Friday, December 31, 2010

125 ஆண்டுக‌ள் காங்கிர‌ஸ், இந்தியாவை ஆக்கிய‌தில்..

இந்த காங்கிர‌ஸ் க‌ட்சி வெளியீடான புத்த‌க‌த்தில், சோனியாவின் ம‌கிழ்ச்சிக்காக,அவ‌ரை குஷிப்ப‌டுத்த‌, மாமியார் (இந்திரா) நாட்டுக்கு செய்த‌ எம‌ர்ஜென்சி கொடுமையை, சோனியாவுக்கு பிடிக்காத‌ ஓர‌க‌த்தியின் புருஷன், மைத்துண‌ர் (ச‌ஞ்ச‌ய்) மீது சும‌த்துகிறார்க‌ள்.


காங்கிர‌ஸின் ப‌ழைய‌ ச‌ரித்திர‌த்தை திருப்பிப் பார்த்தால் அது ம‌லரும் நினைவுக‌ளாக மணக்காது, கிள‌ரும் குப்பையாய்த் தான் இருக்கும் என்ப‌து பாவ‌ம், இத்தாலியிலிருந்த‌ சோனியாவுக்கு தெரிய‌ வாய்ப்பில்லை.

அதே போல், மாமியார் வீட்டு சீத‌ன‌த்தில் 1985‍ல் அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ சித‌ம்ப‌ர‌த்திற்கும் முழுக்க‌தை தெரியாம‌லிருக்க‌லாம்.

காம்பிரிட்ஸின் பொருளாதார மேதையான‌ ரிச‌ர்வ் வ‌ங்கியில் இருந்து ந‌ர‌சிம்ம‌ராவால், பின்வாச‌ல் வழியாய் பார்லிமெண்டுக்கு வ‌ந்து அதே 1985 ல் நிதி ம‌ந்திரியாகி த‌ற்போது 2 வ‌து 'முறை'யாக பிர‌த‌ம‌ராய் ஆக்க‌ப்பட்டிருக்கும் ம‌ன்மோக‌ன் சிங்கிற்கும் 125 வ‌ருட‌ காங்கிர‌ஸ் வ‌ர‌லாறு தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் இவ்வ‌ளவு காலம் (1969முத‌ல்) டெல்லி அர‌சிய‌லில், ம‌ந்திரிச‌பைக‌ளில் ம‌ந்திரியாய் இருந்தும்,(இந்திராவின் கொலைக்குப்பின் ராஜீவ் ஒதுக்கிய‌தில் புது க‌ட்சி தொட‌ங்கிய‌து தனிக் க‌தை) குறிப்பாய், 21 மாத‌ எம‌ர்ஜென்சி கால‌த்தில் (ஆக‌ஸ்ட் 1975 முத‌ல் மார்ச் 1977)ஆட்சியிலிருந்தும், இந்த‌ புத்த‌க‌த்துக்கு த‌ல‌மை ஆசியாராக‌ வேறு இருக்கும், திரு பிர‌ணாப் முக‌ர்ஷிக்கு ச‌ஞ்ச‌யின் ப‌ங்கு என்ன‌, எந்த‌ அள‌வு எனத் தெரியும் தானே. பின் ஏன் சோனியாவுக்காக, எல்லா த‌வ‌றும் ச‌ஞ்ச‌ய்க்கே, நன்மையெல்லாம் அன்னை இந்திராவுக்கே என்று, காங்கிர‌ஸ் ம‌ற்றும் நாட்டின் ச‌ரித்திர‌த்தை த‌வ‌றாக ப‌திவாக்குகிறீர்க‌ள்? பின் எப்ப‌டி நிக‌ழ்காலத் த‌லைமுறை முந்நாள் ச‌ரித்திர‌ங்க‌ளை நம்புவார்க‌ள்?

