Sunday, March 20, 2011

மாறும் அர‌சிய‌ல் அரிச்சுவ‌டி.




த‌மிழ‌க தேர்த‌லில், ப‌ர‌வ‌லாய் வாக்க‌ளிக்காது ஒதுங்கியே இருந்து வ‌ந்த‌ ம‌த்திய‌த‌ர‌ ம‌க்க‌ள், த்ற்போதைய‌‌ திமுக‌ ஆட்சியின், அள‌வு மீறிய‌ குடும்ப‌ அர‌சிய‌ல், அதிகார‌ துஷ்பிர‌யோக‌ம், ச‌ர்வாதிகார‌ம், பொருளாதார‌ பின்ன‌டைவு, நில ஆக்கிர‌மிப்பு, ஊட‌க‌ மேலாண்மை, க‌ட‌ன் சுமை, காவ‌ல்துறையின் ச‌ட்ட‌ ஒழுங்கு நிலை, ம‌ணல் கொள்ளை, விலைவாசி உய‌ர்வு,விவாச‌ய புற‌க்க‌ணிப்பு, பெரியாறு, காவேரி பிரச்னை, ஈழ‌த்த‌மிழ‌ர் கொள்கை குழ‌றுப‌டி எனப் ப‌ல‌ கார‌ணங்க‌ளால், ஆளும்‌ அர‌சுக்கு எதிராய் வாக்க‌ளிக்க‌க் காத்துக் கொண்டிருக்கிறார்க‌ள்.

மாநில‌ம் ம‌ட்டும‌ல்லாது, மத்தியிலும் இவ‌ர்க‌ளின் லஞ்ச‌ம்,விண்ணைத் தாண்டிய‌ 2ஜி ஊழ‌ல், அதிகார‌ ஆண‌வ‌ம், டாடா(வோல்டாஸ்) விவ‌கார‌ம், க‌லைஞர் டிவிக்கு (ஸ்வாண் டெலிகாம்)டிபி ரியாலிட்டியின் 216 கோடி க‌ட‌ன் விவ‌கார‌ம், "இந்திய‌ வ‌ர‌லாற்றில் முத‌ன் முறையாக‌" முத‌ல்வரின் ம‌ணைவியும், ம‌களும் ம‌த்திய‌ சிபிஐ அதிகாரிக‌ளால் விசாரிக்க‌ப்ப‌ட்ட‌து என‌ இங்கும் திமுகவினரால், த‌மிழ‌ர்க‌ளின் த‌ர‌ம் தாழ்ந்து அதன் எதிர‌லை ஜ‌ப்பானின் சுனாமியாய் அழிக்க‌க் காத்திருக்கிற‌து.

ஜெயாவின் ப‌ழைய‌ த‌னிச் செல்வாக்கு, அவர‌து முந்தைய‌ ஆட்சி ல‌ட்ச‌ண‌ங்க‌ளால் ப‌லவீன‌மாய் ப‌ய‌னற்றுப் போன‌து சென்ற‌ இரண்டு தேர்த‌ல் தோல்விக‌‌ளில் தெரிந்த‌தே. துரியோத‌னுக்குச் ச‌குனியாய், ச‌சிக‌லா குடும்ப‌த்தின் ப‌க‌டையாட்ட‌ங்க‌ள் இவரின் ப‌ல தோல்விக‌ளுக்கு முக்கிய கார‌ண‌ம். அவரின் விதி இன்றும் அது தொட‌ர்கிற‌து. தேர்த‌லின் வாக்காள‌ர்க‌ள் அறிவிப்பில் தெரி(ந்)த்த அவ‌ரது தன்னிச்சைத‌ன‌ம், அவ‌ர் மீதான‌ ஒரு அவ‌ந‌ம்பிக்கையை கூட்ட‌ணியிர‌ட‌மும், பொதும‌க்க‌ளிட‌மும் ஒரு க‌ச‌ப்பை ஏற்ப‌டித்தி விட்ட‌து.

