Wednesday, March 23, 2011

திமுக‌ அர‌சு - தேர்த‌ல் க‌மிஷன் - அறிக்கை


"மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் - கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?" முதல்வ‌ர் தேர்த‌ல் ஆண‌ய‌த்துக்கு அனுப்பிய‌ அறிக்கையை, மேலோட்ட‌மாக‌ ப‌டிக்கும் போது ச‌ரியாகத் தோன்றும்.
இதே‌ ப‌ழமொழியை திமுக‌ அர‌சுக்குப் பொருத்திப் பார்த்தால், தேர்த‌ல் க‌மிஷனின் இந்த‌ ந‌டிவ‌டிக்கைகளின் அர்த்த‌ம், நிர்ப‌ந்த‌ம் புரியும். தேர்த‌ல் முடிவு ஒரு மாத‌ம் த‌ள்ளிப் போவ‌த‌ற்கு மேற்கு வ‌ங்க‌ தேர்த‌ல் கார‌ணம் காட்ட‌ப்படுகிற‌து. இந்த‌ தேர்த‌ல் முடிவுக‌ள் (த‌மிழ்நாடு, பாண்டி, கேர‌ளா) அங்குள்ள காங்கிர‌ஸ், க‌ம்யூனிஸ்ட் தேர்த‌லை பாதிக்கும் என்ப‌தில் நியாய‌ம் இருக்கிற‌து.

க‌ல்யாண‌ மண்ட‌ப‌ங்க‌ளில், வெளியூர் க‌ட்சிகார‌ர்க‌ளை த‌ங்க‌ வைத்து சாராய‌ம், பிரியாணி போட்டு, க‌ள்ள ஓட்டு மற்றும் ப‌ல அராஜ‌ங்க‌ளுக்கும் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் ப‌ய‌ன் ப‌டுத்திய‌தால் இந்த‌ ம‌ண்ட‌ப‌ சோத‌னை ந‌ட‌க்கிற‌து.


திரும‌ங்க‌ல‌த்தில் விஸ்வ‌ரூப‌ம் எடுத்த‌ பின்பு, ஓட்டுக்குப் ப‌ண‌ம், டோக்க‌ன், ஹார்லிக்ஸ், குட‌ம், மூக்குத்தி, க‌டிகார‌ம் என தேர்த‌லை கேலிக்கூத்தாய், தெருக்கூத்தாய் ஆக்கிய‌து யார்?  ம‌களிர் சுய‌குழுவுக்கு த‌னித் த‌னியாக‌வும், தெரு, வ‌ட்ட‌ம், க‌வுன்சில் வாரியாக‌ பிரித்தும், இந்த‌ வார்டுக்கு இவ்வ‌ளவு, அவ்வ‌ள‌வுக்கு எவ்வ‌ள‌வு ஓட்டு? என தேர்த‌லை சீட்டுக்க‌ம்ப‌னியாய் ஆக்கிவிட்ட‌தால், தேர்த‌ல் க‌மிஷன் இந்த‌ ப‌ண ந‌ட‌மாட்ட‌த்தைக் கட்டுப்ப‌டுத்த வேண்டிய‌ க‌ட்டாய‌த்துக்கு த‌ள்ளபப்டுகிற‌து. தாசில்தார் த‌டுத்தும் நிறுத்தாம‌ல் ம‌துரை வீர‌ரின் கார் மாற்று வ‌ழியில் புகுந்து சென்ற‌தாய் நேற்றைய‌ புகார். இவ‌ர்க‌ள் தான் நாட்டின் ச‌ட்ட‌த்தை நிர்வ‌கிக்கும் ம‌ந்திரி பிர‌தானிக‌ள். கொடுமை.