1971 பொதுதேர்த‌லில் ராஜ் ந‌ராய்ண்-ஐ எதிர்த்து ரா பெரெய்லில் இந்திரா ஜெயித்த‌து செல்லாது (அர‌சிய‌ல் ய‌ந்திரங்க‌ள், அதிகாரிக‌ள் ம‌ற்றும் ல‌ஞ்ச‌ம்) என 12 ஜூன் 1975 அல‌காபாத் நீதிம‌ன‌ற‌ம் தீர்ப்ப‌ளித்த‌து.
மேலும் ஆறாண்டுகால‌ம் தேர்த‌லில் நிற்க த‌டை வேறு.
வ‌ழ‌க்காடிய‌து இப்போதைய‌ ம‌க்க‌ள் பொதுந‌ல வ‌ழக்க‌றிஞர் 2G புக‌ழ் பிர‌சாந்த் பூஜ‌னின், தந்தை சாந்தி பூஜ‌ன் அவ‌ர்க‌ள். த‌ன்னால் நாட்டை, ஜ‌னநாய‌க முறைப்ப‌டி,ச‌ட்ட‌ப்ப‌டி ஆள முடிய‌தென அறிந்து, அவ‌ச‌ர‌கால (எம‌ர்ஜென்சி)ச‌ட்ட‌த்தை அறிவித்து, நாட்டிற்கு ச‌ர்வாதிகாரி ஆனார்.


ச‌ஞ்ச‌ய், பிறந்த‌து முத‌லே (பிற‌ப்பே) த‌கராறுதான். ராஜிவ் அரசியல் அறியாது வெளிநாடுக‌ளில் இருந்த போது, இந்திராவின் வாரிசாய் அட்ட‌காச‌ம் செய்த‌வ‌ர் சஞ்ச‌ய்.

கட்டாய‌ க‌ருத்த‌டையை அன‌வ‌ருக்கும் (முஸ்லீம்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌) அமுல் ப‌டுத்தினார். த‌மிழ‌க‌த்தில் திமுக‌(முக‌)வின் அந்த‌க் காலத்தின்‌ கிராம‌ அதிகாரிக‌ள், ஆசிரிய‌ர், அசிரியைக‌ளிட‌ம் கேளுங்க‌ள். மாருதிகார் இந்தியாவிற்கு வ‌ர‌ பாடுப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ர். டெல்லி பாலிகா ப‌ஜார் (அண்ட‌ர் கிர‌வுண்டு மால்) அவ‌ர‌து திட்ட‌ம். அம்மாவுக்கே புத்தி சொன்ன‌ நவீன முருக‌ன் எனக் கொண்டாட‌ப்ப‌ட்ட‌வர், இதே பிர‌ணாப் அவ‌ரிட‌ம் கைக‌ட்டி நின்றிருக்க‌லாம்.அன்னை இந்திராவிக்கே ம‌க‌ன் ச‌ஞ்ச‌யிட‌ம் கொஞ்ச‌ம்.....என அவ்வ‌ப்போது செய்திக‌ள் க‌சிந்த‌துண்டு.

 
இன்று, இந்திராவும் இல்லை, அந்த‌ ம‌னித‌னும் இல்லை, அவ‌ர் ம‌ணைவி வாயில்லா வில‌ங்குக‌ளுக்கும், வாயுல்ல‌ (வ‌ருண்) ம‌க‌னுக்காவும் எதிர‌ணியில். ஆக‌வே முக‌ர்ஷி "125 வ‌து ஆண்டுக‌ள் காங்கிர‌ஸ், இந்தியாவை ஆக்கிய‌தில்" என்ற‌ புத்த‌கத்தில், ச‌ஞ்ச‌யை ப‌லிக‌டா ஆக்குகிறார். ம‌ந்திரி ப‌த‌விக்கு அடுத்து, நிறைய‌ புத்த‌க‌ங்க‌ள் ப‌டிக்க‌ணும், எழுத‌னும்னு டிவி-ல‌ முன்பு சொன்னார். (அதுனால‌ க‌வர்ன‌ர் போஸ்ட் கிடைச்சா)....ம். எழுதுலாம். ராகுல், அபிம‌ன்யு போல் அன்னை சோனியா வ‌யிற்றிலிருக்கும் போதே, இந்திராவிட‌ம் அர‌சிய‌ல் பாட‌ம் க‌ற்ற‌வ‌ர். அப்பா ராஜீவிட‌ம் போப‌ர்ஸ் பிர‌ங்கி வித்தையை நன்கு க‌ற்ற‌ வருங்கால இந்திய‌ ம‌ன்ன‌ர் ராகுல் தான் என்று.

நவீன மகா பார‌த‌த்தின் 'அபிம‌ன்யூ' .
வாழ்க‌ காங்.. சாரி..நேரு கா...ப‌ர‌ம்ப‌ரை.
வாழ்க‌ இந்.., இத்தாலி.

