
ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, கடைசியிலே மனுசனையே கடிச்ச கதையால்லா இருக்கு!! பழக்கமான கிராமத்து சொல் வழக்கு இங்கே நிகழ்வாய்.
மூன்று (ஜெயிக்காத) தொகுதிக்காக ஆறு மத்திய மந்திரிகளை (இன்னும் நாலுவருஷம் இருக்கும்) பதவியை விலகச் செய்யுமளவிற்கு முக வின் அரசியல் சாணக்கியம் இன்னும் சரியவில்லை.1, ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாய் அதுவும் பாரளுமன்ற தேர்தல் நேரத்தில் கொல்லப்பட்ட போது துண்டிக்காத உறவை,
2, தமிழகமீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்ட போது வெட்டாத உறவை,(ஆட்டை கடிச்சாச்சு)
3, 2-ஜி விசாரணையில் ராஜா, பதவி விலகி, விசாரணை, சிபிஐ காவல், திகார் சிறை காவல் நீடிப்பு வரை நீளும் போதும் செய்யாத விலகலை,
4, இப்போ சிபிஐ திமுக தலைமை அலுவலகதிலுள்ள கலைஞர் டிவி வரையும் இரவோடு இரவாக ரெய்ட் நடத்தி விட்டார்கள். சரத்குமார் அப்பவே அறிக்கை வெளியிட்டார். (மாட்டை கடிச்சாச்சு). அப்புறமும் மத்தியில் தொடர்பு அப்படியே இருக்கிறது. கட்சியும், கட்சிகாரங்களும் அப்படியே இருக்காங்க.
ஆனால் வழங்கப்பட்ட 60 சீட்டை, 63 ஆக கேட்ட ஒரு நிகழ்வுக்காய் (!!) இவ்வளவு காலம் (7 ஆண்டுகள்) நீடித்த உறவு துண்டிக்கப் பட்டதாய் அறிவிப்பு வருகிறது.
ஏன்?
சிபிஐ, உச்சநீதி மன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவாவது, டாடா, ராடியா டேப்பு, வோல்டாஸ் சொத்து, இப்படி வெளிவந்த விசயத்திற்காகவாவது, முதல் குடும்பத்தின் மூன்றாவது குடும்பத்தை மார்ச் 15, 17 ல் சிபிஐ விசாரித்தே ஆக வேண்டும்.
அந்த மூன்றாவதைக் காக்க இந்த மூன்றை வைத்து கோப நாடகமாடி சீன் போட்டால் தான், தன் கட்சிக்காரனிடமாவது தன் மதிப்பை தக்க வைக்கலாம்.
தன் குடுபத்தின் மீதான சிபிஐ விசாரணையை 'குற்றவிசாரணை' என ஆக்காமல், "அரசியல் பகைமை", "அதிகார துஷ்பிரயோகம்", 'அரசியல் பழிவாங்கல்' என்று திசை மாற்றி, கவுரமாய் சிரித்துக் கொண்டே ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துக்களாம். விசாரணை பற்றிய தாக்கத்தை திசைமாற்றி தன்மான முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
தமிழக மக்களை பற்றிய புரிதலில் கதை வசனகர்த்தாவின் கணிப்பு பெரும்பாலும் சரியாய் தான் இருந்திருக்கிறது. மக்கள் இன்னும் அப்படியேவா இருக்கிறார்கள்?
"மனோகரா" காலத்திலேயே தான் இன்றைய 'இளைஞன்' இருக்கிறானா?





சாதாரணக் கூட்டல் கழித்தல் கணக்கு சொல்கிறது, குடும்ப ஆட்சி போய், அம்மாவின் ஆட்சிவரும் என்று. ஆனால் தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம். காங்கிரஸ் இவ்ர்களை வெட்டிவிட வந்த வாய்ப்பினை விட்டு விட்டார்கள், இது அவர்கள் அரசியலுக்கு ஆதாயம் போல. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியக் குடிமகன் மாற்றம் கொண்டு வருவான். குறைந்த காலத்துக்காவது ஊழல் குறையலாம். LET US HOPE FOR THE BEST AND BE PREPARED FOR THE WORST, WE HAVE NO CHOICE.
ReplyDeleteகாங்கிரஸ் திமுக உறவு தேர்தலில் வெளுக்கும்.திமுகவுக்கு இது கடைசி தேர்தல்.
ReplyDelete/G.M Balasubramaniam said...
ReplyDeleteசாதாரணக் கூட்டல் கழித்தல் கணக்கு சொல்கிறது, குடும்ப ஆட்சி போய், அம்மாவின் ஆட்சிவரும் என்று. ஆனால் தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம். காங்கிரஸ் இவர்களை வெட்டிவிட வந்த வாய்ப்பினை விட்டு விட்டார்கள், இது அவர்கள் அரசியலுக்கு ஆதாயம் போல. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியக் குடிமகன் மாற்றம் கொண்டு வருவான். குறைந்த காலத்துக்காவது ஊழல் குறையலாம். LET US HOPE FOR THE BEST AND BE PREPARED FOR THE WORST, WE HAVE NO CHOICE./
In Democracy, the Governments (representatives) are decided by the Majority of the PEOPLE (He, She, You & Me)
/ சுந்தர்ஜி said...
