Tuesday, March 29, 2011

மொஹாலியில் தீவிர‌வாதிக‌ள்??


பாக் தீவிர‌வாதிக‌ளின் சிற‌ப்பு ஆலோச‌ணைக் கூட்ட‌ம், ஐஎஸ்ஐ துறையின் இரு சிற‌ப்பு குழுவினருட‌ன், க‌ராச்சி மாரிய‌த் ஹோட்ட‌லின் அறையொன்றில் துவ‌ங்கிய‌து. "நாம் காத்திருந்த‌ ச‌ரியான நேர‌ம், ச‌ரியான இட‌ம், ச‌ரியான ந‌ப‌ர்க‌ள் அமைத்திருக்கிற‌து. உங்க‌ள் திட்ட‌த்தை சொல்லுங்க‌ள்" என்றார் தீவிர‌வாதி த‌லைவ‌ர். "ஹுக்கும்..என்ன பெரிய‌ திட்ட‌ம்! அவுங்க‌ விள‌யாட்டு அமைச்ச‌க‌த்திலிருக்கிற‌ நம்மாளு ப‌த்து நுழைவுசீட்டு அரேஞ்ச் பண்ணுவார்".
                                                                                                
'நுழைவுச்சீட்டே கிடைக்க‌லே, 25000 சீட்டும் பெரிய‌ விவிஐபிக்கு ம‌ட்டும் தான்னுட்டு, ர‌சிக‌ர்க‌ள் எல்லாம் போலிசுங்ககிட்ட‌ அடிவாங்கி ர‌த்த‌க் காய‌த்தோட‌ டிவில‌ காட்டுண‌ங்க‌ளே?' ச‌ந்தேக‌த்தை கிள‌ப்பினார் ஐஎஸ்ஐ ஆள். "அதெல்லாம் அவுங்க‌ளுக்கு ச‌கஜ‌ம். பெங்க‌ளூர், நாக்பூர்ன்னு அடிவாங்குனாலும் ம‌க்க‌ள் மாடு மாதிரி தான் இருப்பாங்க‌. அதையெல்லாம் விடுங்க‌" என்றார் இன்னொரு தீவிர‌வாதி. "டிரிங்ஸ் பிரேக்ல‌, கூல்டிரிங்ஸ் வ‌ண்டிலே தேவையான‌ ஆயுத‌ங்க‌ள், வெடி பொருள் எல்லாம் உள்ளே வ‌ந்துரும்",
'எப்ப‌டி?" குறுக்கிட்டார் ஐஎஸ்ஐ ம‌றுப‌டியும். "நீங்க‌ புதுசா? 1993 பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் பிளாஸ்ட்ல, வெடிம‌ருந்து எல்லாம், இந்திய‌‌ சுங்க‌ அதிகாரிக‌ள், போலிஸ்  துணையோட‌தானே ஸ்பாட்டுக்கு போச்சு. இப்ப‌ ந‌ம்ம‌ ஆளுங்க‌ கோக், பெப்ஸி வ‌ண்டில‌ அதை ஏத்திருவாங்க‌.
அப்ப‌டியே அவுங்க‌ளேட‌ அவுங்க‌ளா க‌லந்து பிர‌த‌ம‌ர், விவிஐபி சினிமா ஸ்டார்க‌ள், தொழில் அதிப‌ர்க‌ள் ஸ்டாண்டு, வீர‌ர்க‌ள் குழுமி இருக்குமிட‌ம் என அதிர‌டியாய் முடித்து விடுவார்க‌ள்".

