Saturday, November 27, 2010

க‌னிமொழி-ஜெய‌ல‌லிதா வ‌ழ‌க்கு (நிலக்க‌ரி)

திரு க‌ருணாநிதியின் க‌விதை வாரிசான‌ க‌னிமொழியின் புக‌ழ் அங்கெங்கெனாத‌ப‌டி அமெரிக்கா வ‌ரை ப‌ர‌விய‌தை,அறிந்து தமிழ‌க ம‌க்க‌ள் அவர‌து செய‌ல்திற‌ன் க‌ண்டு விய‌ந்திருக்கிறார்க‌ள்.

இத‌ற்கு முன்பே அவ‌ரின் வியாபார‌ நுட்ப‌ம் கீழைநாட்டிலும் செழித்திருந்திருந்தாய் ஜெய‌ல‌லிதாவின் அறிக்கையில் ஏப்ர‌ல் மாத ஆங்கில‌த் தின‌ச‌ரியில் வெளியாகி இருந்த‌து.
இந்தோனிஷிய‌வில் தமிழ‌க மின்வாரிய‌த்திற்கு வாங்கிய‌ நில‌க்க‌ரி கொள்முத‌லில் (ஒரு ட‌ன்னுக்கு 21 டால‌ர் க‌மிஷன்)2000 கோடி டால‌ர் அள‌விற்கு லாப‌ம் அடைந்த‌தாக‌ கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.
விவ‌ர‌ங்க‌ளை கீழே உள்ள‌ இணைப்பில் காண்க:
http://www.deccanchronicle.com/chennai/kanimozhi-may-sue-jaya075

இதில் கே.என்.நேரு குடும்ப‌த்தின‌ருக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் உள்ளதாக‌த் தெரிவிக்கிற‌து அந்த செய்தி. இத‌னை வெளியிட்ட‌ ஜெய‌ல‌லிதா ம‌ன்னிப்பு கேட்காவிடில், அவ‌ர் மீது அவ‌தூறு வ‌ழ‌க்கு (சிவில்+கிரிமின‌ல்) தொடுக்க‌ப் போவ‌தாய் க‌னிமொழி கூறியிருந்தார். அவ‌ர‌து வ‌ழ‌க்க‌றிஞர் பி.அர்.ராம‌ன், கே.என்.ராம‌ஜெய‌த்திற்கும், க‌னிமொழிக்கும் வியாப‌ர‌த் தொட‌ர்பு இல்லை என்கிறார்.

நம‌து க‌வ‌லையெல்லாம்.

ஜெய‌ல‌லிதா மன்னிப்பு கோரினாரா? இல்லையெனில் வ‌ழ‌க்கு எந்த நிலையில் உள்ள‌து?
அல்ல‌து இது முழுவ‌தும் அர‌சிய‌ல் ஆதாய‌ங்க‌ளுக்காக ஆளும்க‌ட்சியும், எதிர்க‌ட்சியும் அர‌ங்கேற்றும் நாட‌க‌மா? அப்ப‌டியானால் மின்வாரிய‌த்திற்கு யாரிட‌மிருந்து நில‌க்க‌ரி வ‌ந்த‌து? என்ன‌ த‌ர‌த்தில்/விலையில்?

'நேற்றை ம‌ற‌ந்து, நாளையை நினைக்காது', வேதாந்திக‌ள் அருளிய "இக்க‌ணம் வாழ்த‌லை" வாழ்வ‌தால், அர‌சியல்வாதிக‌ள் ந‌ம்மை ஏமாற்றி அவ‌ர்க‌ளின் 'ஏழாவது த‌லைமுறை' வ‌ரை வாழ சேர்த்துக் கொண்டிருக்கிறார்க‌ள். நாமும் ஆறு மாத‌த்திற்கு முந்திய‌‌ நிலக்க‌ரி தாண்டி, இர‌ண்டாண்டுக‌ளுக்கு முன் ந‌ட‌ந்த‌ ஸ்பெக்ட்ர‌முக்குள் மூழ்கிவிட்டோம்.

12 comments:

  1. கரிமொழியும் கரிணாநிதியும் சே!அவசரத்துல பேரு கூட மாறிப்போச்சே வாசன்.இன்னொரு வழக்கு இன்னொரு விசாரணை இன்னொரு தப்பித்தல் ராஜினாமா.நமக்கு இதெல்லாம் எத்தனை வருஷமா பழகிப்போன விஷ்யங்கள். ட்ராபிக் ராமசாமி மாதிரி ஆயிட்டார் சுப்ரமண்யசாமியும்.அவர் பேரும் வெளில தெரிய வேற வழியில்ல.

    ReplyDelete
  2. பின் தொடரும் ஊழலின் குரல்.

    ReplyDelete
  3. /சுந்தர்ஜி said...
    கரிமொழியும் கரிணாநிதியும் சே!/
    ச‌ரியாய் சொல்லிவிட்டீர்க‌ள்.

    /santhanakrishnan said...
    பின் தொடரும் ஊழலின் குரல்/
    விளையுமா விரும்பிய முடிவு?

    ReplyDelete
  4. நமது கவலைகளெல்லாம் இன்னும் வெளிவராத பட்டியல் பற்றியும். எப்படி இம்முயூன் ஆகிவிட்டோம்.. எந்த அளவு ஊழல் நடந்தாலும் ‘நமக்கென்ன’ என்று இருப்பது நமது பயத்தின் அளவைக் காட்டுகிறதா.. அல்லது ஊழலின் சர்வ வியாபித்துவத்தைக் காட்டுகிறதா..