Video: Congress disowns Sanjay Gandhi NewsX


Tuesday, December 28, 2010

ஜெபிசி? பிஏசி? பிர‌ச்னை-பின்ன‌னி என்ன‌? (JPC vs PAC)

 ஒன்னே முக்கால் ல‌ட்ச‌ம் கோடி (ஆஹா.எழுதும் போதே ஒரு ர‌ம்மிய‌‌மான கிக்? அனுப‌விச்சா எப்ப‌டி இருக்கும்?) ச‌ரி சப்ஜக்ட்கு வரலாம். இந்த ஸ்பெக்ட‌ர‌ம் விவ‌கார‌ விசார‌ணை பற்றிய‌ எதிர்க‌ட்சி, ஆளும் க‌ட்சிக‌ள‌து இழுப‌றியால், பாராளும‌ன்ற குளிர்கால‌ கூட்ட‌த்தொட‌ர் முழுவ‌தும் த‌டைப‌ட்ட‌தால்‌ மேலும் 150 கோடி ந‌ஷ்ட‌ம் நாட்டுக்கு.

கார‌ணம்: BJP த‌ல‌மையில், அனைத்து எதிர்க‌ட்சின‌ரும் ஊழ‌லை ஜெபிசி விசார‌ணைக்கு உத்திர‌விடக் கோரின‌ர். ஆனால் என்ன‌ வ‌ந்தாலும் சரி பிஏசி விசார‌ணை ம‌ட்டும் தான் என்கிற‌து ஆளும் யுபிஏ. (JPC/BJP Vs PAC/UPA  பெய‌ர்க‌ளில் கூட‌ ஏதோ ‌ எபெஃக்ட் பாருங்க‌ள்)

பிர‌த‌ம‌ர் கூட‌ PAC-யின் விசார‌ண‌க்கு (ம‌ர‌பு/அதிகார‌த்தை மீறல் ஆனாலும்)  "தூய்மையை நிருபிக்க‌" வ‌ருகிறேன், ஆனால் JPC வேண்டாம் என்கிற‌ர்.

இங்குதான் ம‌க்க‌ளாகிய நாம் குழ‌ம்புகிறோம்.

தூய‌ பிர‌த‌ம‌ரே அஞ்சும் 'ஜெசிபி' வெறும் ஜுஜுபி என்ப‌தை அத‌ன் ப‌ழைய‌ நட‌வ‌டிக்கைக‌ளைப் பார்த்தாலே போதும்.

JPC விசார‌ணை ‌ இந்தியாவில் இது வ‌ரை நான்கு முறை ந‌டந்திருக்கிற‌து. அதுவும்,

முதல் வ‌ழ‌க்கு, 1992 ல் அப்போதைய‌ பிர‌த‌ம‌ர் ராஜிவ் (சாட்சாத் காங்கிர‌ஸ் த‌லைவி சோனியாவின் க‌ண‌வ‌ர்) மீதான‌ போப‌ர்ஸ் ப‌ற்றிய‌ வ‌ழ‌க்குத்தான். அதை விசாரித்த‌ ச‌ங்க‌ரான‌த் ஐம்ப‌து அம‌ர்வுக‌ளில் (ஆக‌ஸ்ட் 87  to ஏப்ர‌ல் 88) க‌ண்டுபிடித்து வ‌ழங்கிய‌ தீர்ப்பால் பின்ன‌ர் காங்கிர‌ஸ் அவ‌ருக்கு ம‌ந்திரி ப‌த‌வி அருளிய‌து. (குவாட்ரோச்சி/அவ‌ர‌து வ‌ங்கி க‌ணக்கு முட‌க்க‌ம் பற்றி சிபிஐயிட‌ம் கேட்டுக் கொள்ளுங்க‌ள்)

இர‌ண்டாவ‌தாக‌, ப‌ங்குச‌ந்தை மோச‌டி/ஊழ‌லில் ஹ‌ர்ச‌த் மேத்தா மீது (1992 ஆக‌ஸ்டு to டிச‌ம்ப‌ர்) ராம் விலாஸ் மித்ர தலைமையில் ஆறு அம‌ர்வுக‌ள் நட‌ந்த‌து. பிணையில் இருந்தபோது ஒரு கோடி ப‌ண‌த்தை எப்ப‌டி ஒரே சூட்கேசில் அடைத்து, அப்போதைய‌ பிர‌த‌ம‌ர் ந‌ர‌சிம்ம‌ ராவிட‌ம் கொடுத்தார் என்ப‌தை ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளுக்கு செய்து காண்பித்தார். பின் 31 டிச‌ம்ப‌ர் 2001 சிறையில் மார‌டைப்பால் இற‌ந்தார். அவ‌ர்தான் 900 பாய்ண்டுக‌ளில் இருந்த‌ ப‌ம்பாய் ப‌ங்கு ச‌ந்தை புள்ளிக‌ளை 4000க்கு உய‌ர்த்திய‌வ‌ர்.