'அவுங்க‌ செக்யூரிட்டி?' ம‌றுப‌டியும் இடைம‌றித்தார் ஐஎஸ்ஐ ஆள். "நீங்க‌ இந்திய‌ ஆப‌ரேஷனுக்கு ரெம்ப‌ புதுசுன்னு நினைக்கிறேன், அவுங்கயெல்லாம், வ‌ந்திருக்கிற‌ சினிமா ஸ்‌டார்ங்க‌ ப‌க்க‌த்திலேயும், கிரிக்க‌ட் வீர‌ர்க‌ள் ப‌க்க‌த்திலேயும் போய் டிவிக்கார‌ர்க‌ள் யாராவ‌து நம்மையும் க‌வ‌ர் செய்ய‌ மாட்டாங்க‌ளா?, வீட்டில‌ ம‌க‌ன், ம‌கள், மணைவி பாப்பாங்க‌ன்னு அங்கேயே காத்துக்கிடப்பாங்க‌, அவுங்க‌ளப் ப‌ற்றி ஒன்னும் ப‌ய‌மில்லை. எல்லாம் முடிஞ்ச‌ பிற‌கு உள்துறை அமைச்ச‌ருக்கு பின்னாலே நின்னுக்கிட்டு ம‌றுப‌டியும் டிவி காமிராவைத்தான் பாத்துக்கிட்டிருப்ப‌ங்க‌. ஆக‌  29 மார்ச் மொஹாலியில் புத‌ன்கிழ‌மை மாலை மூன்று முத‌ல் ஆறு ம‌ணிக்குள் ஆப்ரேஷன் முடிந்து விடும். சில செய‌ல்முறை தொட‌ர்பு, த‌வ‌றுக‌ள் ப‌ற்றி எல்லாம் அந்த‌ந்த‌த் துறை துல்லிய‌மாய் க‌வ‌னித்துக் கொள்ளும், ஏதாவ‌து ச‌ந்தேக‌ம்?" ஆலோச‌ணை கூட்ட‌த்தை முடிக்க‌ ஆயுத்த‌மானார் தீவிர‌வாதி.
ஐஎஸ்ஐ, "ஒரு ச‌ந்தேக‌ம்" . விரலை நீட்டினார். எரிச்ச‌லை அட‌க்கிக் கொண்டு புருவ‌த்தை உய‌ர்த்தினார் கேளுங்க‌ள் என்ப‌தாய். நீங்க‌ள், இந்தியாவை அழிக்க‌ நினைக்கிறீர்க‌ளா? அல்ல‌து மற்றொரு 2008- 26/11, 2010-ஜெர்ம‌ன் பேக்க‌ரி, 2001-பார்லிமெண்ட‌ தாக்குத‌ல் ன்னு ம‌ற்றுமொரு ச‌ம்ப‌வ‌த்தை நிக‌ழ்த்த‌ போகிறீர்க‌ளா?".

"ம்..ம்.. இந்தியாவை உல‌க‌ வ‌ரைப‌ட‌த்தில் இருந்து நீக்குவ‌துதான் எங்க‌ளின் ல‌ட்சிய‌ம்"  உறுமினார் தீவிர‌வாத‌ த‌லைவ‌ர். 'அப்ப‌டியானால், மொஹாலி கிரிகெட் மைதானத்தில் இருப்ப‌வ‌ர் யாரையும் ஒன்றும் செய்யாதீர்க‌ள்.
அவ‌ர்க‌ள்,  அதைத் தான் செய்து கொண்டிருகிறார்க‌ள்' என்றார் புன்ன‌கையுட‌ன். குழ‌ம்பிய‌ தீவிர‌வாதித் த‌லைவ‌ர் கேட்டார் "என்ன‌ சொல்றிங்க‌?"
நிதான‌மாய் ஐஎஸ்ஐ ஆள் சொன்னார்,
"அவுங்க‌ பிர‌த‌மர், க‌ட்சித் த‌லைவியேட‌ பேச்சை ம‌ட்டும் கேட்டுக்கிட்டு, நூறு கோடிம‌க்க‌ளிடமும், எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு அறிக்கை விட்டுட்டு, வெளிநாட்டு க‌ம்ப‌னிக‌ளுக்கு நாட்டின், நில, நீர், வான் வ‌ள‌ங்க‌ளை எல்லாம் வித்துகிட்டு இருக்கார்.
வருங்கால‌ பிர‌த‌ம‌ க‌ன‌வில் ராகுல், நேருவின் ஐந்தாவ‌து த‌லைமுறையாய் நாட்டை கொள்ளுத் தாத்தா, அப்பா வ‌ழியிலேயே போய் வெளிநாட்டுல‌ ப‌ண‌ம், பொண்ணுன்னு செட்டிலாகி இந்தியாவை ஒரு வ‌ழி ப‌ண்ணத்த‌யாராகிட்டார். இந்த‌ கிரிக்க‌ட் ஸ்டாருங்க‌, முட்டாள் ர‌சிக‌ர்க‌ளின் குருட்டுப் ப‌க்தியால், பூச்சிக் கொல்லியை (கோக்,பொப்ஸி) குடிக்க‌வும், ம‌ற்ற‌ விள‌ங்காத‌ த‌ண்ட‌த்தை விற்க‌வும் விள‌ம்ப‌ர‌ வியாபார‌ம் ப‌ண்ணிட்டு ஒரு நாளுக்கு ஒரு கோடி ச‌ம்பாதிக்கிறார்க‌ள். நாடு அந்நிய‌ப் பொருளை வாங்கி அடுக்கிக் கிட்டு சேமிப்பு இல்லாம‌ல் திண‌ற‌ப் போகிற‌து. தேச‌த்தின் பெருமையான‌, பொக்கிஷ‌மான‌‌ காந்தியையே ஒரு புத்த‌க‌த்தில், அவ‌ர் ஒரு 'இருபால் சுக‌வாசி'ன்னு எழுதி நூற்றாண்டு இம்மேஷை ஒரே நாளில் கிழிச்சாச்சு.

