Sunday, January 30, 2011

முத்துக்குமார் மூட்டிய‌ 'தீ'.



                                  முத்துக்குமாரின் இரண்டாவ‌து நினைவு நாளில்...



ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் இன்றைய‌ நிலைக்கு முக்கிய‌ கார‌ண‌ம், அவ‌ர்க‌ள் இந்திய‌ த‌மிழ‌ர்க‌ளையும் ந‌ம்பிய‌து. 80 களின் துவ‌க்க‌த்தில் தொட‌ங்கிய‌ இந்த‌ ஈழ‌ துய‌ர‌ வ‌ர‌லாறின் ச‌ரிவுக்கு மு.க‌, M G R இருவ‌ரின் தனிப்ப‌கையும், விடுத‌லை இய‌க்க‌ங்க‌ளின் உட்ப‌கையும் முக்கிய‌மான‌வை. இய‌க்க‌ங்களின் மீதான இந்திய‌ ஆளுமை, இந்திரா, ராஜீவ்,ஜெய‌வ‌ர்த்னே உட‌ன்பாடு, IPKF என்ற‌ ப‌ரிணாம‌ வள‌ர்ச்சி, ஏற்ற‌ இற‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ அபாய‌க‌ர‌‌ வ‌ளைவுக‌ள் கொண்ட‌‌து. ராஜீவ் துர்ம‌ர‌ணத்துக்குப் பின், விடுத‌லை புலிக‌ள் ம‌ட்டுமே என்ற‌ நிலையில், எம்ஜியார் ம‌றைவுக்குப் பின் வ‌ந்த‌ அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ள் தமிழ‌கட்சிக‌ளின் (ஜெயா/முக) சுய‌ரூப‌ம் தன்ன‌ல‌ம் ம‌ட்டும் தான் என, ஈழ‌த்தமிழ‌ர்கள் முழுமையாய் அறிய‌வில்லை. த‌மிழ‌த் திரைத்துறையும், ப‌த்திரிக்கை துறையும், ம‌ற்ற‌ ஊட‌க‌ங்க‌ளும், புலம் பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர் ஆத‌ர‌வு கூச்சல்‌, உல‌க‌ச் ச‌ந்தை வியாபார‌த்திற்காக மட்டுமே, இச்சூழ‌லை ப‌யன்ப‌டுத்திக் கொண்டார்கள்‌?



ஜ‌ன‌வ‌ரி-2ல் கிளிநொச்சி வீழ்ந்த‌ பின், த‌மிழ‌கத்தில் மீண்டும் ஒரு பெரிய‌ ஆத‌ர‌வு அதிர்வு இல‌ங்கைய‌ர‌சின் இன ஒழிப்புக்கு எதிராய் கிளம்பிய‌து. அந்த‌த் தீவிர‌ம் ஒருமுக‌ப்ப‌டுத்த‌ப் ப‌டாம‌ல், வைகோ/நெடுமாற‌ன், பாட்டாளி க‌ட்சி, திரைப‌ட‌த்துறை, அதிமுக, த‌தேதிக, க‌ம்யூனிஸ்ட், சிறுத்தை, தோலான், துருத்தி எனப் ப‌ல‌ரால் பிரிக்க‌ப‌ட்டு, ப‌ல‌ திக்குக‌ளில் சிக்கி சீர்குலைந்து இல‌க்கின்றி இளைத்து க‌லைத்து க‌லைந்தது.


ஜ‌னவ‌ரி இறுதியில் முத்துக்குமார் மூட்டிய‌ தீ மீண்டும் தமிழ‌ர்க‌ளின், குறிப்பாய் மாண‌வ‌ர்க‌ள் மற்றும் வ‌ழ‌க்க‌றிஞர்க‌ளின் உணர்வைச் சுட்ட‌து. எழுச்சிக‌ளின் ஆணிவேராகிய‌ ம‌ண‌வ‌ர்க‌ளை,  க‌ல்லூரி விடுமுறை,  உட‌ன‌டி ஹாஸ்ட‌ல் மூட‌ல் போன்ற‌‌  அதிர‌டி  ந‌ட‌வ‌டிக்கை முட‌மாக்கிய‌து (மாண‌வ‌ர்க‌ளின் இந்தி எதிர்ப்பால் ப‌த‌விக்கு வ‌ந்த‌ திமுக‌ அர‌சு.) இத்த‌கு கொதி நிலையில் த‌மிழ‌கம் இருந்த‌ போது, முத‌ல்வ‌ர் முதுவ‌லியால்  ராம‌ச்சந்திரா மருத்துவ‌ம‌ன‌யில் ப‌டுத்து விட்டார். அதே நேர‌ம் (பிப்ர‌வ‌ரி 19ல்) சென்னை உய‌ர் நீதி ம‌ன்ற‌ வ‌ள‌கத்தில் ந‌ட‌ந்த‌ போலிஸ் Vs வ‌ழக்க‌றிஞர்க‌ளின் மோத‌ல், ஈழ‌ ஆத‌ர‌வு‌ நெருப்பில் மேலும் த‌ண்ணிர் விட்டு த‌ணித்த‌து.


