1) விக்கிலீக்கில்,யுஎஸ் தூதுவரிடம் ராகுல் பேசியதாய் வந்த முதிர்ச்சியற்ற உரையாடல்,
2) பதவி விலகிய காங்கிரஸ் பொதுக்காரியதரிசி திக்விஜய் சிங்கின்,மும்பை தாக்குதலில் பலியான உயர்காவல் அதிகாரி கர்கரேயின் மரணம் குறித்த பேச்சு,3) மாகராஷ்டிர சிமெண்ட் ஊழல் புகழ் முன்னாள் சிறுபான்மைத்துறை மத்திய அமைச்சர் அந்துலேயின் அப்போதைய பேச்சு
4) உள்துறைஅமைச்சர், சிவகங்கை தொகுதி மறு எண்ணிக்கை வெற்றியாளர், பார்டிசிபேட்டரி நோட் புகழ் ப.சிதம்பரம் வருணித்த 'காவி பயங்கரம்' மற்றும்
5) 125வது ஆண்டு கட்சி விழாவில், இத்தாலிய தங்கம் பேசிய தீவிரவாதம்.
இவை எல்லாம், அறுபதாண்டு காலமாக நாட்டைச் சுரண்டி ஆண்டு அனுபவிக்கும் காங்கிரஸ் தலைகள், சிறுபான்மையினரின் மொத்த ஓட்டுக்காக நாட்டின் ஒற்றுமையையே கேள்வியாக்கும் அற்ப பேச்சுக்கள்.
80 சதவீத இந்து மக்களில் பெரும்பான்மையோர், 'பெரும்பான்மை' பற்றி சிந்திக்காமல் "எம் மதமும் சம்மதமே" என எண்ணி சாதி, மொழிகளால் பிரிந்திருப்பதால் தான், சசிதரூர் சாஃப்ட் பவர் பேச்சில், 'கத்தோலிக்க சோனியாவின் தலைமையிலான காங்கிரஸின் ஆட்சியில் சிறுபான்மையினரான சிங் பிரதமகிறார் அதனை முஸ்லீம் மதம் சார்ந்த அப்துல்கலாம் பதவிபிரமாணம் செய்விக்கிறார்' என உலகஅரங்கில் கூறமுடிகிறது.
'ஜனநாயகம்' என்பது பெரும்பான்மையினரின் தேர்வு. இந்தியாவின் பெரும்பான்மையினர் இந்துக்கள். இதுவரை அவர்களின் தேர்வு மதசார்பின்மைதான். அரசியல்வாதிகள்தான் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கிறார்கள். நேரு, ஜின்னா இருவரின் ஈகோவும் பாக் பிரிவினைக்கு ஒரு காரணம் என்கிறது சரித்திரம். அரசியல் லாபங்களுக்கா,ஊழலில் சிக்கிய செய்திகளை திசை திருப்ப, பீகாரில் வீழ்ந்த கோபத்திற்காக, அரசியல் எதிரியை (BJP) வீழ்த்த என்ற காரணங்களால், இந்து தீவிரம் என்ற இருபுறமும் கூறான கத்தியை எடுக்காதீர்கள்.
அயல்நாட்டு வங்கிகளில் கிடக்கும் 75 லட்சம் கோடி இந்தியபணமும் ஊழல் பணம்தான். அதை நூறு நாட்களில் மீட்டு வருவாதாய் தேர்தல் வாக்குறுதி அளித்தவர் பிரதமர். இன்றோ ஸ்பொக்ட்ரம் ஊழலுக்கு JPC-ன்ன வேணாம், PAC-க்கு வேண வர்ரேன்னு குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறார், யாரைக் காப்பாற்ற? இதில் சீசரின் மணைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்
என்ற காமெடி வேறு. மக்களை இவ்வளவு கேணையன்களாக ஆங்கிலேயர்கள் கூட ஆளும் போது நினத்திருக்க மாட்டார்கள்.