மூன்றாவ‌தாக‌, ம‌றுப‌டியும் ப‌ங்குச்ச‌ந்தை/பாதுகாப்பு பத்திர ஊழ‌ல்க‌ள் விஷ‌யமாக ஆனால் என்டிஏ ஆட்சியில் ஓய்வுபெற்ற‌ லெப்ட்ன‌ல் ஜென்ர‌ல் பிர‌காஷ் ம‌ணி திவாரி த‌லைமையில் 150 அம‌ர்வுக‌ள் (ஏப்ர‌ல் to டிச‌ம்ப‌ர் 2002) நட‌ந்து அர‌சின் 'யூனிட் ட்ர‌ஸ்டின் யுஎஸ் 64 திட்ட‌ம்" ப‌ற்றி அறிக்கை வெளியிட்டார்.

நான்காவ‌தாக, த‌ற்போதைய‌ உண‌வு அமைச்ச‌ர் ச‌ர‌த் ப‌வாரின் த‌லைமையில் ப‌ழர‌ச ம‌ற்றும் புத்துண‌ர்ச்சி பாண‌ங்க‌ளில் பூச்சி ம‌ருந்தின் அள‌வுக‌ள் ப‌ற்றிய வ‌ழக்கில் (ஆக‌ஸ்ட் 2003 டு பிப்ர‌வ‌ரி 2004) 17 அம‌ர்வுக‌ள் ம‌ட்டுமே (இதுலையுமா??) க‌ண்டு கேட்டு அறிக்கை அளித்தார். (கோக்/பெப்ஸி த‌ர‌ம்!!)

இப்ப‌டிப்ப‌ட்ட‌ எப‌ஃக்டிவான JPC க்கு, இவ‌ர்க‌ள் ஏன் இவ்வ‌ள‌வு ப‌துங்குகிறார்க‌ள்?  இப்ப‌த்தான், இந்திய‌ன் அதிக‌ம் குழம்புகிறான்.
(அரை குறையா தெரிஞ்ச‌ அப்ப‌டித்தான்).

த‌ற்போது எதிர்க‌ட்சியின‌ர் த‌லைமையில் (முர‌ளி ம‌னோஹ‌ர்) இருக்கும் PAC-க்கு, CAG யின் க‌ணக்கை ச‌ரி பார்ப்ப‌தைத் த‌விற‌ வேறு எதையும், யாரையும் விசார‌ணை செய்யும் அதிகார‌ம் இல்லை.

ஒரு ஆடிட்ட‌ரின் மறுபார்வை போன்ற‌து.

ஆனால் இந்த‌ ஜெபி க‌மிஷனுக்கு இருக்கும் அதிகார‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ சிபிஐ யும் உய‌ர் நீதி ம‌ன்ற‌மும் சேர்ந்த‌ அள‌விலான‌து.
(அர‌சிய‌ல் க‌றை ப‌டியாம‌ல் இருந்தால்)

சாட்சிய‌ங்க‌ளை அழைக்க‌, விசாரிக்க‌, தனிக்குழு, சிறப்புகுழு அமைக்க‌, வெளிநாட்டிலுள்ள நப‌ர்க‌ள்,அலுவ‌ல‌ர்க‌ளை அழைக்க‌ விசாரிக்க‌, பிடிவார‌ண்டு அனுப்ப‌, ச‌பாநாய‌க‌ரின் அனும‌தியுட‌ன் ம‌ந்திரிக‌ளையும் விசாரிக்க‌, என விரிவான (வான‌ள‌வு) அதிகார‌ம் கொண்ட‌து. விஸ்வ‌ரூப த‌ரிச‌னம் போல விண்ணுக்கும் ம‌ண்ணுக்குமான‌து அதிகார‌ வீச்சு என்கிறார் முந்நாள் JPC-பிர‌திநிதி CPI த‌லைவ‌ர் குருதாஸ் குப்தா அவ‌ர்க‌ள்.