"இப்ப‌வே இந்த‌ திமிறுனா! ஆட்சிக்கு வ‌ந்துட்டா?" என்ற‌ ப‌ய‌ங்க‌ல‌ந்த கோப‌த்தை தூண்டி விடுகிற‌து. எதிரின் ப‌ல‌வீன‌த்தை இவ‌ரின் ப‌ல‌மாக மாற்றிக்கொள்ளும் திற‌மையை அவ‌ரின் அக‌ங்கார‌த‌ன்மை வீண‌க்கிவிட‌க்கூடாது. கிடைத்திருக்கும் இந்த‌ வாய்ப்பை, கூட்டணி த‌லைமைக‌ளுட‌ன் க‌ல‌ந்து இணைந்து ப‌ய‌ன்ப‌டுத்தினால் அதிக‌ லாப‌ம் பெற‌ப்போவ‌து ஜெயா தான்.


 நீண்ட‌கால‌மாக உங்க‌ளுடனிருந்து ப‌ல‌ த‌லைவ‌ர்க‌ளை திமுக‌விட‌ம் இழ‌ந்து ஈழ‌க்‌கொள்கையோடு ம‌ட்டும் நிற்கும் வைகோ மீது இந்த‌ ம‌த்திய‌த‌ர‌ மக்‌‌க‌ள் பிரிய‌ம் வைத்திருக்கிறார்க‌ள் (பாவ‌ம் இவ‌ரும் நம்மைப் போல‌ பொழைக்க‌த் தெரியாத‌வ‌ர்), என்ப‌து மிக‌ முக்கியமான‌து.

வைகோ தான் கேட்ட‌ 21 தொகுதி 12ஆக‌ குறைக்கப்ப‌ட்ட‌தால், அதிமுக‌ அணியிலிருந்து வில‌கி, தேர்த‌லை புறக‌ணிக்கிறார். இது தேர்ச் ச‌க்க‌ர‌த்தின் அச்சாணி க‌ழன்‌ற‌த‌ற்கு ஒப்பாக‌லாம்.

ஆப்பிரிக்க வ‌ளைகுடா நாடுக‌ளில் (துனிஷியா, எகிப்து,ப‌ஃஹ‌ரின், ஏம‌ன், சிரியா, செளதி, லிபியா) வெடிக்கும் இளைய‌ த‌லைமுறையின‌ரின் புர‌ட்சியை, இந்திய‌ மென்பொருள் சார்ந்த, சார‌த‌ புதிய‌ த‌லைமுறை க‌வ‌னித்து இங்கும் ஒரு மாற்ற‌த்திற்காக‌ காத்துக் கொண்டிருக்கிற‌து.

சூழ்நிலையை அறியாது மீண்டும் ச‌சிக‌லாவின் க‌ண்ணாடி வ‌ழியாய் த‌வறாய், மீண்டும் த‌ன்னிச்சையாய் ந‌டந்து கூட்ட‌ணிக‌ளை அர‌வ‌ண‌க்காது தேர்த‌ல் க‌ள‌ம் க‌ண்டால், அதிமுகவின் அழிவை நீங்க‌ள் துவ‌க்கிய‌தாய் ச‌ரித்திர‌ம் சொல்லும். ச‌ரித்திர‌த்தை விடுங்க‌ள், எதிர்கால‌த்தில் ஓய்வெடுக்க‌ப் போக‌ "கொட‌ நாடு ப‌ங்க‌ளா" கூட‌ உங்க‌ளிட‌ம் இருக்காது.

அர‌சிய‌ல் அரிச்சுவ‌டியாகிய‌, திமுக 30%, அதிமுக‌ 33%, காங் 10%, தேதிமுக‌ 8.5%, க‌ம்யூ 1.5%, ம‌திமுக‌ 1% என்ற ப‌ஞ்சாங்க‌த்தை, வ‌ரும் (முத‌ன் முறை வாக்க‌ளிக்கும்) 'புதிய‌ த‌லைமுறை"யும் ம‌ற்றும் "வாக்க‌ளிக்காம‌லே இருந்த‌ மத்திய‌த‌ர‌ ம‌க்க‌ளும்" மா(ற்)றி புதிய‌ க‌ணக்கைத் தொட‌ங்க இருக்கிறார்க‌ள்.