கொஞ்ச‌ நாள் விட்டா இந்த‌ கொள்ளைகார‌, லஞ்ச அர‌சிய‌ல்வாதிக‌ளும், த‌ன்ந‌ல‌ விளையாட்டு, சுய‌ந‌ல‌ சினிமா ஸ்டார்க‌ளும், ப‌ணத்தை ம‌ட்டுமே 'எண்ணும்' தொழில‌திப‌ர்க‌ளும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் உங்க‌ளின் ஆசையை பூர்த்தி செய்வார்க‌ள். அதைவிட்டுட்டு நீங்க‌ள் ப‌ய‌ங்க‌ரவாத‌த் தாக்குத‌ல் ந‌டத்தி இந்த‌ மாதிரி ஆட்க‌ள் எல்லாம் மொத்த‌மாய்ப் போய்ச் சேர‌, ம‌க்க‌ள் எழுச்சி அடைந்து,ஒரு புது த‌லைமுறை ந‌ம் ப‌ய‌ங்க‌ர‌ வாத‌த்துக்கு எதிராய் கிளம்பினால், நம் பாகிஸ்தான் ஒருவார‌த்திற்குள், உல‌கவ‌ரை ப‌ட‌ம் என்ன‌, நிஜ‌த்திலேயே இல்லாம‌ல் போய்விடும். ஆக‌வே இந்தியாவை இப்ப‌டியே விட்டு விடுங்க‌ள். அவ‌ர்க‌ளே அதை மெல்ல‌ மெல்ல‌ அழியும் ப‌டிப் பார்த்துக் கொள்வார்க‌ள்" என்றார் முத்தாய்ப்பாய்.

விக்கித்து நின்ற‌ன‌ர் தீவிர‌வாதிக‌ள். "ஐஎஸ்ஐ ன்னா என்னான்னு நிறுபிசுட்டிங்க. சூப்ப‌ர்" என சொல்லி க‌லைந்த‌ன‌ர்.
ஏப‌ர‌ல் ஒன்னாம் தேதி, விக்கிலீக் இந்த‌ ச‌திச் செய்தியை வெளியிட, அதை ந‌ம்ப‌ முடியாது, இது பொய், நம்ப‌த்தகுந்த‌து அல்ல‌, என விளையாட்டு ம‌ந்திரி சொல்வ‌த‌ற்கு முன்னாலே, உண‌வு ம‌ந்திரியும், தொலைதொட‌ர்பு ம‌ந்திரியும் க‌த்தி கூச்ச‌லிடுகிறார்க‌ள். இங்கோ மானாட‌ ம‌யிலாட‌வில், குண்ட‌ம்மா ஆடுவ‌தைப் பார்த்து ர‌சித்து டாஸ்மாக் க‌ட்டிங்கிள் கிற‌ங்கி கிட‌க்கிற‌து த‌மிழின‌ம்.








13 comments:

  1. சுளுக்கெடுப்பதில்தான் எத்தனை விதம் வாசன்? முடிந்த வரை சுளுக்கெடுப்போம்.

    ReplyDelete
  2. அன்பின் வாசன்
    என்னையும் பொருட்டென மதித்து பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். மிக்க நன்றி. உங்களது வலையினை எனது வலையின் முகப்பு பக்கத்தில் வைத்துவிட்டேன் . இனி தொடர்ந்து பார்ப்பேன். வாசித்துவிட்டு பேசுகிறேன். நன்றி தோழர்