(பின் ஏன் ந‌ட‌ந்த‌ நான்கில், ஒன்று கூட தேற‌லைன்னு கேட்க‌க் கூடாது. ராஜிவ் கால‌த்தில் காங்கிர‌ஸ் எம்பி ம‌ட்டும் 415க்கு மேல்) இதின் மெம்ப‌ர்க‌ளில் 15 பேர் லோக்ச‌பையிலும், 7 பேர் ராஜ்ய‌ ச‌பையிலும் க‌ட்சியின் ப‌ல‌த்தின் ச‌தவீத‌ப்ப‌டி JPC க்கு, தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌ர்.
ஆக‌வே இதில் அதிகமான ப‌ங்க‌ளிப்பு ஆளும் யுபிஏ அணிக்குத்தான்.

இவ்வ‌ள‌வு வ‌ச‌தி, வாய்ப்புக்க‌ள் உள்ள‌ இதை வேண்ட‌வே வேண்டாம், எதிர்க‌ட்சிகார‌ன் த‌லைமையில் உள்ள‌ பிஏசி தான் வேண்டும் என  இவ‌ர்க‌ளும், வேண்டாம் என‌ எதிர்க‌ட்சிக‌ளும் ஏன் கூறுகின்ற‌ன‌???

 23 நாட்க‌ள் ம‌க்க‌ளுக்காக‌ ப‌ணியாற்ற‌ துடித்துக் கொண்டிருந்த‌ அர‌சாங்க‌த்தை த‌டுத்து, ம‌க்க‌ளுக்கும், நாட்டுக்கும் இழ‌ப்பு ஏற்ப‌டுத்துகிறது எதிர்க‌ட்சிக‌ள், என்கிற‌து யுபிஏ அர‌சு. பாவ‌ம்.

த‌ல‌விதி!! நாம் என்ன‌ செய்ய‌, சொல்ல‌?

இதைப் பற்றிய‌ விளக்க‌ங்க‌ளையும், க‌ருத்துக்க‌ளையும் பின்னோட்ட‌த்தில் கூறுங்க‌ள்.

Thursday, December 23, 2010

ந‌ம் நாட்டின் சாப‌ம் ப‌ய‌ங்க‌ர‌வாத‌மா? ஊழ‌லா?






1) விக்கிலீக்கில்,யுஎஸ் தூதுவ‌ரிட‌ம் ராகுல் பேசிய‌தாய் வ‌ந்த‌ முதிர்ச்சிய‌ற்ற‌ உரையாட‌ல்,
2) ப‌த‌வி வில‌கிய‌ காங்கிர‌ஸ் பொதுக்காரிய‌த‌ரிசி திக்விஜ‌ய் சிங்கின்,மும்பை தாக்குத‌லில் ப‌லியான உய‌ர்காவ‌ல் அதிகாரி க‌ர்க‌ரேயின் ம‌ர‌ணம் குறித்த‌ பேச்சு,

3) மாக‌ராஷ்டிர சிமெண்ட் ஊழ‌ல் புக‌ழ் முன்னாள் சிறுபான்மைத்துறை ம‌த்திய‌ அமைச்ச‌ர் அந்துலேயின் அப்போதைய‌ பேச்சு

4) உள்துறைஅமைச்ச‌ர், சிவ‌க‌ங்கை தொகுதி ம‌று எண்ணிக்கை வெற்றியாள‌ர், பார்டிசிபேட்ட‌ரி நோட் புக‌ழ் ப‌.சித‌ம்ப‌ர‌ம் வ‌ருணித்த‌ 'காவி ப‌ய‌ங்க‌ர‌ம்' மற்றும்

5) 125வ‌து ஆண்டு க‌ட்சி விழாவில், இத்தாலிய‌ த‌ங்க‌ம் பேசிய‌ தீவிர‌வாத‌ம்.

இவை எல்லாம், அறுப‌தாண்டு கால‌மாக‌ நாட்டைச் சுரண்டி ஆண்டு அனுபவிக்கும் காங்கிர‌ஸ் த‌லைக‌ள், சிறுபான்மையின‌ரின் மொத்த‌ ஓட்டுக்காக நாட்டின் ஒற்றுமையையே கேள்வியாக்கும் அற்ப‌ பேச்சுக்க‌ள்.