9 comments:

  1. நான்49-o போடலாம்னு இருக்கேன்.
    ஆதரவு தர்ரவுங்க கை தூக்குங்க

    ReplyDelete
  2. /ஆகாயமனிதன்.. said...
    :) /
    ந‌ன்றி. ஏன் சிறா மேக‌மாய்,ஒரு கீற்றாய்? வாருங்க‌ள் கார்த்திகை மேக‌த்துட‌ன் ஆகாயம் நிறைத்து.

    ReplyDelete
  3. சிவகுமாரன் said...
    நான்49-o போடலாம்னு இருக்கேன்.
    ஆதரவு தர்ரவுங்க கை தூக்குங்க.
    போன பாராளும‌ன்ற‌ தேர்த‌லுக்கு, குடும்ப‌த்தோட‌, ரிசிஸ்ட‌ர்ல‌ த‌னியா பெய‌ர், விலாச‌ம் குறிச்சிட்டு 49ஓ தான் போட்டோம். நமது ஓட்டு க‌ள்ள‌ ஓட்டாகவில்லை என்ப‌தைத் த‌விர வேறு பெரிய‌ மாற்ற‌ம் ஏதும் இல்லை. ஒட்டு மொத்த‌ தொகுதியும் இதை செய்தால், ம‌று தேர்த‌ல் அறிவிக்க‌ப்ப‌டும். முத‌லில் போட்டியிட்ட‌ யாரும் இதில் போட்டியிட‌ முடியாது. அவ்வாறு ந‌டக்குமா?

    ReplyDelete
  4. புதிய இலவச அறிவிப்புகளைப் பார்த்தீர்களா.?ஆங்கிலத்தில் சொல்வது போல, BEGGARS CAN NOT BE CHOOSERS.!

    ReplyDelete
  5. /G.M Balasubramaniam said...
    புதிய இலவச அறிவிப்புகளைப் பார்த்தீர்களா.?ஆங்கிலத்தில் சொல்வது போல, BEGGARS CAN NOT BE CHOOSERS.!/
    Dear Sir,
    The irony is the ruler has chosen us, as the BEGGERS and they will BEG us to vote for them.

    ReplyDelete
  6. //ஆப்பிரிக்க வ‌ளைகுடா நாடுக‌ளில் (துனிஷியா, எகிப்து,ப‌ஃஹ‌ரின், ஏம‌ன், சிரியா, செளதி, லிபியா) வெடிக்கும் இளைய‌ த‌லைமுறையின‌ரின் புர‌ட்சியை, இந்திய‌ மென்பொருள் சார்ந்த, சார‌த‌ புதிய‌ த‌லைமுறை க‌வ‌னித்து இங்கும் ஒரு மாற்ற‌த்திற்காக‌ காத்துக் கொண்டிருக்கிற‌து.//

    இந்த அறிக்கை நல்லாவே இருக்கு. பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் ஆன எச்சரிக்கை. கவனப்படுத்திக் கொண்டேயிருங்கள். விடியும் ஒருநாள்.

    ReplyDelete
  7. நிலாமகள் said...
    /இந்த அறிக்கை நல்லாவே இருக்கு. பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் ஆன எச்சரிக்கை. கவனப்படுத்திக் கொண்டேயிருங்கள். விடியும் ஒருநாள்./

    உங்களின் இந்த‌ ஆழ்ந்த‌ பார்வையும், தெளிந்த‌ பின்னூட்ட‌மும் தான் உங்க‌ளின் த‌னித்துவ‌ம்.
    மிக்க‌ நன்றி நிலாம‌க‌ள் அவ‌ர்க‌ளே.

    ReplyDelete
  8. //The irony is the ruler has chosen us, as the BEGGERS and they will BEG us to vote for them.//

    சபாஷ் ! திருவோட்டுடன் வோட்டுக்கேட்டு கிளம்பியாச்சு !! நாம் இனி பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டியது தான் பாக்கி !!!

    ReplyDelete