காங்கிரஸின் பழைய சரித்திரத்தை திருப்பிப் பார்த்தால் அது மலரும் நினைவுகளாக மணக்காது, கிளரும் குப்பையாய்த் தான் இருக்கும் என்பது பாவம், இத்தாலியிலிருந்த சோனியாவுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அதே போல், மாமியார் வீட்டு சீதனத்தில் 1985ல் அரசியலுக்கு வந்த சிதம்பரத்திற்கும் முழுக்கதை தெரியாமலிருக்கலாம்.
காம்பிரிட்ஸின் பொருளாதார மேதையான ரிசர்வ் வங்கியில் இருந்து நரசிம்மராவால், பின்வாசல் வழியாய் பார்லிமெண்டுக்கு வந்து அதே 1985 ல் நிதி மந்திரியாகி தற்போது 2 வது 'முறை'யாக பிரதமராய் ஆக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங்கிற்கும் 125 வருட காங்கிரஸ் வரலாறு தெரிய வாய்ப்பில்லை.
ஆனால் இவ்வளவு காலம் (1969முதல்) டெல்லி அரசியலில், மந்திரிசபைகளில் மந்திரியாய் இருந்தும்,(இந்திராவின் கொலைக்குப்பின் ராஜீவ் ஒதுக்கியதில் புது கட்சி தொடங்கியது தனிக் கதை) குறிப்பாய், 21 மாத எமர்ஜென்சி காலத்தில் (ஆகஸ்ட் 1975 முதல் மார்ச் 1977)ஆட்சியிலிருந்தும், இந்த புத்தகத்துக்கு தலமை ஆசியாராக வேறு இருக்கும், திரு பிரணாப் முகர்ஷிக்கு சஞ்சயின் பங்கு என்ன, எந்த அளவு எனத் தெரியும் தானே. பின் ஏன் சோனியாவுக்காக, எல்லா தவறும் சஞ்சய்க்கே, நன்மையெல்லாம் அன்னை இந்திராவுக்கே என்று, காங்கிரஸ் மற்றும் நாட்டின் சரித்திரத்தை தவறாக பதிவாக்குகிறீர்கள்? பின் எப்படி நிகழ்காலத் தலைமுறை முந்நாள் சரித்திரங்களை நம்புவார்கள்?
1971 பொதுதேர்தலில் ராஜ் நராய்ண்-ஐ எதிர்த்து ரா பெரெய்லில் இந்திரா ஜெயித்தது செல்லாது (அரசியல் யந்திரங்கள், அதிகாரிகள் மற்றும் லஞ்சம்) என 12 ஜூன் 1975 அலகாபாத் நீதிமனறம் தீர்ப்பளித்தது.
மேலும் ஆறாண்டுகாலம் தேர்தலில் நிற்க தடை வேறு.
வழக்காடியது இப்போதைய மக்கள் பொதுநல வழக்கறிஞர் 2G புகழ் பிரசாந்த் பூஜனின், தந்தை சாந்தி பூஜன் அவர்கள். தன்னால் நாட்டை, ஜனநாயக முறைப்படி,சட்டப்படி ஆள முடியதென அறிந்து, அவசரகால (எமர்ஜென்சி)சட்டத்தை அறிவித்து, நாட்டிற்கு சர்வாதிகாரி ஆனார்.
சஞ்சய், பிறந்தது முதலே (பிறப்பே) தகராறுதான். ராஜிவ் அரசியல் அறியாது வெளிநாடுகளில் இருந்த போது, இந்திராவின் வாரிசாய் அட்டகாசம் செய்தவர் சஞ்சய்.