80 ச‌த‌வீத‌ இந்து ம‌க்க‌ளில் பெரும்பான்மையோர், 'பெரும்பான்மை' ப‌ற்றி சிந்திக்காம‌ல் "எம் ம‌த‌மும் ச‌ம்ம‌த‌மே" என‌ எண்ணி சாதி, மொழிக‌ளால் பிரிந்திருப்ப‌தால் தான், ச‌சித‌ரூர் சாஃப்ட் ப‌வ‌ர் பேச்சில், 'க‌த்தோலிக்க‌ சோனியாவின் த‌லைமையிலான காங்கிர‌ஸின் ஆட்சியில் சிறுபான்மையின‌ரான‌ சிங் பிர‌த‌ம‌கிறார் அத‌னை முஸ்லீம் ம‌த‌ம் சார்ந்த‌ அப்துல்க‌லாம் ப‌த‌விபிர‌மாண‌ம் செய்விக்கிறார்' என உல‌கஅர‌ங்கில் கூற‌முடிகிற‌து.

'ஜனநாய‌க‌ம்' என்ப‌து பெரும்பான்மையின‌ரின் தேர்வு. இந்தியாவின் பெரும்பான்மையின‌ர் இந்துக்க‌ள். இதுவ‌ரை அவ‌ர்க‌ளின் தேர்வு ம‌த‌சார்பின்மைதான். அர‌சிய‌ல்வாதிக‌ள்தான் ம‌த‌த்தின் பெய‌ரால் ம‌க்க‌ளைப் பிரிக்கிறார்க‌ள். நேரு, ஜின்னா இருவ‌ரின் ஈகோவும் பாக் பிரிவினைக்கு ஒரு கார‌ண‌ம் என்கிற‌து ச‌ரித்திர‌ம்.

அர‌சிய‌ல் லாப‌ங்க‌ளுக்கா,ஊழ‌லில் சிக்கிய‌ செய்திக‌ளை திசை திருப்ப‌, பீகாரில் வீழ்ந்த‌ கோப‌த்திற்காக, அர‌சிய‌ல் எதிரியை (BJP) வீழ்த்த‌ என்ற‌ கார‌ண‌ங்க‌ளால், இந்து தீவிர‌ம் என்ற‌ இருபுற‌மும் கூறான க‌த்தியை எடுக்காதீர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் நேர்மையாற்ற‌, சுய‌லாப‌, வியாப‌ரிக‌ளாக‌, நில புரோக்க‌ர்க‌ளாக, இடைத் தர‌க‌ர்க‌ளாக மாறி விட்டார்க‌ள் ஆனால், வியாப‌ரிக‌ள் ம‌ந்திரிக‌ளை நிய‌மிக்கிறார்க‌ள் என்ப‌தை (நீரா ராடியா டேப்) ம‌க்க‌ள் ந‌ன்கு அறிவ‌ர்.

ஊழ‌ல்தான் இன்றைய மிக‌ப்பெரிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம். ப‌டைக‌ள‌த்தில் வெற்றியை தீர்மானிக்கும் ப‌டைக்க‌ல‌ன்க‌ள் வ‌ங்கிய‌தில் (போப‌ர்ஸ் ராஜீவ்) இராணுவ‌ ஹெலிகாப்ட‌ர் (இத்தாலிய‌ க‌ம்ப‌னி) விப‌த்துக‌ளில் வீர‌ர்க‌ளின் உயிரிழ‌ப்பு, புல்ல‌ட்புரூப் ஜாக்க‌ட் வாங்கிய‌தில் ஊழ‌ல் அது க‌ர்க‌ரேயின் ஒப்ப‌ற்ற‌ உயிரை காவு வாங்கிய‌து என, ஊழ‌ல்தான் 120 கோடி இந்தியார்க‌ளின் த‌லையாய‌ பிர‌ச்ச‌னை.


