Tuesday, February 1, 2011

அதிகமாக‌ அணிக‌ள் தாவிய‌து (தி)மு.க‌ வா, பா.ம.‌க‌ வா?

ம‌க‌ன், ம‌கள், மரும‌க‌ன், பேர‌ன் ப‌தவிகளுக்காக‌, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் மொத்த‌ இழப்பையும் இன்ன‌ல்க‌ளையும் பற்றி க‌வ‌னம் கொள்ளாத‌ முக வை விட, த‌ன் ஒரு ம‌க‌னுக்காக‌ ம‌ட்டும் த‌ன‌து ஜாதிக் க‌ட்சியை ப‌ய‌ன்ப‌டுத்தும் ராம்தாஸ் ஒகே தான். க‌ட்சி மாறி க‌ணக்கில் இருவ‌ரும் ஒரே குட்டையில் ஊறிய‌....... மாதிரிதான்.

ஜெயிக்கும் க‌ட்சியை மோப்ப‌ம் பிடித்து ஒட்டிக் கொள்வ‌தில் மு.க‌
யு(பு)த்தியை எடுத்துக் கொண்டால் பார‌ளும‌ன்ற‌த் தேர்த‌லில்:

 (1971/23*) காங்கிர‌ஸ் பிரிந்த‌ நேர‌த்தில் இந்திரா க‌ங்கிர‌ஸ்.

(1977/02*) எம‌ர்ஜென்சிக்குப் பின் ஜ‌ன‌தா.

(1980/16*) ம‌றுப‌டியும் இந்திரா.

(1984/02*) ம‌ற்றும் (1989/0* ) க‌ளில் க‌ம்யூனிஸ்ட், ஜ‌ன‌தா (எம்ஜியார் ராஜிவ் கூட்டு வ‌லுவாய்.)

(1991/0* ) போப‌ர்ஸ் நேர‌த்தில் வி.பி.சிங்கின் வ‌ல‌க்க‌ர‌ம் முக. ஒரு எம்பி கூட‌ க‌ட்சிக்கு இல்லாத‌ போதும் விபி சிங் முர‌சொலி மாற‌னுக்கு இணை அமைச்ச‌ர் ப‌த‌வி கொடுத்திருந்தார்.

(1996/17*)மற்றும் (1998/5*) யுனைட‌ட் பிஃர‌ண்ட் கூட்டு.

அதிமுக‌ 13 மாத‌ங்க‌ளில் பிஜெபி ஆத‌ர‌வை விலக்கிய பின்,

(1999/12*) தேர்த‌லில் பிஜெபி (காவிப‌டை) யுட‌ன் (பாப்ரி ம‌ஜுதி எபிசோடுக்குப் பின்) சேர்ந்து ப‌ல‌ருக்கு ப‌த‌விக‌ள்.

மாறன் வைத்திய‌த்திற்கு த‌னி விமான ச‌ர்விஸ் அர‌சு செல‌வில் பெற்ற‌து இன்னும் நினைவடுக்குக‌ளில் வடுக்க‌ளாய்.

(2004/16*) மற்றும் (2009/18*) ல் ம‌றுப‌டியும் யுபிஏக்கு தாவி, தேசிய‌ நெடுஞ்சாலை, சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் (சேது நல்லா ப‌டம் எடுத்தாரு பாலு..சாரி பாலா) 2ஜி ஸ்பெக்ட்ர‌ம் (செம‌ கிக்).


இப்போது சொல்லுங்க‌ள் அதிகமாக‌ அணிக‌ள் தாவிய‌து (தி)மு.க‌ வா, பா.ம.‌க‌ வா?

க‌ருணாநிதி மாநில தேர்த‌லில் (எம்ஜியார் உயிரோடிருக்கும் போது) அடித்த‌ தேர்த‌ல் போஸ்ட‌ர்க‌ள்:

'உங்க‌ளுக்கு உழைப்ப‌த‌ற்கு எங்க‌ளுக்கு உத்த‌ர‌விடுங்க‌ள்'.

"14 வருட‌ வ‌னவாச‌ம் (த‌ண்ட‌னை) போதாதா?"