கட்டாய கருத்தடையை அனவருக்கும் (முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல) அமுல் படுத்தினார். தமிழகத்தில் திமுக(முக)வின் அந்தக் காலத்தின் கிராம அதிகாரிகள், ஆசிரியர், அசிரியைகளிடம் கேளுங்கள். மாருதிகார் இந்தியாவிற்கு வர பாடுபட்டவர்களில் ஒருவர். டெல்லி பாலிகா பஜார் (அண்டர் கிரவுண்டு மால்) அவரது திட்டம். அம்மாவுக்கே புத்தி சொன்ன நவீன முருகன் எனக் கொண்டாடப்பட்டவர், இதே பிரணாப் அவரிடம் கைகட்டி நின்றிருக்கலாம்.அன்னை இந்திராவிக்கே மகன் சஞ்சயிடம் கொஞ்சம்.....என அவ்வப்போது செய்திகள் கசிந்ததுண்டு.
இன்று, இந்திராவும் இல்லை, அந்த மனிதனும் இல்லை, அவர் மணைவி வாயில்லா விலங்குகளுக்கும், வாயுல்ல (வருண்) மகனுக்காவும் எதிரணியில். ஆகவே முகர்ஷி "125 வது ஆண்டுகள் காங்கிரஸ், இந்தியாவை ஆக்கியதில்" என்ற புத்தகத்தில், சஞ்சயை பலிகடா ஆக்குகிறார். மந்திரி பதவிக்கு அடுத்து, நிறைய புத்தகங்கள் படிக்கணும், எழுதனும்னு டிவி-ல முன்பு சொன்னார். (அதுனால கவர்னர் போஸ்ட் கிடைச்சா)....ம். எழுதுலாம். ராகுல், அபிமன்யு போல் அன்னை சோனியா வயிற்றிலிருக்கும் போதே, இந்திராவிடம் அரசியல் பாடம் கற்றவர். அப்பா ராஜீவிடம் போபர்ஸ் பிரங்கி வித்தையை நன்கு கற்ற வருங்கால இந்திய மன்னர் ராகுல் தான் என்று.நவீன மகா பாரதத்தின் 'அபிமன்யூ' .
வாழ்க காங்.. சாரி..நேரு கா...பரம்பரை.
வாழ்க இந்.., இத்தாலி.
Video: Congress disowns Sanjay Gandhi NewsX







சஞ்சய், பிறந்தது முதலே (பிறப்பே) தகராறுதான். ராஜிவ் அரசியல் அறியாது வெளிநாடுகளில் இருந்த போது, இந்திராவின் வாரிசாய் அட்டகாசம் செய்தவர் சஞ்சய்.
ReplyDelete//
ஹா.ஹா.. குசும்புண்ணே உங்க்ளுக்கு..!!!
:-)
// நவீன மாகா பாரதத்தின் 'அபிமன்யூ' . - ராகுல்//
ReplyDeleteஅய்யய்யோ ..இதுமாதிரி சொல்லிதொளையாதீர்கள். அதையே நம் ஊர் அன்னக்காவடிகள் பிடித்துகொள்வார்கள்.
வயற்றில் இருக்கும் போதே அரசியல் படித்தவர் என்ற கட்டுக்கதை கிளம்பிவிடும். ஜாக்கிரதை.
ஹா.ஹா.. குசும்புண்ணே உங்க்ளுக்கு..!!!
ReplyDeleteஇதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
வரலாற்றைத் திரிப்பதை விடுங்கள். வரலாற்றின் மேலேயே அக்கறையற்ற பிறவிகள் நாம்.வரலாறு தெரியாததனாலும் வரலாற்றை மறந்து விடுவதாலும் நம்மை யார் வேண்டுமானாலும் ஆளலாம்.எவன் எப்படிப் போனாலும் கவலையவற்றவன் இந்தியன்.
ReplyDeleteஅதிருக்கட்டும் வாசன்.
1971ல் ராஜ்நாராயணைத் தோற்கடித்தது செல்லாது என்ற அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை ஏற்காது அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.
எமெர்ஜென்சிக்குப் பிந்தைய தேர்தலில் அதே ரேபரேலியில் அதே ராஜ்நாராயணிடம் தோற்கடிக்கப்பட்டார் இந்திரா எனும் சர்வாதிகாரி.