இதற்கிடையில் ஜ‌னவரி முத‌ல் ஏப்ர‌ல் வ‌ரை என்னென்னவோ இழப்புக‌ள், நம்பிய‌ தேச‌த்தில், உல‌க‌த் த‌மிழரின த‌லைவ‌ர் ஏப்ர‌ல்-27 ல், அண்ணா ச‌மாதி அருகே உண்ணாவிர‌த‌ம் இருந்தார். உள்துறை அமைச்ச‌ர் சித‌ம்ப‌ர‌ம் அவ‌ர்க‌ளின் இல‌ங்கையில் போரின் தீவிர‌ம் குறைந்த‌து என்ற‌ அறிவிப்பை ஏற்று விர‌த‌ம் க‌லைத்தார். அதே நாளில் தான், அங்கே க‌ள‌த்தில் மிகப்பெரிய‌ திருப்ப‌ம் ந‌ட‌ந்த‌தாய் அங்கிருந்த‌வ‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள்.

மேலும் பார‌ளும‌ன்ற‌த்தேர்த‌ல் நெருங்குவ‌தால், அன்னை சோனியாவுடனான கூட்டு பிர‌ச்சார‌ம் தீவுத்திட‌லில் மே-6 ல், நட‌க்க‌ வேண்டிய‌து,  ராகுலின் ஜெயா ப‌ற்றிய பேச்சின் தாக்க‌ம், முத‌ல்வ‌ர் உட‌ல்நிலை மற்றும் பாதுகாப்பு போன்ற‌ ப‌ல கார‌ண‌ங்க‌ளால் த‌ள்ளி வைக்கப்பட்டு, மே-11 ல் நட‌ந்தது. முத‌ல்வ‌ருட‌ன் மேடையில் இருந்த‌ சோனியா ஈழ‌த்த‌மிழ‌ரின் பாதுகாப்பு ப‌ற்றி பேசினார். இறுதிக‌ட்ட‌ தேர்த‌ல் மே 13ல் ந‌ட‌ந்த‌து. மே-16ல் யுபிஎ ம‌றுப‌டியும் வென்ற‌து.

இல‌ங்கை அர‌சு மே-18ல் பிர‌பாக‌னின் ம‌ர‌ணச் செய்தியை அறிவித்த‌து.

தமிழ‌க‌க் க‌ழ‌க‌ம் ம‌ந்திரி ப‌த‌விக‌ளுக்காக‌, டெல்லி நோக்கி ப‌ய‌ண‌ம் தொட‌ங்கிய‌து.



                        

6 comments:

  1. உணர்ச்சி வேகத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் முத்துக்குமாரின் உயிர் கோடி கொடுத்தாலும் கொண்டு, மீட்டு வரமுடியுமா. நம் கண்ணீர் அஞ்சலிகள் அவருடைய உறவுகளுக்கு கண நேர ஆறுதல் வேண்டுமானாலும் தரலாம். தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டும் தலைவர்களை என்ன செய்தாலும் தகும். இனிமேலும் அவர்களின் தூண்டுதல் வேறு எவரையும் பாதிக்காமல் இருக்கட்டும் GOD BLESS HIS SOUL.

    ReplyDelete
  2. நல்ல தெளிவான அலசல் ...
    இந்நிலை மாறவேண்டும் ,....

    ReplyDelete
  3. தெளிவான அலசல். இந்த நிலை மாறும், மாற வேண்டும்.

    ReplyDelete
  4. வேடங்களை உரித்துக் காட்டும் அலசல்.
    முத்துக் குமார் எடுத்தது மிகத் தவறான முடிவு. இறுதியில் என்ன கிடைத்தது மரணச் செய்திகளை விட ?

    ReplyDelete
  5. உங்களின் வலைப்பூ இருநாட்கள் சரியாய்ப் பதிவிறக்கம் ஆகாதது தாமதத்தின் காரணம் வாசன்.

