Friday, November 5, 2010

ஈரோடு கதிரின் ப‌திவுக்கு பின்னோட்ட‌மாய்..

ஈரோடு கதிரின் 'வ‌வுனியாக்கு போயிருந்தேன்'‌ ப‌திவு ஏற்ப‌டுத்திய‌ இய‌லாமை அதிர்வை, பின்னோட்ட‌மாய் இட்ட‌து (சிறு,சிறு திருத்த‌ங்க‌ளுட‌னும், சேர்க்கையுட‌னும்.)

இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏன் இந்த‌ நிலை?
அர‌சிய‌ல் நாய‌க‌ர்க‌ள், நாய‌கிக‌ளின் சுய‌நல‌ன், சுய‌லாப‌ங்க‌ளுக்காய், எளிதில் விலைபோகும், ஏமாறும், ஏமாற்ற‌ப்ப‌டும் இன‌ங்க‌ளில் முத‌ன்மையான இன‌ம் "த‌மிழ் இன‌ம்".

 

இந்திரா காந்தி முத‌ல்,ராஜிவ் தொட‌ர‌, அவ‌ர் ம‌க‌ள் பிரிய‌ங்கா  (பயிற்சி தொட‌ங்கி,ராஜிவ்/ஜெய‌வ‌ர்த்த‌னே உட‌ன்ப‌டிக்கை, நளினி சிறை ச‌ந்திப்பு)வ‌ரை, மத்தியின் சூழ்ச்சி சாத‌ர‌ண ம‌க்க‌ள் அறியா‌த‌து (எத்த‌னையோ சூதும் வாதும்). இந்திராவின் அணு சோத‌னைக்கு இல‌ங்கை யுஎன்னில் ஆத‌ர‌வு த‌ந்த‌தற்கு ப‌ரிசு, தான் க‌ச்ச‌த்தீவு என்ப‌தை யார் யார் அறிவ‌ர்? த‌மிழ‌கத்தில், இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் சிந்தும் ர‌த்த‌த்தில், இரு க‌ட்சி த‌லைமையும் த‌ங்க‌ள் கொடிக‌ளுக்கு மேலும் சிக‌ப்பு வ‌ர்ண‌ம் பூசிக் கொள்ள‌ துடிப்பாய் இருந்த‌ன‌ர். பிரபாக‌ர‌னுக்கு ஒரு ப‌க்க‌ம்,
சிபா ர‌த்திண‌த்திற்கு ஒரு ப‌க்க‌மாய். இடையில் த‌மிழீழம், இந்திய‌ / த‌மிழ‌கப் பூனைக‌ளிட‌ம் முறையிட‌ப்ப‌ட்ட‌ வெண்ண‌க் க‌ட்டிக‌ளாய்.


ராஜீவ் கொலை ஒரு பெரிய‌ துருப்புச்சீட்டு, அது எல்லாருக்கும் வ‌ச‌தியாய் பொருந்திப் போன‌து.

இடையில் 9/11 அமெரிக்க‌ நிக‌ழ்வு, ஆயுத‌ம் ஏந்தினால் சுத‌ந்திர‌ போராளிக‌ளும், தீவிர‌வாதிக‌ள் தான் என்ற ம‌னநிலையை உல‌க ம‌க்க‌ளிட‌ம் கொண்டு வ‌ந்த‌து. அமெரிக்க‌, ஐரோப்பிய‌ நாடுக‌ள், இவ‌ர்க‌ள‌து அமைப்பின் மீது பொருளாதார‌த் த‌டைக‌ளை ஏற்ப‌டுத்திய‌து. வ‌டஇல‌ங்கையை ஆண்டு கொண்டிருந்த‌ புலிக‌ளுக்கு, அர‌சிய‌ல் த‌லைமையை விட‌ ப‌டைப‌‌ல ஆட்சி வ‌ச‌தியாய் இருந்த‌து. புலிக‌ள் நிலத்தில், க‌ட‌ற்புலிக‌ள் நீரில், ப‌ற‌க்கும் புலிக‌ள் வின்னில் (2008 மாவீர‌ர் தின பேச்சு) ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌தாய், பெரும் நாட்டின் (இந்தியா) இராணுவ‌த்தையே வென்ற‌தாய் த‌லைமை நம்பிய‌து கார‌ண‌ங்க‌ளாய் இருக்க‌லாம்.

ஆனால், 2009 ஜ‌ன‌வ‌ரி 2ல் கிளிநொச்சி விழுந்த‌வுட‌ன் புலிக‌ளின் பிம்ப‌ம் ச‌ரிய‌த் தெட‌ங்கிய‌ போது கிளம்பிய‌ இந்திய‌ த‌மிழ‌ர்க‌ளின் ஆத‌ர‌வு அலையின் வேக‌ம் ஒருங்கிணைக்க‌ப் ப‌டாம‌ல், சினிமாக்கார‌ர்க‌ள், க‌ம்யூனிஸ்ட், சிறுத்தை, வைகோ, நெடுமாற‌ன், சீமான், அதிமுக, பா மா கா, விஜ‌ய்காந்த், திமுக எனப் ப‌ல‌ர‌து த‌லைமைக‌ளின் கீழ் சித‌றிய‌தால், (இல‌ங்கைத்த‌மிழ‌ன் முன்பு எப்ப‌டி ஒன்று ப‌டாம‌ல் ப‌ல்வேறு இய‌க்க‌ங்க‌ளில் இருந்த‌து போல்) அத‌ன் தாக்க‌ம் நீர்த்துப் போன‌து.(ராமேஷ்வ‌ரம்/சென்னை கூட்ட‌ங்க‌ள், ம‌ழையில் ம‌னித‌ச்ச‌ங்கிலி, ஏப்ர‌ல் 23 ல் பந்த், திருமா ம‌ற்றும் ச‌ரித்திர‌ புக‌ழ் முக‌ வின் க‌ட‌ற்க‌ரை உண்ணாவிர‌த‌ம், போன்ற‌வை)