    ReplyDelete
  5. நமக்கான அறச்சீற்றத்தை பெருக்கிக்கொள்ள வேண்டியதான அவல அரசியலின் போக்கை சரியாக்க ஏதேனும் செய்தே ஆகணும். தர்மம் மறுபடியும் வெல்லும் எனக் கையைக் கட்டிக்கொண்டு காத்திருக்காமல் இனி பொறுப்பதில்லை என உங்களைப் போன்றோர் பொறியை தழலாக்கும் வேலையில் இறங்கவேண்டும்.

    ReplyDelete
  6. /நிலாமகள் said...
    தர்மம் மறுபடியும் வெல்லும் எனக் கையைக் கட்டிக்கொண்டு காத்திருக்காமல் இனி பொறுப்பதில்லை என 'உங்களைப் போன்றோர்' பொறியை தழலாக்கும் வேலையில் இறங்கவேண்டும்./
    'நம் போன்றோர் எல்லாம்' எனச் சேர்ந்து சொல்வோம். ச‌ரிதானா
    நிலாமகள் அவ‌ர்க‌ளே?

    ReplyDelete
  7. மருதம்: வயலும்..வயல் சார்ந்த இடமும்..
    குறிஞ்சி: மலையும்..மலை சார்ந்த இடமும்..
    பாலை : மணலும்..மணல் சார்ந்த இடமும்..
    நெய்தல்: கடலும்..கடல் சார்ந்த இடமும்..
    இந்தியா : ஊழலும்..ஊழல் சார்ந்த இடமும் !!!!!

    ReplyDelete
  8. /”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    இந்தியா : ஊழலும்..ஊழல் சார்ந்த இடமும் !!!!!/

    THE RIGHT HIT, What an explanation!!!
    Hats off dear RRR.

    ReplyDelete
  9. //vasan said...
    வைகோவின் "புத்தம் புதிதாக சீவப்பட்ட இளம் நொங்கு போல..(கண்க‌ளும்,இத‌ழும் ஃ) இளமை குன்றாத அழகானப் பெண்" வ‌ருண‌னை ஆர்ஆர்ஆரின் ப‌டைப்பை விஞ்சி நிற்கிற‌து.சில ச‌ம‌ய‌ம் நாவ‌லைவிட, அத‌ன் ம‌திப்புரை சிற‌ப்பாகி விடுதல் போல். ம்.. தொட‌ர‌ட்டும்.
    December 7, 2010 3:35 AM //

    VAI. GOPALAKRISHNAN said...
    வாசன் அய்யாவின் பின்னூட்டத்தில் தான் எத்தனை வாசனை ? மயக்கமே வந்து விட்டது எனக்கு.

    ஆர்.ஆர்.ஆர் எங்கே; அடியேன் எங்கே ... மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம்.

    இதில் அவரை நான் விஞ்சுவதாவது?
    Anyhow, my sincere thanks to Mr. Vasan, Sir.
    December 8, 2010 6:09 AM

    ReplyDelete
  10. இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.

    நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் வாசன்.

    யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

    எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

    மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

    நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

    பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

    முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

    காத்திருக்கிறேன் அருமை வாசன்.

    ReplyDelete
  11. சுந்த‌ர்ஜி, க‌ட‌ந்த‌ சில/ப‌ல‌ ப‌திவுக‌ளில் சுனை நீராய், நீருற்றாய், சிற்ற‌ருவியாய் இனித்து வ‌ழிந்த‌
    க‌விதை, மெல்ல‌, மெல்ல‌ பொங்கி பிர‌வாகமாக மாறி வ‌ருவ‌தை உண‌ர்ந்து விய‌ந்து அவ‌தானித்துக் கொண்டிருந்தேன். ச‌ரியானது செய்ய‌ நாம் முனைவோம். ஒத்த ம‌னவோட்ட‌முள்ளவ‌ர‌கள், கருத்திற்கு முக்கிய‌ம‌ளித்து, த‌றுக்கு க‌ளைந்து, முத‌ல் க‌ல்லை எறிவோம். புதுச்சுட‌ர் ப‌ர‌வி எரிய‌. நீங்க‌ள் ரெடி. நானும் ரெடி.

    ReplyDelete
  12. enna periya oozhal senjuttaangalaam? iththana varushamaa yaarum pannaathathayaa pannirukkaanga? munnellaam theriyala.. ippo aetho thappi thavari velila vanthaachchu...

    (niira radia docomo/reliance cell mattum use pannirunthaa intha prachchanaikalellaam vanthirukkaathu.. idea pondra subscriptions naala thaan prachchana.. ennaa tap panna service provider permission venum.. avanga company aala avanga kandippaa tap panna maattaanga..)

    neenga ippo ezhuthirukkara matter enakku theriyaathu. periya aachcharyam illa. ithnaalalaam periya baathippu irukkumnu enakku thonala. electionla ivanga thoththaalum- aduththamurai Miss. Jaya vanthu michcham meethi vittuvechchatha yellaam suranda thaan poraanga!

    intha gajaanaa illa antha gajaanaa.. "poruththathu porum-pongi yezhu"- kalaingar dialogue thaane? onnum velaikkaakaathu!

    ReplyDelete