க‌ட‌ந்த‌ தேர்த‌ல்களில், உங்க‌ளின் த‌ற்போதைய‌ தோழ‌மை க‌ட்சியே, சேலை வேஷ்டி ஏற்றி சென்ற‌ வாக‌ன‌ங்க‌ளை ம‌றித்து ஆர்பாட்ட‌ம் செய்தா‌ர்க‌ள் தானே? அடுத்த‌ க‌ட்சியின் கொடியைக் க‌ட்டிக் கொண்டு ப‌ணங்க‌ளை பெரிய‌ கார்க‌ளில் க‌ட‌த்துத‌ல், ரூட் ப‌ஸ்ஸில் பார்ச‌லாக‌ ப‌ணங்க‌ளை ஓரிட‌த்திலிருந்து மற்றொரு இட‌த்திற்கு மாற்றுத‌ல் ம‌க்க‌ள் அறிந்த‌ செய்திக‌ள் தான். தனி விமான‌ங்க‌ளில் வெளிநாட்டுக்கே ப‌ணமூட்டைக‌ள் போன‌தாய் வட இந்திய‌ செய்திக‌ள் கூறுகின்றன. ராஜாவின் 2ஜி ப‌ணம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ள் மூல‌ம் மொருஷிய‌ஸ், சைப்ர‌ஸ் நாடுக‌ளுக்குப் போய் திரும்பி இங்கேயே வந்திருக்கிற‌து என்கிற‌து இதை விசாரிக்கும் சிபிஐ.சாதிக்பாட்ஷாவின் ம‌ர‌ண‌த்திற்கு மிக‌ முக்கிய‌ கார‌ணமே இது ப‌ற்றிய‌ விசார‌ணைதானே?
விக்கிலீக், அழ‌கிரியும்(முதல்வ‌ரின் ம‌க‌ன்), கார்த்திக் சித‌ம்ப‌ர‌மும்(மத்திய‌ உள்துறை ம‌ந்திரியின் ம‌க‌ன்)சென்ற‌ தேர்த‌லில் ப‌ணம் ப‌ட்டுவாடா செய்தார்க‌ள் என்கிற‌து. அதிகார‌த்திலிருக்கும் த‌ந்தைக‌ளிட்மிருந்து ஒரு ப‌திலும் இல்லை. நாட்டின் ச‌ட்ட‌ம் ஒழுங்கை பாதுகாக்க‌ வேண்டிய‌ காவ‌ல்/உள‌வுத்துறையை த‌ன‌க்கான சுயலாப‌ங்க‌ளுக்காக முத‌ல்வ‌ர் ப‌ய‌ன்ப‌டுத்தினால், அவ‌ர்க‌ளை தேர்த‌ல் நேர‌ங்க‌ளிலாவ‌து மாற்றிதானே ஆக‌ வேண்டும். குற்ற‌ங்க‌ளை க‌ண்ட‌றிந்து நாட்டை நல்வ‌ழிப்ப‌டுத்த‌ வேண்டிய‌ அர‌சே (க‌ங்கை) குற்ற‌ங்க‌ளை வ‌ள‌ர்த்து, கொள்ளைய‌டித்து சூத‌ன‌மானால்/குற்றவாளியானால், க‌ங்கைச்சும‌க்கும் சிவ‌ன் (தேர்த‌ல் க‌மிஷ‌ன்) அதைப் மாற்ற (தேர்த‌ல் நேர‌த்திலாவ‌து) ச‌ட்ட‌ப்ப‌டி ‌ந‌ட‌வ‌டிக்கை எடு‌த்துத்தானே ஆகவேண்டும்.
இதை அதிகார‌ மீற‌ல் என்கிற வருத்த‌மான‌ முத‌ல்வ‌ரின் இந்த‌ அறிக்கை, பொது நோக்க‌ர்க‌ளுக்கு'சாத்தான் வேத‌ம் ஓதுவ‌தாய்' தோன்றுகிற‌து என்கின்ற‌ன‌ர்.