அய‌ல்நாட்டு வ‌ங்கிக‌ளில் கிட‌க்கும் 75 லட்ச‌ம் கோடி இந்திய‌ப‌ணமும் ஊழ‌ல் ப‌ண‌ம்தான். அதை நூறு நாட்க‌ளில் மீட்டு வ‌ருவாதாய் தேர்த‌ல் வாக்குறுதி அளித்த‌வ‌ர் பிர‌த‌ம‌ர். இன்றோ ஸ்பொக்ட்ர‌ம் ஊழ‌லுக்கு JPC-ன்ன வே‌ணாம், PAC-க்கு வேண‌ வ‌ர்ரேன்னு குழ‌ந்தை மாதிரி அட‌ம் பிடிக்கிறார், யாரைக் காப்பாற்ற‌?
இதில் சீச‌ரின் ம‌ணைவி ச‌ந்தேக‌த்திற்கு அப்பாற்ப‌ட்ட‌வ‌ள்
என்ற‌ காமெடி வேறு.  ம‌க்க‌ளை இவ்வ‌ள‌வு கேணைய‌ன்க‌ளாக ஆங்கிலேய‌ர்க‌ள் கூட‌ ஆளும் போது நின‌த்திருக்க‌ மாட்டார்க‌ள்.
அர‌சின் எல்லா பிர‌ச்னைக‌ளுக்கும் மூல‌ம் ஆள்ப‌வ‌ர்க‌ளின் ப‌ணவெறி.

க‌ம‌ன்வெல்த்தில் காலியான‌து, தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ஒதுக்க‌ப்ப‌ட்டிருந்த‌ 600 கோடி ப‌ண‌ம். க‌ல்மாடி தான் அந்த‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ரா?
இப்ப‌ முக்கியமான பைஃல்க‌ளை காணேம் என்கிற‌து சிபிஐ. அப்போதே நட‌வ‌டிக்கை எடுங்க‌ள் என்ற‌த‌ற்கு, குதிரையை வ‌ண்டியில் பூட்டியாகி விட்ட‌து. போட்டி முடிந்த‌தும் தொட‌ங்கி விடுவோம் விசார‌ணையை என்றார்க‌ள். காமன்வெல்த் முடிஞ்சு, சைனா ஏசியாட் போய் வ‌ந்துட்டாரு, ப‌ணம்தான் போச்சுன்னா, இப்போ பைஃல்க‌ளும் போச்சு. ஒரு த‌னி நப‌ர், அதிகார‌ உச்ச‌ங்க‌ளின் அனுகிர‌க‌மின்றி இப்ப‌டி செய்ய‌ முடியாது என்ப‌தை குழ‌ந்தைக‌ள் கூட‌ அறியும்.



பீகாரின் ம‌க்க‌ள் இந்திய‌ தேச‌த்திற்கு ஒரு அழ‌கான, ஆழ‌மான உண்மையை காட்டி இருக்கிறார்க‌ள்.

காங்கிர‌ஸ் ம‌ற்றும் லாலுவின் ஆட்சிகாலங்க‌ளில் வ‌ள‌ர்ச்சியில் 20வ்து இட‌த்திலிருந்து 5 ஆண்டுகால‌ நிதீஷ் குமார் ஆட்சியில் 2-வது இட‌த்திற்கு வ‌ந்திருக்கிறார்க‌ள் (இந்தியா டுடே க‌ணிப்பு)
தேசத்தின் ம‌க்க‌ளுக்காக‌ ஆட்சி செய்ப‌வ‌ர்க‌ளை தான் ம‌க்க‌ள் நேசிக்கிறார்க‌ள், தேர்ந்தெடுக்கிறார்க‌ள்.
சொந்த‌ ம‌கன், ம‌க‌ள்க‌ளுக்காக‌ ஆட்சி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளை தேசம‌க்க‌ள் வெறுத்து ஒதுக்குகிறார்க‌ள்.

ச‌ரியான மாற்று இல்லாத‌தால் த‌வ‌றான‌வ‌ர்க‌ளையே ம‌றுப‌டியும் ம‌த்தியிலும், மாநில‌த்திலும் த‌லைமைக்கு அம‌ர்த்தும் துர‌திருஷ்ட‌ம் இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌ட்டு விடுகிற‌து.

ஆக‌வே அர‌சிய‌ல்வாதிக‌ளே மாறுங்க‌ள், ம‌க்க‌ளை ஏமாற்றாதீர்க‌ள்.

ம‌தம் அல்ல‌ இந்திய‌னின் பிர‌ச்ச‌னை.
அர‌சிய‌ல்வாதி, அதிகாரிக‌ளின் ஊழ‌ல்தான் இந்தியாவின் பிர‌ச்ச‌னை.