அரசின் எல்லா பிரச்னைகளுக்கும் மூலம் ஆள்பவர்களின் பணவெறி.
கமன்வெல்த்தில் காலியானது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 600 கோடி பணம். கல்மாடி தான் அந்த தாழ்த்தப்பட்டவரா?
இப்ப முக்கியமான பைஃல்களை காணேம் என்கிறது சிபிஐ. அப்போதே நடவடிக்கை எடுங்கள் என்றதற்கு, குதிரையை வண்டியில் பூட்டியாகி விட்டது. போட்டி முடிந்ததும் தொடங்கி விடுவோம் விசாரணையை என்றார்கள். காமன்வெல்த் முடிஞ்சு, சைனா ஏசியாட் போய் வந்துட்டாரு, பணம்தான் போச்சுன்னா, இப்போ பைஃல்களும் போச்சு. ஒரு தனி நபர், அதிகார உச்சங்களின் அனுகிரகமின்றி இப்படி செய்ய முடியாது என்பதை குழந்தைகள் கூட அறியும்.
காங்கிரஸ் மற்றும் லாலுவின் ஆட்சிகாலங்களில் வளர்ச்சியில் 20வ்து இடத்திலிருந்து 5 ஆண்டுகால நிதீஷ் குமார் ஆட்சியில் 2-வது இடத்திற்கு வந்திருக்கிறார்கள் (இந்தியா டுடே கணிப்பு)தேசத்தின் மக்களுக்காக ஆட்சி செய்பவர்களை தான் மக்கள் நேசிக்கிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள்.
சொந்த மகன், மகள்களுக்காக ஆட்சி நடத்துபவர்களை தேசமக்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.
சரியான மாற்று இல்லாததால் தவறானவர்களையே மறுபடியும் மத்தியிலும், மாநிலத்திலும் தலைமைக்கு அமர்த்தும் துரதிருஷ்டம் இந்திய மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
மதம் அல்ல இந்தியனின் பிரச்சனை.
அரசியல்வாதி, அதிகாரிகளின் ஊழல்தான் இந்தியாவின் பிரச்சனை.





மிக மிக யதார்த்தமாக மிக எளிமையாகி சொல்லிவிட்டீர்கள்.
ReplyDeleteமேலும் எழுதுங்கள்.
// மதம் அல்ல இந்தியனின் பிரச்சனை.
ReplyDeleteஅரசியல்வாதி, அதிகாரிகளின் ஊழல்தான் இந்தியாவின் பிரச்சனை.//
உரக்க கூறுவோம்.
அசத்தல் சார்...
ReplyDelete// மக்களை இவ்வளவு கேணையன்களாக ஆங்கிலேயர்கள் கூட ஆளும் போது நினத்திருக்க மாட்டார்கள்//
:-))))
இந்த ஒரு பதிவு போதும் வாசன் அரசியல்வாதிகள் மட்டுமல்ல அகங்காரங் கொண்டு தன் தவறால் பலருக்கு பாதகம் செய்யும் அத்தனை பேருக்கும் பொருந்தும்.
ReplyDeleteதன் தவறை உணர்ந்து திருந்தும் மனம் வாய்த்த ஆட்சியாளர்களை நாம் இழந்துவிட்டது நம் வளர்ச்சியின் வரலாற்றின் சாபக்கேடு வாசன்.
விடாது மணி அடிப்போம். மாற்றத்துக்கு வழி வகுப்போம்.
Nice posts...explained in simple words... hopefully there will be solution some day
ReplyDelete/இந்தியாவின் பெரும்பான்மையினர் இந்துக்கள். இதுவரை அவர்களின் தேர்வு மதசார்பின்மைதான். அரசியல்வாதிகள்தான் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கிறார்கள். நேரு, ஜின்னா இருவரின் ஈகோவும் பாக் பிரிவினைக்கு ஒரு காரணம் என்கிறது சரித்திரம்./..