6 comments:

  1. தேர்தல் கமிஷன் தனக்கு வேண்டிய கமிஷனை வாங்க்கொண்டு ஒதுங்கிபோக வேண்டியத்தானே.. என்பது முதல்வர் நிலைப்படு..

    ReplyDelete
  2. இதை அதிகார‌ மீற‌ல் என்கிற வருத்த‌மான‌ முத‌ல்வ‌ரின் இந்த‌ அறிக்கை, பொது நோக்க‌ர்க‌ளுக்கு'சாத்தான் வேத‌ம் ஓதுவ‌தாய்' தோன்றுகிற‌து என்கின்ற‌ன‌ர்.


    இப்படி சொன்ன சாத்தானுக்கு கெட்ட கோபம் வருமே அப்ப என்ன செய்வீங்க...

    ReplyDelete
  3. VAASAN,ARE WE NOT CAUGHT BETWEEN THE DEVIL AND DEEP SEA.?

    ReplyDelete
  4. வினோத் said...
    தேர்தல் கமிஷன் தனக்கு வேண்டிய கமிஷனை வாங்க்கொண்டு ஒதுங்கிபோக வேண்டியத்தானே.. என்பது முதல்வர் நிலைப்படு..

    வினோத் said...
    இப்படி சொன்ன சாத்தானுக்கு கெட்ட கோபம் வருமே அப்ப என்ன செய்வீங்க...

    முத‌ல் வ‌ருகைக்கும் பின்னோட்ட‌ங்க‌ளுக்கும் ந‌ன்றி திரு வினேத். யானைக‌ள் உல‌வும் அந்த‌ அர‌சிய‌ல் காட்டில், ந‌ம் எழுத்துக்க‌ள் எல்லாம் வெறும் எறும்புக‌ள். த‌னித்திருக்கும் வ‌ரை யாது ப‌ய‌னும் இல. இணைந்து எறும்புப் ப‌டையானால், அத‌ற்கு எதிர் யாரும் வ‌ரமுடியாது. (நேஷ்ன‌ல் சியாக்ர‌ஃபி)

    ReplyDelete
  5. G.M Balasubramaniam said...
    //VAASAN,ARE WE NOT CAUGHT BETWEEN THE DEVIL AND DEEP SEA.?/
    ஆமாம் ஐயா. அதுவும் க‌ட‌ல் 'சுனாமி'க் க‌ட‌லாயும், அர‌க்க‌ர்க‌ள் "அணுக்க‌திர்"வீச்சோடும் காத்திருக்கிறார்க‌ள். ஜ‌ப்பானிய‌ ம‌க்க‌ளாய் உழைப்பு, நேர்மை, ப‌ணிவு இருந்தால் ம‌ட்டுமே இத‌னை எதிர் கொள்ள‌லாம்.

    ReplyDelete
  6. //ந‌ம் எழுத்துக்க‌ள் எல்லாம் வெறும் எறும்புக‌ள். த‌னித்திருக்கும் வ‌ரை யாது ப‌ய‌னும் இல. இணைந்து எறும்புப் ப‌டையானால், அத‌ற்கு எதிர் யாரும் வ‌ரமுடியாது. (நேஷ்ன‌ல் சியாக்ர‌ஃபி)//

    தன்னம்பிக்கையூட்டும் நல்ல பதில்.

    //அதுவும் க‌ட‌ல் 'சுனாமி'க் க‌ட‌லாயும், அர‌க்க‌ர்க‌ள் "அணுக்க‌திர்"வீச்சோடும் காத்திருக்கிறார்க‌ள். ஜ‌ப்பானிய‌ ம‌க்க‌ளாய் உழைப்பு, நேர்மை, ப‌ணிவு இருந்தால் ம‌ட்டுமே இத‌னை எதிர் கொள்ள‌லாம்.//

    பொருத்தமான ஒப்பீட்டுடன் ஆன சரியான பதில்.

    பராட்டுக்கள்.

    ReplyDelete