have received a e-mail in Tamil from my friend about Mr Annaa Hasori which is very interesting.

    If you give your e-mail id, I will forward it to you, Sir.
    vgk

    ReplyDelete
  3. அண்ணா ஹசாரே என்பதுதான் அவர் பெயர்.எந்தப் பொறுப்பில் இருந்தாலும் ஊழல் செய்பவரை விசாரித்து தண்டனை தரும் அதிகாரமுள்ள ஒரு அமைப்புக்காக வேண்டி போராடுகிறார். அந்த BANDWAGON ல் சேர்ந்துபெயர்பெற யார் யாரோ முயற்சிக்கிறார்கள். காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே. நல்லது நடக்க ஆண்டவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  4. அன்னா ஹஸாரேயைப் பற்றி ஒரு இடுகை எழுதிக்கொண்டிருக்கிறேன் வாசன்.

    மெய்யின் சுடர் வீசிப் பரவட்டும்.

    ReplyDelete
  5. Dear Vaiko Sir, my personal mail id: vasanforce@gmail.com
    I am eagarly expecting Your mail.
    Warm Rgds - Vasan

    ReplyDelete
  6. Dear Vasan Sir,

    As I am unable to forward that mail direct to you from my Systems, I have forwarded it to our Sundarji Sir, with a request to forward it to you.

    Moreover the article is only in English & not in Tamil as I have mentioned earlier.

    This is just for your information, please.

    vgk

    ReplyDelete
  7. G.M Balasubramaniam said...
    அண்ணா ஹசாரே என்பதுதான் அவர் பெயர்.எந்தப் பொறுப்பில் இருந்தாலும் ஊழல் செய்பவரை விசாரித்து தண்டனை தரும் அதிகாரமுள்ள ஒரு அமைப்புக்காக வேண்டி போராடுகிறார்/
    பெய‌ர‌லிருந்த‌ த‌வறை சுட்டிய‌மைக்கு ந‌ன்றி. இந்த‌ தொட‌க்க‌ம், முடிவா? இந்த‌ முடிவுதான் தொட‌க்கமா? ஆட்சியாள‌ர்க‌ள் இந்த‌ நிக‌ழ்வின் வலிமையை உணர்ந்த‌ அளவுக்கு அதை நிக‌ழ்த்திய‌வ‌ர்க‌ள், உணர்ந்து ப‌ல‌னை முழுதுமாய் கைய‌கப் படுத்த‌வில்லையோ என்ற‌ குழப்ப‌ம் இருக்கிற‌து.

    ReplyDelete
  8. அன்னா ஹசாரே அவர்களின் அமைப்புக்கு நம் ஆதரவை காட்ட நாம் என்ன செய்ய வேண்டும் வாசன் சார்?

    ReplyDelete
  9. Dear SivaKumaran,
    Appreciate your eagerness, Kindly visit the follwing site and .... SMS too
    Register in: http://www.indiaagainstcorruption,org/.
    SMS to 52424: JOIN

    ReplyDelete
  10. /சுந்தர்ஜி said...
    அன்னா ஹஸாரேயைப் பற்றி ஒரு இடுகை எழுதிக்கொண்டிருக்கிறேன் வாசன்.
    மெய்யின் சுடர் வீசிப் பரவட்டும்./

    காத்திருக்கிறோம், தங்க‌ளின் பார்வையில் ந‌டப்புக் 'காந்திய‌வாதி அன்னா'வைக் காண.

    ReplyDelete