'உங்க‌ளின் செருப்பாய் இருப்போம்'

சூப்ப‌ர் காமொடி ஆஃப் தி நூற்றாண்டு, க‌ருணாநிதி அறிவித்த‌ " என் உத‌வியாள‌ர்க‌ள் சொல்வ‌து போல், லஞ்ச‌த்திற்கு நான் ஒரு நெருப்பு" ஸ்டேட்மெண்ட் தான்.

என்ன‌  இருந்தாலும் ஸ்டேட்ஸ்மேன், ஸ்டேட்மெண்ட் இல்லையா?


                                        

5 comments:

  1. ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.
    //என்ன‌ இருந்தாலும் ஸ்டேட்ஸ்மேன், ஸ்டேட்மெண்ட் இல்லையா?//
    :-))))

    ReplyDelete
  2. பெரியவருக்குப் (பெரியவர்களுக்குப்) பிறகு இன்னும் எவ்வளவோ இருக்கே.தமிழர்கள் எதற்கும் தயாராகிக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. குரங்கையும் வெட்கப்பட வைத்த இவர்களின் செயலுக்குப் பெயர் கட்சிக்குள் சாணக்கியராம்.

    தண்டுவடமற்ற ஜந்துவை நினைவுபடுத்தும் இவர்கள் தீர்க்க தரிசிகளாம்.

    தமிழில் இவர்கள் பெயரை எழுதவும் சிந்திக்கவும் கூச்சப்படுகிறேன் வாசன்.

    இவர்களுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் வாசன்.நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

    ReplyDelete
  4. // பா.ராஜாராம் said...
    :-)) // சிரிப்பாணிக்கு மிக்க‌ நன்றி, பா ரா.

    //மாதவராஜ் said...
    ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.
    //என்ன‌ இருந்தாலும் ஸ்டேட்ஸ்மேன், ஸ்டேட்மெண்ட் இல்லையா?//
    :-))))//
    அப்பாடா,ஏக‌லைவ‌ன் ப‌திவுக்கு ஒரு பாதி துரோண‌ரின் ர‌ச‌னை.
    அந்த‌ ஏக‌லைவ‌னுக்கு கிட்டாத‌‌து.நன்றிக‌ள் ப‌ல‌ மாது சார்.

    /G.M Balasubramaniam said...
    பெரியவருக்குப் (பெரியவர்களுக்குப்) பிறகு இன்னும் எவ்வளவோ இருக்கே.தமிழர்கள் எதற்கும் தயாராகிக்கொள்ள வேண்டும்./
    பெரிய‌வ‌ர்(க‌ள்) சிறு செய‌ல்க‌ள் செய்தார்(க‌ள்), செய்கிறார்(க‌ள்), செய்வார்(க‌ள்). நாம் என்ன‌ செய்வ‌து? ஐயா சொல்லுங்க‌ள்.

    /சுந்தர்ஜி said...
    குரங்கையும் வெட்கப்பட வைத்த இவர்களின் செயலுக்குப் பெயர் கட்சிக்குள் சாணக்கியராம்.
    ந‌ம் இனத்தின் வ‌ழி மூதாதைய‌ரையே!! அருமை சுந்த‌ர்ஜி.
    .............
    /தண்டுவடமற்ற ஜந்துவை நினைவுபடுத்தும் இவர்கள் தீர்க்க தரிசிகளாம்./
    ம‌ற்றுமொரு கீழ்நிலை, ப‌ரிணாம‌த்தின் வில‌ங்கு நிலைக்கும் முன்.
    .............
    /தமிழில் இவர்கள் பெயரை எழுதவும் சிந்திக்கவும் கூச்சப்படுகிறேன் வாசன்./
    ஆனால் அந்த் மொழியால் ம‌ட்டுமே, ஆட்சிக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள்.
    ..................
    /இவர்களுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் வாசன்.நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்./
    இள‌ந்த‌லைமுறைக‌ளுக்கு அவரின் ப‌ழைய‌ பாதை 'நெஞ்சுக்கு நீதியாய்'காட்ட‌த்தான் சுந்த‌ர்ஜி.

    ReplyDelete