இப்படி எழுதப் பட வேண்டும் வரலாறு.
செத்துப்போன சஞ்சையை மட்டும் பலிகடாவாக்கி ப்ரணாப் முகர்ஜி எழுதியது வரலாறல்ல.தலை நிமிரா அடிமையின் விசுவாசம்.
பட்டாபட்டி.... said...
ReplyDelete/ஹா.ஹா.. குசும்புண்ணே உங்களுக்கு..!!!
:)/
உங்களின் பார்வையில் எல்லாம் அப்படித்தான் தெரியும். குசும்பு பண்ணது அவுங்க பட்டாபட்டி.
நன்றி.
கக்கு - மாணிக்கம் said...
//வயற்றில் இருக்கும் போதே அரசியல் படித்தவர் என்ற கட்டுக்கதை கிளம்பிவிடும். ஜாக்கிரதை.//
மக்கள் திருத்ஷ்ராட்டினனாக இருந்தால், பிஷ்மர்கள் இருக்கும் நாட்டிலும், மகா பாரதப்போர் தான் கடைசி தீர்வாகும் அன்பு கக்கு - மாணிக்கம்.
சண்முககுமார் said...
/இதையும் படிச்சி பாருங்க/
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் படித்து ரசித்து, பின்னோட்டமிட்டேன் திரு சண்முககுமார்.
சுந்தர்ஜி said...
/எமெர்ஜென்சிக்குப் பிந்தைய தேர்தலில் அதே ரேபரேலியில் அதே ராஜ்நாராயணிடம் தோற்கடிக்கப்பட்டார் இந்திரா எனும் சர்வாதிகாரி.
இப்படி எழுதப் பட வேண்டும் வரலாறு./ அவர் மத்திய மந்திரியாகி போட்ட ஆட்டம் தனி.
/தலை நிமிரா அடிமையின் விசுவாசம்./
கங்கிரஸ்காரர்கள் ஏன் அந்த குடும்பத்தை மட்டுமே தூக்கித்திரிகிறார்கள் என்பது ஒரு புதிர்.காங் ஆட்சியில், திரு சாஸ்திரி அவர்கள் தவிர வேறு எந்த பிரமரும் நாட்டுநலனை முன்னிறுத்தவிலலை என்பதே என் கருத்து சுந்தர்ஜி
மொரார்ஜியைக் கூட நீங்கள் ஏற்கவில்லையா..
ReplyDeleteதிரு ரிஷபன்,
ReplyDelete/மொரார்ஜியைக் கூட நீங்கள் ஏற்கவில்லையா.. /
முதலாவதாக அவர் எமர்ஜென்சிக்குப் பின் ஜனதா கட்சி ஆட்சியில் தான் பிரதமரானர். கங்கிரஸில் இருந்த போது இந்திரா காலத்தில் அவர் துணைப்பிரதமர் தான். மேலும் இவரின் அரசியல் தர்மம் காக்கும் வேள்வியில் மகளையே பலி கொடுத்த அப்பழுக்கற்ற புனிதர் தான் , ஆனால் அவரின் மகன் கொஞ்சம் அப்பா பெயரை உபயோகித்து சுயலாபங்களுக்காய் ஓரிரு தவறுகள் செய்து, தன்னைக் காத்துக் கொள்ள காவல் துறையையும் பயன்படுத்தினார். (பாரதி மணி உயிர்மையில்)
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
ReplyDeleteஇனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
சிவகுமாரன் said...
ReplyDelete/வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு./
நன்றி, உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்,சிவகுமாரன்.
எல்லாம் சரி, காங்கிரசுக்கு எது மாற்று ?மதவாத பி.ஜே.பி.யா இல்லை சந்தர்ப்பவாத கம்யூநிஷ்டா ? சரியான மாற்று கிடைக்காத வரை எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி தான் நாட்டாமை.