ReplyDeleteகாங்கிரஸ் திமுக உறவு தேர்தலில் வெளுக்கும்.திமுகவுக்கு இது கடைசி தேர்தல்./
திமுக மத்திய மந்திரிகள், அழகிரியிடம், 'மூனு சீட்டுக்காக', ஏன் நாலு வருஷத்து மத்தியமைச்சர் போஸ்டை ஆறு பேர் தாரை வார்க்கனும்' எனக் கெஞ்சியதாகவும் டெல்லி வட்டாரங்களிலிருந்து சில செய்திகள் கசிகின்றன. முகவின் முடிவை மீறியும் சிலர் முடிவெடுக்கிறார்கள்.
எம்ஜியார் இறுதிக்காலத்தில், "என் கையெழுத்து மாதிரியே போட்டு சிலர்
அரசியல் நடத்துகிறார்கள்" என அறிக்கை வெளியிட்டது ஞாபகம் வருகிறது சுந்தர்ஜி.
முகவுக்கு இது கடைசி தேர்தலாய் இருக்கலாம், ஆனால், திமுகவுக்கு இது கடைசி தேர்தல் அல்ல என்ற கணிப்பு இவ்விடம்.
வாசன் உங்கள் மொபைல் எண்ணை என் 9443227895 எண்ணுக்கு ஒரு எஸ் எம் எஸ் பண்ணுங்க ப்ளீஸ்.
ReplyDeleteஆமாம் வாசன் சார் . மு.க.வுக்கு தான் இது கடைசித் தேர்தல். ஐந்தாண்டுக்கு ஏதேனும் தகிடுதத்தம் பண்ணி மறுபடி வந்து விடுவார்கள். ஐயோ பாவம் அப்பன் இல்லை புள்ளை ன்னு இரக்கப்படுவாக மக்கள். (இப்ப கூட இந்த யுக்தியை உபயோகிக்கலாம் . ஆனா கெழத்துக்கு ஆசை --- விடாது. )
ReplyDelete//சிவகுமாரன் said...
ReplyDeleteஆமாம் வாசன் சார் . மு.க.வுக்கு தான் இது கடைசித் தேர்தல். ஐந்தாண்டுக்கு ஏதேனும் தகிடுதத்தம் பண்ணி மறுபடி வந்து விடுவார்கள். ஐயோ பாவம் அப்பன் இல்லை புள்ளை ன்னு இரக்கப்படுவாக மக்கள். (இப்ப கூட இந்த யுக்தியை உபயோகிக்கலாம் . ஆனா கெழத்துக்கு ஆசை --- விடாது.)//
இந்த கவிஞர்களையும், அரசியலையும் பிரிக்கமுடியாது போலும்.
அந்தக்கால அய்யன் தொடங்கி, ஒளவை, பாரதி, தாசன்கள் வழியாய்,
வாலி, வைரமுத்து போன்ற அரண்மனை பதவி கவிஞர்களையும்..ம் சேர்த்து,
இன்று புதிதாய் பிறந்தோம் பதிவு கவிஞர்களாகிய சிவகுமாரன், நிலாமகள், சுந்தர்ஜி, பா.ரா, ஹரன், வேல் கண்ணன், சைக்கிள் என வட்டமட்டித்துக் கொண்டே இருக்கிறது தொடர்பு.
வாசன் சார். இதுக்கே இப்படின்னா... இன்னும் எவ்வளவோ இருக்கே
ReplyDeleteஎன்ன செய்யப்போகிறோம்?
/திருமூர்த்தி said...
ReplyDeleteவாசன் சார். இதுக்கே இப்படின்னா... இன்னும் எவ்வளவோ இருக்கே என்ன செய்யப்போகிறோம்?/
வாருங்கள் திரு மூர்த்தி, ஒவ்வொரு நாளும் காட்சிகளும், அணிகளும், ஆட்களும், நிகழ்வுகளும் எதிர்பாரா திருப்பங்களுடன், ஒரு துப்பறியும் நாவலின் இறுதி அத்தியாயமாய் மாறிக்கொண்டிருக்கின்றன. (ஆ.ராஜாவின் தொடர்பிலிருந்த கிரீன் ஹவுஸ் புரமோட்டரின் டைரக்டர் தற்கொலை சில மணிகளுக்கு முன்பு.) நாம் பார்(டி)த்துக் கொண்டிருப்பது நாவலா? வாரந்திர தொடரா? ஆசிரியர்(ஆட்சியாளர்) கைகளில் இருக்கிறது முடிவு.
//"மனோகரா" காலத்திலேயே தான் இன்றைய
ReplyDelete'இளைஞன்' இருக்கிறானா?//
இல்லை, இல்லை. மனிதன் மாறிவிட்டான்.
மனிதன் மாறிவிட்டானா, மரத்தில் ஏற்விட்டானா, அடுத்து என்ன செய்யப்போகிறான்? என்பது தான் இப்போதுள்ள நம் கேள்வி.
பேன் பார்க்குமா, காதையே பிய்த்து விடுமா என்பதே நம் கவலை.
பார்ப்போம். என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு பாட வேண்டியது தானோ?