ReplyDeleteபாஸ் ஒப்பனா சொல்லுங்க .. காங்ரஸ் ஒரு மத வாத கட்சி ன்னு .
பெரியார் சொன்னதா யாரும் கேக்கள.. இதயும் படிங்க பாஸ்... டம்மிபீஸ்
neenga ezhuthiyirukkara aththanaiyum unmai thaan! aanaa ivanga ellaam thirunthuvaanga endra nambikkai enakku illa.
ReplyDeletenamma country oda periya problem- oru entire generation race kuthiraikalaa ponathu. 12th la nalla mark. nalla college la engineering. america-la vela. No one cares.
etho oru vivek comedy la varamathiri.. innikku prachchana-nnu konthalikkara jananga- naalaikku pothy's la 2 sarree vaanginaa oru sarree free- ngara ad la layichchu poiduvaanga..
politics a paththi yaarukku akkara?
ippadi akkara illaatha janangalaala thaan ivalo prachchanayum.
bengal-la communism evalovo nallathum pannirukku kettathum pannirukku. . feudal lordsa ozhikkanum-gara nalla kurikkol-oda thodangina naxal movement oda definition-e ippo vera aayaachchu. aanaa anga avalo maatrangala kondu vara oruththar-aavathu irunthaaru. ippo atha pola yaarume illaye!!
"raaman aanda enna.. " ngara manappaanma makkal kitta irukkara varaikkum kalmadi-kum/raja-kum azhive kidayaathu. ivan pona innoruththan.
சரியான மாற்று இல்லாததால் தவறானவர்களையே மறுபடியும் மத்தியிலும், மாநிலத்திலும் தலைமைக்கு அமர்த்தும் துரதிருஷ்டம் இந்திய மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
ReplyDeleteசரியாய் சொன்னீர்கள். நம் தலையெழுத்து என்று ஒதுங்காமல் ஏதேனும் தீவிரமாய் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
This comment has been removed by the author.
ReplyDelete///பீகாரின் மக்கள் இந்திய தேசத்திற்கு ஒரு அழகான, ஆழமான உண்மையை காட்டி இருக்கிறார்கள்.//
ReplyDeleteஇல்லை நண்பரே. எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteமிக மிக யதார்த்தமாக மிக எளிமையாகி சொல்லிவிட்டீர்கள்.
மேலும் எழுதுங்கள்./
வருகைகும் உற்சாகமூட்டும் பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி
/ரோஸ்விக் said...
அசத்தல் சார்.../
நீ...ண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் வருகை மிகிழ்ச்சியூட்டுகிறது திசைகாட்டி.
வலைச்சரம் இன்றும் என்றும் நினைவில். நன்றி.
/சுந்தர்ஜி said...
இந்த ஒரு பதிவு போதும் வாசன் அரசியல்வாதிகள் மட்டுமல்ல அகங்காரங் கொண்டு தன் தவறால் பலருக்கு பாதகம் செய்யும் அத்தனை பேருக்கும் பொருந்தும்.
தன் தவறை உணர்ந்து திருந்தும் மனம் வாய்த்த ஆட்சியாளர்களை நாம் இழந்துவிட்டது நம் வளர்ச்சியின் வரலாற்றின் சாபக்கேடு வாசன்.
மாற்றத்துக்கு வழி வகுப்போம்./
உங்களின் "கவிதைகளை" அரசியல் ஆக்கிரமித்திடுமோ என்ற பயம் இருக்கிறது சுந்தர்ஜி. பார்த்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு உங்கள் கவிதைமழையும், அரசியல் இடி மின்னல்களும் வேண்டும்.
/அப்பாவி தங்கமணி said...