    ReplyDelete
  3. அவுங்கயெல்லாம், வ‌ந்திருக்கிற‌ சினிமா ஸ்‌டார்ங்க‌ ப‌க்க‌த்திலேயும், கிரிக்க‌ட் வீர‌ர்க‌ள் ப‌க்க‌த்திலேயும் போய் டிவிக்கார‌ர்க‌ள் யாராவ‌து நம்மையும் க‌வ‌ர் செய்ய‌ மாட்டாங்க‌ளா?, வீட்டில‌ ம‌க‌ன், ம‌கள், மணைவி பாப்பாங்க‌ன்னு அங்கேயே காத்துக்கிடப்பாங்க‌, அவுங்க‌ளப் ப‌ற்றி ஒன்னும் ப‌ய‌மில்லை. எல்லாம் முடிஞ்ச‌ பிற‌கு உள்துறை அமைச்ச‌ருக்கு பின்னாலே நின்னுக்கிட்டு ம‌றுப‌டியும் டிவி காமிராவைத்தான் பாத்துக்கிட்டிருப்ப‌ங்க‌அவுங்கயெல்லாம், வ‌ந்திருக்கிற‌ சினிமா ஸ்‌டார்ங்க‌ ப‌க்க‌த்திலேயும், கிரிக்க‌ட் வீர‌ர்க‌ள் ப‌க்க‌த்திலேயும் போய் டிவிக்கார‌ர்க‌ள் யாராவ‌து நம்மையும் க‌வ‌ர் செய்ய‌ மாட்டாங்க‌ளா?, வீட்டில‌ ம‌க‌ன், ம‌கள், மணைவி பாப்பாங்க‌ன்னு அங்கேயே காத்துக்கிடப்பாங்க‌, அவுங்க‌ளப் ப‌ற்றி ஒன்னும் ப‌ய‌மில்லை. எல்லாம் முடிஞ்ச‌ பிற‌கு உள்துறை அமைச்ச‌ருக்கு பின்னாலே நின்னுக்கிட்டு ம‌றுப‌டியும் டிவி காமிராவைத்தான் பாத்துக்கிட்டிருப்ப‌ங்க‌//

    //அவ‌ர்க‌ள், அதைத் தான் செய்து கொண்டிருகிறார்க‌ள்' //

    திருந்தாத ஜென்மங்களுக்கு எந்த சொல் தைக்குமோ தெரியலையே...

    ReplyDelete
  4. DEAR VASAN, DUE TO SITUATIONS BEYOND MY CONTROL, I WAS AND I WILL NOT BE AVAILABLE IN BLOG WORLD.HOWEVER YOUR SATIRE WHICH I ENJOYED MAKES ME TO PUT MY COMMENTS. SIMPLY SUPERB. I KNOW HOW MUCH YOU MUST BE FEELING TO WRITE ON THE PATHETIC CONDITIONS EXISTING IN OUR COUNTRY.

    ReplyDelete
  5. HAVE I MADE A MISTAKE? I WILL BE AVAILABLE IN A FEW DAYS TIME.

    ReplyDelete
  6. /சுந்தர்ஜி said...
    சுளுக்கெடுப்பதில்தான் எத்தனை விதம் வாசன்? முடிந்த வரை சுளுக்கெடுப்போம்./
    உடுக்கு அடித்துப் பார்க்கிறோம், அர‌சிய‌ல் பேய்க‌ளை விர‌ட்ட‌. ஓடுவ‌து பேயா என்ப‌து போடப்ப‌டும் ஓட்டில் இருக்கிற‌து. சுந்த‌ர்ஜி...ஆகட்டும் பார்க்க‌லாம்.

    ReplyDelete
  7. "நிலாமகள் said...
    //அவ‌ர்க‌ள், அதைத் தான் செய்து கொண்டிருகிறார்க‌ள்' //

    திருந்தாத ஜென்மங்களுக்கு எந்த சொல் தைக்குமோ தெரியலையே..."

    சொல்லித் திருந்தும் ஜென்ம‌ங்க‌ளா இவ‌ர்க‌ள் என்கிறீர்க‌ளா நிலாம‌க‌ள்?
    திருந்தாத‌ ஜென்ம‌ங்க‌ள், இருந்தென்ன‌ லாப‌ம், ஓடு, ஓடு என ஓட்டால் விர‌ட்டுவோம்.