ReplyDeleteஎந்த கட்சி என்பதல்ல பிரச்னை. ஆளவேண்டியவர்கள் நாட்டுக்கு நல்லது செய்து மக்கள் வாழ்வு உயர பாடுபடுபவர்களா? மதங்களையும், சாதிகளையும், மொழிகளையும் தனக்காகப் பயன்படுத்தி, நாட்டின் வளத்தையும், மக்களின் வாழ்வையும் சுரண்டி தன் குடும்பத்தினருக்காக வாழ்பவர்களா? வாக்காளன் (நாம்) தெளிவானால், தேர்தலின் பலன் நாட்டுக்கு நலன் தரும். நேருவின் தவறுகள் பிரச்னை தீராத காஷ்மீராய், சீனாவிடம் தோற்ற துயராய். இந்திராவால், சீக்கியர் சீற்றம், அஸ்ஸாம் குழறுபடி, எமர்ஜென்சி இருள். ராஜீவ் எனில், ஊழல் வெடிக்கும் போபர்ஸ். வி.பி சிங், மண்டல் கமிஷனை காலம் கணிக்காது அவசரகோலமிட்டு அழித்தது. நரசிம்மராவின்,, தாராள பொருளாதார கொள்கையின் தொல்லைகள், பங்கு மோசடிகள், பாபர் மசுதி பாதகம். வாஜ்பாயால் கார்கில், பாதுகாக்காது,பரம்பரை எதிரியிடம் கோட்டைவிட்டுப் பின் பல இன்னுயிர்களை காவு கொடுத்து மீட்டது. மன்மோகன் + சோனியா காலத்தில் நாட்டையே அமெரிக்காவிடம் அடகு வைப்பது.
ReplyDeleteமாணவர்கள் விழித்திருந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தால், ஆசிரியர் ஒழுங்காய் பாடம் நடந்துவார். மக்களாட்சியில் நம் விழிப்புணர்ச்சி முக்கியம், இல்லையெனில் நாடு வன்புணர்ச்சியாளர்களின் வசமாகிவிடும். தனிப்பதிவே போடலாம் போல, சரியா கவிஞர் சிவகுமார் அவர்களே? கேள்விக்கு மிக்க நன்றி.
மக்களாட்சி ஆம் ஆள்பவனின் மக்களாட்சி திருந்தா ஜென்மமாக நாம் இருக்கும் வரை தொடரும் அவர்களின் மக்களாட்சி மயான ஆட்சியாக
ReplyDeleteதங்கள் பதிவைப் படித்தால் மறைந்த செய்திகளும், மக்கள் மறந்த செய்திகளும், மனக்கண் முன் மறு ஒலிபரப்பாவது போலத் தோன்றுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர், இந்திய அரசியல் வரலாற்றை நன்கு அறியவும் உதவக்கூடும். தொடரட்டும் தங்களின் இத்தகைய எழுத்துப் பணி. தங்களின் பதிவுகள் என்றாவது ஒரு நாள் நல்லதொரு மாற்றத்திற்கு வழி வகுக்கக்கூடும். வாழ்த்துகள்.
ReplyDeletedineshkumar said...
ReplyDelete//மக்களாட்சி ஆம் ஆள்பவனின் மக்களாட்சி திருந்தா ஜென்மமாக நாம் இருக்கும் வரை தொடரும் அவர்களின் மக்களாட்சி மயான ஆட்சியாக./
கட்சிகள் மாறும், காட்சிகள் மாறும், உறவுகள் மாறும், உருவங்கள் மாறும். கொஞ்சம் கனவுகளோடு காத்திருப்போம் தேர்தல் வரை. உங்களின் உணர்வுகள் இங்குள்ளோரின் எண்ணங்களோடு ஒத்திருக்கிறது திரு தினேஷ் குமார்.
VAI. GOPALAKRISHNAN said...
/ ...இன்றைய இளம் தலைமுறையினர், இந்திய அரசியல் வரலாற்றை நன்கு அறியவும் உதவக்கூடும்.... தங்களின் பதிவுகள் என்றாவது ஒரு நாள் நல்லதொரு மாற்றத்திற்கு வழி வகுக்கக்கூடும். வாழ்த்துகள்./
என்றாவது ஒரு நாளா? "அந்த ஒரு நாள்" இன்றாவது எப்போது வைகோ சார்?
