
காஷ்மீர், லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடியை குடியரசு தினத்தன்று ஏற்ற சென்ற பிஜெபி யினர் கைது செய்யப்பட்டனர்.


இந்திய தேசியக் கொடிக்குப் பதில் இத்தாலிய கொடியை எடுத்துப் போயிருந்தால்? {அவுங்க கொடி கூட நம்ம கொடி கலர் மாதிரி தான்.}
2ஜி ஸ்பெக்ட்ரம் பங்குகளின் கமிஷன் பணம் 206 கோடி தான், கலைஞர் டீவி க்கு 'டிபி ரியாலிடி'டமிருந்து சென்றுள்ளது.
அப்ப அது 'கலைஞர்-டிபி'யா?
மலேசியாவின் அஸ்ட்ரோ குழுமம் சன் டீவி குழுமத்திற்கு 675 கோடி, 2007ஆம் ஆண்டில் கொடுத்திருப்பதாய், நீதிபதி சிவராஷ் படேல் அறிக்கை கூறுவதாய் இந்துஸ்தான் டைம்ஸ் எழுதுகிறது.
அப்பாடா, ஜெயாவுக்கு வெளிநாட்டிலேருந்து ஆள்வார் பேட்டை வங்கிக்கு பணம் வந்ததுக்குப் பிறகு, இப்பத்தான் மறுபடியும் வெளிநாட்டில இருந்து நம்ம நாட்டுக்கு பணம் வருது. பொதுவா இந்தியப் பணம்தான் அயல்நாட்டு வங்கியை நிரப்பும். வெல்டன் காலநிதி. நீங்க சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, வியாபார காந்தம் தான். அது தான் 'பிசினஸ் மெகனட்'. இந்திய நாட்டின் ஊழலுக்கு எதிரான உச்ச பாதுகாப்பு துறையின் தலைவராய் (CVC) பி.ஜெ. தாமஸை வழிமுறைகளை மீறி (லஞ்ச குற்றசாட்டில் இருக்கும்) அவரை தேர்ந்தெடுத்தது செல்லாது என்ற உயர்நீதி மன்ற வழக்கில், அவர் தனது சார்பாய், 535 பராளுமன்ற உறுப்பினர்களில் 153 பேர் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்கள்தான், ஆகவே தனது பதவியும் சரியானதே என வாதாடினார்.
பாரளுமன்ற உறுப்பினர்கள் யோக்கியமானவர்களாய் தான் இருக்க வேண்டும் என விதிகள் இல்லை தான். ஆனால், சிவிசி பொறுப்பு ஏற்பவர் 'அப்பழுக்கற்ற, நேர்மையான, யோக்கியமானவனாக இருக்க வேண்டும்' என்ற விதி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா திரு தாமஸ் அவர்களே?
(The CVC should be IMPECCABLE not IMPEACHABLE)






C V C பற்றிய தங்கள் பதிவு வெகு அருமை
ReplyDeleteசாமானியனுக்கு சந்தேகங்கள் இருப்பதுபோல மறதி இருப்பதும் நல்லதுதானே. கறை நல்லது. ஊழல் கறை.?
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteC V C பற்றிய தங்கள் பதிவு வெகு அருமை/
வைகோ சார், உங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
நீங்கள் ஒரு நுட்பமான ரசிகர்.
/G.M Balasubramaniam said...
சாமானியனுக்கு சந்தேகங்கள் இருப்பதுபோல மறதி இருப்பதும் நல்லதுதானே. கறை நல்லது. ஊழல் கறை.?/
மக்களின் மறதி, அரசியல்வாதிகளுக்கு நிம்மதி.
கறை நல்லது, சோப்பு விற்பவனுக்கு.
கறை கெட்டது, சோப்பு போடுபவனுக்கு.
நன்றி பாலு ஐயா.