Tuesday, December 28, 2010

ஜெபிசி? பிஏசி? பிர‌ச்னை-பின்ன‌னி என்ன‌? (JPC vs PAC)

 ஒன்னே முக்கால் ல‌ட்ச‌ம் கோடி (ஆஹா.எழுதும் போதே ஒரு ர‌ம்மிய‌‌மான கிக்? அனுப‌விச்சா எப்ப‌டி இருக்கும்?) ச‌ரி சப்ஜக்ட்கு வரலாம். இந்த ஸ்பெக்ட‌ர‌ம் விவ‌கார‌ விசார‌ணை பற்றிய‌ எதிர்க‌ட்சி, ஆளும் க‌ட்சிக‌ள‌து இழுப‌றியால், பாராளும‌ன்ற குளிர்கால‌ கூட்ட‌த்தொட‌ர் முழுவ‌தும் த‌டைப‌ட்ட‌தால்‌ மேலும் 150 கோடி ந‌ஷ்ட‌ம் நாட்டுக்கு.

கார‌ணம்: BJP த‌ல‌மையில், அனைத்து எதிர்க‌ட்சின‌ரும் ஊழ‌லை ஜெபிசி விசார‌ணைக்கு உத்திர‌விடக் கோரின‌ர். ஆனால் என்ன‌ வ‌ந்தாலும் சரி பிஏசி விசார‌ணை ம‌ட்டும் தான் என்கிற‌து ஆளும் யுபிஏ. (JPC/BJP Vs PAC/UPA  பெய‌ர்க‌ளில் கூட‌ ஏதோ ‌ எபெஃக்ட் பாருங்க‌ள்)

பிர‌த‌ம‌ர் கூட‌ PAC-யின் விசார‌ண‌க்கு (ம‌ர‌பு/அதிகார‌த்தை மீறல் ஆனாலும்)  "தூய்மையை நிருபிக்க‌" வ‌ருகிறேன், ஆனால் JPC வேண்டாம் என்கிற‌ர்.

இங்குதான் ம‌க்க‌ளாகிய நாம் குழ‌ம்புகிறோம்.

தூய‌ பிர‌த‌ம‌ரே அஞ்சும் 'ஜெசிபி' வெறும் ஜுஜுபி என்ப‌தை அத‌ன் ப‌ழைய‌ நட‌வ‌டிக்கைக‌ளைப் பார்த்தாலே போதும்.

JPC விசார‌ணை ‌ இந்தியாவில் இது வ‌ரை நான்கு முறை ந‌டந்திருக்கிற‌து. அதுவும்,

முதல் வ‌ழ‌க்கு, 1992 ல் அப்போதைய‌ பிர‌த‌ம‌ர் ராஜிவ் (சாட்சாத் காங்கிர‌ஸ் த‌லைவி சோனியாவின் க‌ண‌வ‌ர்) மீதான‌ போப‌ர்ஸ் ப‌ற்றிய‌ வ‌ழ‌க்குத்தான். அதை விசாரித்த‌ ச‌ங்க‌ரான‌த் ஐம்ப‌து அம‌ர்வுக‌ளில் (ஆக‌ஸ்ட் 87  to ஏப்ர‌ல் 88) க‌ண்டுபிடித்து வ‌ழங்கிய‌ தீர்ப்பால் பின்ன‌ர் காங்கிர‌ஸ் அவ‌ருக்கு ம‌ந்திரி ப‌த‌வி அருளிய‌து. (குவாட்ரோச்சி/அவ‌ர‌து வ‌ங்கி க‌ணக்கு முட‌க்க‌ம் பற்றி சிபிஐயிட‌ம் கேட்டுக் கொள்ளுங்க‌ள்)

இர‌ண்டாவ‌தாக‌, ப‌ங்குச‌ந்தை மோச‌டி/ஊழ‌லில் ஹ‌ர்ச‌த் மேத்தா மீது (1992 ஆக‌ஸ்டு to டிச‌ம்ப‌ர்) ராம் விலாஸ் மித்ர தலைமையில் ஆறு அம‌ர்வுக‌ள் நட‌ந்த‌து. பிணையில் இருந்தபோது ஒரு கோடி ப‌ண‌த்தை எப்ப‌டி ஒரே சூட்கேசில் அடைத்து, அப்போதைய‌ பிர‌த‌ம‌ர் ந‌ர‌சிம்ம‌ ராவிட‌ம் கொடுத்தார் என்ப‌தை ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளுக்கு செய்து காண்பித்தார். பின் 31 டிச‌ம்ப‌ர் 2001 சிறையில் மார‌டைப்பால் இற‌ந்தார். அவ‌ர்தான் 900 பாய்ண்டுக‌ளில் இருந்த‌ ப‌ம்பாய் ப‌ங்கு ச‌ந்தை புள்ளிக‌ளை 4000க்கு உய‌ர்த்திய‌வ‌ர்.