இந்தாரசியல் என்னும்சதுரங்கத்தைப்பற்றி ஓரளவாவது தெரிஞ்சுக்கனும்னு பாக்கரேன். எல்லாமே ஒரே குழப்படியாவே இருக்கே.
ReplyDeleteமேடம், நீங்களெல்லாம் அரசியல் காத்துக்காம இருக்கிறதால் தான், கத்துக் குட்டிகள் எல்லாம் இந்த ஆட்டம் போடுகின்றனர். உங்களின் ஐந்து குழந்தைகளின் அரசியம் ஆர்வம் எப்படி?
ReplyDeleteI should thank YOU for your 1st visit and the comment.
எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது ஏமாற்றங்கள் ஏற்படுவது சகஜம்.ஏமாற்றங்களின் பட்டியலை மட்டும் பார்த்தால் துவண்டுவிடுவோம்.நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள்.விருப்பு வெறுப்பு இல்லாமல் அலசுவதே சிறந்ததாக இருக்கும்.எந்த செயலை செய்பவனும் பிறருக்கு தீங்கு நேர்கிறது என்று வேண்டி செய்வதில்லை.அவனவன் மனசாட்சிக்கு சரி என்று படுவதை செய்கிறான். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தவறு என்றும் பயனடைந்தவர்கள் சரி என்றும் நம்புகின்றனர்.பிற்காலத்தில் ஆராயும்போது தெரியவரும் PERSPECTIVE சம்பவங்கள் நடக்கும்போது இருப்பதில்லை.குறைகளை சுட்டிக்காட்டும்போது அது நடந்த பின்புலத்தையும் கோடிகாட்டவாவது செய்யவேண்டும். மனசில் பட்டதை எழுதுகிறேன் வாசன்.
ReplyDeleteநன்றி திரு பாலசுப்ரமணியம் சார்.
ReplyDeleteதகவல்கள், உண்மையானவை என அறிந்த பின்போ பதிவிடுகிறேன். அநுமானங்களையும், செவிவழி செய்திகளையும் தேவையெனில் அவ்வாறாகவே மட்டுமே பதிவில். அரசு, நாட்டு மக்களுக்கு, பணி புரிய நம்மால் தேர்ந்து அனுப்பி வைக்கப்பட்ட ஐந்தாண்டு ஒப்பந்ததாரர் மட்டுமே. மக்களே, அரசை நியமித்த எஜமானர்கள். ஆனால் மக்களின் மறதியையும், பிற பலவீனங்களையும் பயன்படுத்தி அரசு மக்களிடமிருந்து பல உண்மைகளை மறைத்து, திரித்து முட்டாள்களாக்கிட எல்லா வழிகளிலும் முயன்று வெற்றியும் பெற்றுவிடுகின்றன.
பழைய ஒரமோர் சேர்த்தால் தான் பால் தயிரகிறது. அல்ல வெனில் மறுநாளில் அதே பால் திரிந்து கெட்டு விஷமாகி விடுகிறது. புதிய தலைமுறையினருக்கு, மதுவிலக்கு 72 ல் கருணாநிதியால் தான் வந்தது. அது வரை மது அருந்துவது சட்டப்படி குற்றமாய் இருந்தது என்பது கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்கள்.
விமர்சனக் கட்டுரைகளில், கட்டுரையாளாரின் நடுநிலை பற்றிய தங்களின் மேலான கருத்துக்கள் மிகவும் சரியானது பயனுள்ளவை.
நாட்டு நடப்பைக் கண்டு நீங்கள் மிகவும் கொந்தளித்துப் போகிறீர்கள். சற்றே ரிலாக்ஸ் செய்து கொள்ள வாருங்கள் gopu1949.blogspot.com
ReplyDelete