    எந்தப் பிரச்சனைக்கும் மரணம் தீர்வாகாது.முதிர்ச்சியற்ற முன்னுதாரணம் முத்துக்குமாருடையது.

    இந்த மாதிரிச் செயல்களை எந்த அயோக்கிய அரசியல்வியாதிகளும் கண்டிப்பதில்லை.செத்தது எவனோ ஒருத்தன்தானே?

    பிணத்தைப் போட்டுப் பிச்சையெடுக்க உதவுமே தவிர ஒரு இம்மியளவும் இலக்கை அடையாது.

    ReplyDelete
  6. /G.M Balasubramaniam said...
    உணர்ச்சி வேகத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் முத்துக்குமாரின் உயிர் கோடி கொடுத்தாலும் கொண்டு, மீட்டு வரமுடியுமா. நம் கண்ணீர் அஞ்சலிகள் அவருடைய உறவுகளுக்கு கண நேர ஆறுதல் வேண்டுமானாலும் தரலாம். தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டும் தலைவர்களை என்ன செய்தாலும் தகும். GOD BLESS HIS
    நெஞ்ச‌ம் தொ(சு)ட்ட‌ பின்னோட்ட‌ம். நன்றி ஐயா. த‌ன் ஒரு உயிரின் இழ‌ப்பால், ஒரு இன‌த்தினைத் காத்திட‌ முடியாலாமோ என இந்த‌த் டாஷ்மாக் த‌மிழ‌ர்க‌ளைத் த‌வ‌றாய் நம்பிய
    (அப்)பாவி.

    / அரசன் said...
    நல்ல தெளிவான அலசல் ...
    இந்நிலை மாறவேண்டும் ,.... /
    இந்நிலையை மாற்றவேண்டும். அன்றே கொல்ப‌வ‌ன் நீங்க‌ள் (அர‌சன்)

    / Lakshmi said...
    தெளிவான அலசல். இந்த நிலை மாறும், மாற வேண்டும்./
    அம்மா, கொஞ்ச‌ம் அர‌சிய‌ல் புரிய‌ தொட‌ங்கி விட்ட‌து!!
    (முன்பு அர‌சிய‌ல் தான் புரிய‌வில்லை என்றீர்க‌ள்)

    /சிவகுமாரன் said...
    வேடங்களை உரித்துக் காட்டும் அலசல்.
    முத்துக் குமார் எடுத்தது மிகத் தவறான முடிவு. இறுதியில் என்ன கிடைத்தது மரணச் செய்திகளை விட ?/
    க‌தை வ‌ச‌ன க‌ர்த்தா*, சீசர் இறந்த‌வுட‌ன், ஆண்ட‌ணி* வ‌ரும் காட்சியில், புருட்ட‌ஸ்யை அனுப்பி
    த‌மிழ‌ர் க‌தையை மாற்றி முடித்து விட்டார்.(* யார் யாரொன புரிந்து விட்ட‌து தானே சிவ‌குமார‌ன்?)

    / சுந்தர்ஜி said...
    உங்களின் வலைப்பூ இருநாட்கள் சரியாய்ப் பதிவிறக்கம் ஆகாதது தாமதத்தின் காரணம் வாசன்.
    எந்தப் பிரச்சனைக்கும் மரணம் தீர்வாகாது.முதிர்ச்சியற்ற முன்னுதாரணம் முத்துக்குமாருடையது.
    இந்த மாதிரிச் செயல்களை எந்த அயோக்கிய அரசியல்வியாதிகளும் கண்டிப்பதில்லை.செத்தது எவனோ ஒருத்தன்தானே?
    பிணத்தைப் போட்டுப் பிச்சையெடுக்க உதவுமே தவிர ஒரு இம்மியளவும் இலக்கை அடையாது./
    ஈழ‌த‌த‌மிழ‌ன் இன்ன‌ல்க‌ளை விள‌க்க‌ ஆள்ப‌வ‌ர்களுக்கு தீக்கிளிப்பு 'பாஷை' மட்டுமே புரியும் என த‌வ‌றாய் புரிந்து விட்டானோ, என்ன‌வோ. இழ‌ப்பும், இழ‌வும் அப்பிராணிக‌ளுக்கு, இலக்கும், இலாப‌மும் இப்'பிராணி'க‌ளுக்கு.
    ஆனால், அவ‌ன் எழுதிய‌ 4 ப‌க்க‌ க‌டித‌ம் ஒரு "சிர‌ஞ்சீவி பிர‌க‌ட‌ணம்" தான் சுந்தர்ஜி.

    ReplyDelete