மூன்றாவ‌தாக‌, ம‌றுப‌டியும் ப‌ங்குச்ச‌ந்தை/பாதுகாப்பு பத்திர ஊழ‌ல்க‌ள் விஷ‌யமாக ஆனால் என்டிஏ ஆட்சியில் ஓய்வுபெற்ற‌ லெப்ட்ன‌ல் ஜென்ர‌ல் பிர‌காஷ் ம‌ணி திவாரி த‌லைமையில் 150 அம‌ர்வுக‌ள் (ஏப்ர‌ல் to டிச‌ம்ப‌ர் 2002) நட‌ந்து அர‌சின் 'யூனிட் ட்ர‌ஸ்டின் யுஎஸ் 64 திட்ட‌ம்" ப‌ற்றி அறிக்கை வெளியிட்டார்.

நான்காவ‌தாக, த‌ற்போதைய‌ உண‌வு அமைச்ச‌ர் ச‌ர‌த் ப‌வாரின் த‌லைமையில் ப‌ழர‌ச ம‌ற்றும் புத்துண‌ர்ச்சி பாண‌ங்க‌ளில் பூச்சி ம‌ருந்தின் அள‌வுக‌ள் ப‌ற்றிய வ‌ழக்கில் (ஆக‌ஸ்ட் 2003 டு பிப்ர‌வ‌ரி 2004) 17 அம‌ர்வுக‌ள் ம‌ட்டுமே (இதுலையுமா??) க‌ண்டு கேட்டு அறிக்கை அளித்தார். (கோக்/பெப்ஸி த‌ர‌ம்!!)

இப்ப‌டிப்ப‌ட்ட‌ எப‌ஃக்டிவான JPC க்கு, இவ‌ர்க‌ள் ஏன் இவ்வ‌ள‌வு ப‌துங்குகிறார்க‌ள்?  இப்ப‌த்தான், இந்திய‌ன் அதிக‌ம் குழம்புகிறான்.
(அரை குறையா தெரிஞ்ச‌ அப்ப‌டித்தான்).

த‌ற்போது எதிர்க‌ட்சியின‌ர் த‌லைமையில் (முர‌ளி ம‌னோஹ‌ர்) இருக்கும் PAC-க்கு, CAG யின் க‌ணக்கை ச‌ரி பார்ப்ப‌தைத் த‌விற‌ வேறு எதையும், யாரையும் விசார‌ணை செய்யும் அதிகார‌ம் இல்லை.

ஒரு ஆடிட்ட‌ரின் மறுபார்வை போன்ற‌து.

ஆனால் இந்த‌ ஜெபி க‌மிஷனுக்கு இருக்கும் அதிகார‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ சிபிஐ யும் உய‌ர் நீதி ம‌ன்ற‌மும் சேர்ந்த‌ அள‌விலான‌து.
(அர‌சிய‌ல் க‌றை ப‌டியாம‌ல் இருந்தால்)

சாட்சிய‌ங்க‌ளை அழைக்க‌, விசாரிக்க‌, தனிக்குழு, சிறப்புகுழு அமைக்க‌, வெளிநாட்டிலுள்ள நப‌ர்க‌ள்,அலுவ‌ல‌ர்க‌ளை அழைக்க‌ விசாரிக்க‌, பிடிவார‌ண்டு அனுப்ப‌, ச‌பாநாய‌க‌ரின் அனும‌தியுட‌ன் ம‌ந்திரிக‌ளையும் விசாரிக்க‌, என விரிவான (வான‌ள‌வு) அதிகார‌ம் கொண்ட‌து. விஸ்வ‌ரூப த‌ரிச‌னம் போல விண்ணுக்கும் ம‌ண்ணுக்குமான‌து அதிகார‌ வீச்சு என்கிறார் முந்நாள் JPC-பிர‌திநிதி CPI த‌லைவ‌ர் குருதாஸ் குப்தா அவ‌ர்க‌ள்.

(பின் ஏன் ந‌ட‌ந்த‌ நான்கில், ஒன்று கூட தேற‌லைன்னு கேட்க‌க் கூடாது. ராஜிவ் கால‌த்தில் காங்கிர‌ஸ் எம்பி ம‌ட்டும் 415க்கு மேல்) இதின் மெம்ப‌ர்க‌ளில் 15 பேர் லோக்ச‌பையிலும், 7 பேர் ராஜ்ய‌ ச‌பையிலும் க‌ட்சியின் ப‌ல‌த்தின் ச‌தவீத‌ப்ப‌டி JPC க்கு, தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌ர்.
ஆக‌வே இதில் அதிகமான ப‌ங்க‌ளிப்பு ஆளும் யுபிஏ அணிக்குத்தான்.

இவ்வ‌ள‌வு வ‌ச‌தி, வாய்ப்புக்க‌ள் உள்ள‌ இதை வேண்ட‌வே வேண்டாம், எதிர்க‌ட்சிகார‌ன் த‌லைமையில் உள்ள‌ பிஏசி தான் வேண்டும் என  இவ‌ர்க‌ளும், வேண்டாம் என‌ எதிர்க‌ட்சிக‌ளும் ஏன் கூறுகின்ற‌ன‌???