Nice posts...explained in simple words... hopefully there will be solution some dஅ /
தீர்வுகளற்ற பிரச்னைகளே இல்லை தான். ஆனல் தீர்வு எப்போது, யாரால்? உங்களின் வருகையும் பின்னோட்டமும் புத்துணர்வாவளிக்கிறது.
dummi piece said... /பாஸ் ஒப்பனா சொல்லுங்க .. காங்ரஸ் ஒரு மத வாத கட்சி ன்னு .
பெரியார் சொன்னதா யாரும் கேக்கள.. இதயும் படிங்க பாஸ்... டம்மிபீஸ்/
படித்து ரசித்து கருத்தும் இட்டிருக்கிறேன்.
/ Matangi Mawley said...
"raaman aanda enna.. " ngara manappaanma makkal kitta irukkara varaikkum kalmadi-kum/raja-kum azhive kidayaathu. ivan pona innoruththan./
ராமன், அயோத்தியை நீங்கிய போது (தசரதன்/கைகேகி வரம்)செடிகளும், நதிகளும், மீன்களும்,
கூட வருந்தி அழும் அன்பான, காந்திஜி கனவு கண்ட 'ராமராஜ்ய' நாயகன். ஆனால் ராவ்ணன்
தனது சொந்தத் தவாறால், வைரங்கள் சிதறிக்கிடந்த, வளமான இலங்கையையே போரினால் அழித்தவன். ராமன் மீட்க வந்தவன். ராவணன் சிறையிட்டவன். ராமன் ஆண்ட என்ன? ராவணன் ஆண்ட என்ன மக்களின் எண்ணங்களால் தான்,ராஜேந்திரபிரதாத்தும், படேலும்,சாஸ்திரியும்,ராஜாஜியும், பெரியாரும், காமராஜும், விட்டலும் இருந்த இடங்களில்,
பிரதிபாவும், மன்மோகனும், சோனியாவும், வீரமணியும்,கருணாநிதியும், பிஜெ தாமஸும் இருக்கிறார்கள். இறந்தர்வர்களுக்காய் அல்ல இந்த அழுகை, பசிக்கான அழுகை.
//ரிஷபன் said...
சரியாய் சொன்னீர்கள். நம் தலையெழுத்து என்று ஒதுங்காமல் ஏதேனும் தீவிரமாய் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.//
எல்லோரையும், எப்போதும், அதேவகையில் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாதல்லவா திரு ரிஷபன்.
//சிவகுமாரன் said...
இல்லை நண்பரே. எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.//
திரு சிவகுமரன், தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நனறி. நிதிஷ்குமார் வித்தியாசமான முதல்வர்தான். பீகாரின் வளர்ச்சிக்காய் செயலாளற்றுகிறார். ரயில்த்துறையில் நிதிஷ் உழவு செய்து விலகியபின்,பயனை அனுபவித்தவர் லாலு என ஒரு கருத்து மத்தியில் உண்டு.
புதிரான அரசியலை புரியும்படி விளக்கியுள்ள்மை அழகு. முதல் முறை வந்தேன். பிரமிப்பில்..
ReplyDeleteஉங்கள் தளத்தின் பெயர் நன்றாக இருக்கிறது. பாரதியின் சொல்லாட்சி.. பாஞ்சாலி சபதத்தில்..
ReplyDelete//ஆதிரா said...
ReplyDeleteஉங்கள் தளத்தின் பெயர் நன்றாக இருக்கிறது. பாரதியின் சொல்லாட்சி.. பாஞ்சாலி சபதத்தில்..//
தங்களின் முதல் வருகையும், அவதனிப்பும், புகழுரையும் தங்களின் தொழிலின் தன்மையை துள்ளியமாய் விளக்கியது. பதிவின் தலைப்பும், முன்னுரைகளும், பாரதியின் அமுதசுரபியிலிருந்து
அள்ளியது தான். விரியுரையாளரின் ஆழ், அகன்ற பார்வையின் துள்ளியம் உங்க்ளின் ஒற்றைவரி பின்னோட்டத்தில் அறிகிறேன்.