    ReplyDelete
  8. G.M Balasubramaniam said...
    DEAR VASAN, DUE TO SITUATIONS BEYOND MY CONTROL, I WAS AND I WILL NOT BE AVAILABLE IN BLOG WORLD.HOWEVER YOUR SATIRE WHICH I ENJOYED MAKES ME TO PUT MY COMMENTS. SIMPLY SUPERB. I KNOW HOW MUCH YOU MUST BE FEELING TO WRITE ON THE PATHETIC CONDITIONS EXISTING IN OUR COUNTRY.
    ஐயா, இந்த‌ சூழ‌லிலும். உங்க‌ளின் இந்த ஆழ்ந்த‌, நுட்ப‌மான அவ‌தானிப்பு, பிர‌மிக்க‌ வைக்கிற‌து.
    உங்க‌ள் உத்யோக‌ கால‌த்தில் எப்ப‌டி அர‌சு ந‌ட‌வடிக்கைக‌ளை, செய‌ல்பாட்டைப் பொறுத்துக் கொண்டீர்க‌ள்?

    ReplyDelete
  9. கற்பனையே என்றாலும் அனைத்து உண்மைகளையும், நாட்டு நடப்பையும் தான் அழகாகப்புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள். சுந்தர்ஜி அவர்கள் சொல்வதுபோல செம்மையாகவே சுளுக்கெடுக்கிறீர்கள். பார்ப்போம். என்னதான் நடக்கப்போகிறது என்று.

    சிந்திக்க வைக்கும் எழுச்சியான பதிவுக்கு/பகிர்வுக்கு பாராட்டுக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    vasan said...
    //ந‌ம்மை வ‌ளர்த்த‌ வ‌யிறுக்கு நன்றி சொல்ல‌,
    நாம் வ‌ளர்க்கிறோம் தொந்தியை.//

    தாங்கள் கூறும் இந்தக்கருத்து மிகவும் நியாயமாகவே உள்ளது, சார். I fully accept with you, Sir.

    நீண்ட நாட்களுக்குப்பின் அத்திப்பூத்தால் போல வந்து அருமையானதொரு விஷ்யம் கூறியுள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ”வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க உதயம்”, மொத்தம் எட்டு பகுதிகளில் கடைசி பகுதி (பகுதி-8) மட்டுமாவது படித்தீர்களா?

    அரசியல் விஷயங்கள் நகைச்சுவையுடன் அள்ளித் தெரித்திருப்பதால் உங்களுக்கு அது நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

    தயவுசெய்து படித்துவிட்டு அதற்கு மட்டும் பின்னூட்டம் அளிக்கவும். அன்புடன் vgk
    April 1, 2011 4:05 AM

    ReplyDelete
  11. /வை.கோபாலகிருஷ்ணன் said...
    கற்பனையே என்றாலும் அனைத்து உண்மைகளையும், நாட்டு நடப்பையும் தான் அழகாகப்புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள். சுந்தர்ஜி அவர்கள் சொல்வதுபோல செம்மையாகவே சுளுக்கெடுக்கிறீர்கள். பார்ப்போம். என்னதான் நடக்கப்போகிறது என்று.
    சிந்திக்க வைக்கும் எழுச்சியான பதிவுக்கு/பகிர்வுக்கு பாராட்டுக்கள். அன்புடன் vgk /

    த‌ங்க‌ளின் ஆழ்ந்த‌ அவ‌த‌னிப்பும், தீர்க்க‌மான‌ க‌ருத்துரையும், ஆன‌ந்த‌ விக‌ட‌ன் விம‌ர்ச‌ன‌ம் போல் இருக்கிற‌து. நன்றிக‌ள் திரு வைகோ அவர்க‌ளே

    ReplyDelete
  12. நம்ம நாட்டு நடப்பை என்னாமா அலசியிருக்கீங்க.. உங்க ப்ளாக் டைட்டில் பதிவுல தெரியுதுங்க...
    //டாஸ்மாக் க‌ட்டிங்கிள் கிற‌ங்கி கிட‌க்கிற‌து த‌மிழின‌ம்.// மிகவும் ரசித்தேன். ;-))

    ReplyDelete
  13. /RVS said...
    நம்ம நாட்டு நடப்பை என்னாமா அலசியிருக்கீங்க.. உங்க ப்ளாக் டைட்டில் பதிவுல தெரியுதுங்க...
    //டாஸ்மாக் க‌ட்டிங்கிள் கிற‌ங்கி கிட‌க்கிற‌து த‌மிழின‌ம்.// மிகவும் ரசித்தேன். ;-))/

    த‌ங்க‌ளின் அத்திப்பூ வ‌ருகையும்,பின்னோட்ட‌மும், இப்ப‌திவுக்கு ஒரு சிற‌கு. நன்றி திரு RVS.

    ReplyDelete