 23 நாட்க‌ள் ம‌க்க‌ளுக்காக‌ ப‌ணியாற்ற‌ துடித்துக் கொண்டிருந்த‌ அர‌சாங்க‌த்தை த‌டுத்து, ம‌க்க‌ளுக்கும், நாட்டுக்கும் இழ‌ப்பு ஏற்ப‌டுத்துகிறது எதிர்க‌ட்சிக‌ள், என்கிற‌து யுபிஏ அர‌சு. பாவ‌ம்.

த‌ல‌விதி!! நாம் என்ன‌ செய்ய‌, சொல்ல‌?

இதைப் பற்றிய‌ விளக்க‌ங்க‌ளையும், க‌ருத்துக்க‌ளையும் பின்னோட்ட‌த்தில் கூறுங்க‌ள்.

6 comments:

  1. கூட்டத் தொடர் தடைபட்டதால் வெறும் பிஸ்கோத்து தம்மாத்தூண்டு (நூறு கோடியளவில் நஷ்டமோ ஊழலோ நடந்தால் நாங்க இப்பிடித்தான் சொல்லுவோம் வாசன்)நூத்தைம்பது கோடியோட போச்சு.கூட்டத்தொடர் நடந்தாலும் நடக்கலன்னாலும் ஒரே ரியாக்‌ஷன் தான் நம்ம நாட்டில்.

    இந்த மேட்டரைப் பீறாயற வேலைதான் நம்ம மாதிரி எழுத்தக் கட்டித் தொங்கற ஜாதிக்கெல்லாம்.

    முத்ராவோ போஃபர்ஸோ ஹர்ஷட் மேத்தாவோ அல்லது பங்குச்சந்தை ஊழலோ யாரானாலும் எதுவானாலும் என்றும் எங்கள் சொந்தம் மாறாது.

    ReplyDelete
  2. Sundarji, Scandal issue was diluted, deviously by the debate on JPC or PAC.

    ReplyDelete
  3. அருமையா விவரிச்சு இருக்கீங்க. எனக்கு இந்த குழப்பம் ரொம்பவே இருந்தது. இப்போ கொஞ்சம் தெளிவுபடுத்திட்டீங்க...

    நன்றி சார்.

    ReplyDelete
  4. /ரோஸ்விக் said...
    அருமையா விவரிச்சு இருக்கீங்க. எனக்கு இந்த குழப்பம் ரொம்பவே இருந்தது. இப்போ கொஞ்சம் தெளிவுபடுத்திட்டீங்க../
    ம‌கிழ்ச்சியும், நன்றியும் ரோஸ்விக்.
    ஏன் என்க‌வுண்ட‌ர்க்கு, பிற‌கு பிளாக்ல‌
    க‌வுண்ட‌ர் திற‌க்காமாக இருக்கிங்க‌.
    போய், போய் பாத்துட்டு ஏமாந்து போகிறோம்.

    ReplyDelete
  5. ஒன்றே முக்கால் லட்சம் கோடி நினைத்துப்பார்க்கவே தலை சுத்துது. இது ஒரு விதத்தில் நினைத்துப் பார்க்கும்போது “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா” என்பது போன்ற ஹேஷ்யமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜேபீசி கேட்பவர்களின் நோக்கமே பிரதமரை கூண்டில் நிற்க வைத்து அவலப்படுத்துவதுதான் என்பது போலும் தோன்றுகிறது.எதையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை வாசன். பாவம் நாம் இந்தியர்கள்

    ReplyDelete
  6. G.M Balasubramaniam /ஜேபீசி கேட்பவர்களின் நோக்கமே பிரதமரை கூண்டில் நிற்க வைத்து அவலப்படுத்துவதுதான் என்பது போலும் தோன்றுகிறது.எதையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை வாசன். பாவம் நாம் இந்தியர்கள்/

    பிர‌த‌ம‌ர் அல்ல‌ அவர்க‌ளின் இல‌க்கு, ஐயா.
    அவ‌ரையும் அர‌சையும் இய‌க்கும் த‌லைக‌ள் தான் இவ‌ர்க‌ள் குறி.
    போப‌ர்ஸ் டீலில் விட்ட‌தை, இதில் பிடிக்க‌ ஜெபிசி வ‌லை கேட்கிற‌து எதிர்க‌ட்சிக‌ள்.
    (திமிங்ல‌ங்க‌ள்,அக‌ப்ப‌ட்டாம‌ல் ஆழத்திற்குள் செல்லும் முன் பிடிக்க‌). சில சில்ல‌றை மீன்க‌ளை ம‌ட்டும் சிக்கும் PAC வ‌லையே போதுமே, பிர‌த‌ம‌ரே அதில் வ‌லிய‌ வ‌ந்து அக‌ப்ப‌டுவார் என்கிற‌து காங்கிர‌ஸ் + திமுக‌. மக்க‌ளுக்கு தெரியாது வ‌லைக‌ளின் வித‌ம், ஆனால் மீன் பிடிப்ப‌வ‌ருக்கு தெரியும் வ‌லைக‌ளின் சூட்சும‌ம்.
    பார‌த‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் ப‌ர‌த‌வ‌ர் இல்லை.

    ReplyDelete