ம‌றுப‌டியும் முத்துக்கும‌ர‌னின் தியா‌க‌த்தால் தூண்ட‌ப்ப‌ட்ட‌ தீ ஆளும் க‌ட்சியின் தேர்த‌லுக்கு தீவினையாக்கலாம், என்ற நோக்கில் அவ‌ச‌ரமாய் அணைக்க‌ப்ப‌ட்ட‌து.மாண‌வ‌ எழுச்சிக்கு க‌ல்லூரிக‌ள் விடுமுறை அறிவித்து மூடுவிழாவான‌து. 2009 மே மாத‌ பார‌ளும‌ன்ற‌ தேர்த‌ல் இத‌ற்கு மேலும் உறுதுணையான‌து. ஊட‌க‌ வெளிச்ச‌ம் வேறு ப‌க்க‌ம் க‌விழ்ந்த‌து.
இப்ப‌ என்ன‌ சொல்லி, என்ன‌ ஆக‌ப்போகிற‌து. க‌திரின் ப‌திவை ப‌டித்த‌பின் தோன்றிய‌ இய‌லாமையை, சுய‌ துக்க‌த்தைக் குறைக்க‌, இப்ப‌டித்தான், த‌ன் நிழ‌ல் பார்த்து குரைக்கும் கோட்டி நாயாய் ம‌ன‌ம் ஆற்றாது எழுதிக் கிழிக்கிறோம். இராணுவ‌ ம‌ரியாதையின் போது ராஜிவ் காந்தியை துப்பாக்கியால் அடித்தவ‌னின் வாரிசாய் இருந்திருப்பானோ?
 "அந்த இராணுவத்தானின் இதழோரம் வழிந்த அலட்சியப் புன்னகை", காட்டிய‌வ‌ன்?

                                            

'ஒன்றுப‌ட்டால் உண்டு வாழ்வு, ந‌ம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவ‌ர்க்கும் தாழ்வே' என்ற குங்கும‌ப் பொட்டுகார‌ன், பொட்டில் அடித்த‌து போல் சொன்ன‌ பின்பும், நாம் ஒருவ‌ர் காலை ஒருவ‌ர் இழுக்கும் நண்டுக‌ளாக‌வே இருந்தால், இந்த‌ நிலையாவ‌து நிலைக்குமா?

8 comments:

  1. தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. இப்ப‌டித்தான், த‌ன் நிழ‌ல் பார்த்து குரைக்கும் கோட்டி நாயாய் ம‌ன‌ம் ஆற்றாது எழுதிக் கிழிக்கிறோம்//

    சாதாரண வரிகளில்லை இது வாசன். ரண வரிகள்.

    இலங்கைப் பிரச்சனையில் எம்.ஜி.ஆர். பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டில் உண்டான தாக்கத்தை அதன் பின் வேறு யாரும் உருப்படியாய் கையிலெடுக்காதது ஈழப்பிரச்சனையின் தடத்தை நீர்த்துப் போக வைத்துவிட்டது. ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும் இடம் மாறி இருப்பது புதிதல்லவே வாசன்?

    தவிர நீங்கள் திருநெல்வேலியா? கோட்டி என்ற பதம் அடையாளம் காட்டுகிறது.

    ReplyDelete
  3. உங்க புது டெம்ப்ளேட் அழகாக இருக்கு வாசன்.

    ReplyDelete
  4. /வெறும்பய said.

    தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்../
    Many Thanks & wish you & family + Friends very happy & bright Diwali.

    ReplyDelete
  5. சுந்தர்ஜி
    //உங்க புது டெம்ப்ளேட் அழகாக இருக்கு வாசன்//
    உங்க‌ளின் தோகை முன், இதெல்லாம் வெறும் வான்கோழி சிற‌குக‌ள்.
    ஏரியா ப‌ற்றி பேசினால், நாம் எல்லாம், பூங்குன்ற‌னாரின் வாரிசுக‌ள்.
    ஒன்னாம் வ‌குப்பு முத‌ல் மூன்றாம் வ‌குப்புவ‌ரை (ப‌டிச்ச‌தே அவ்வ‌ள‌வு தானோ?)
    தூத்துகுடி, திருச்சிலுவை ஆர‌ம்ப‌ பாட‌சாலை (சார்ல‌ஸ் தியேட்ட‌ர் அருகில்)
    அப்ப‌டிச் சொன்னாத்தானே, இப்ப‌ அடையாள‌ம் தெரியும்!

    ReplyDelete
  6. எரிதழல் சுட்டது நெஞ்சை . கையாலாகாத வெறுப்பை எத்தனை பொருத்தமாக சொன்னீர்கள், நிழல் பார்த்து குறைக்கும் நாய் என்று... காலம் நம்மை பார்த்து காறி உமிழுமே... எந்த நதியில் நீராடினாலும் நம் பாவம் தொலையாது நம் இனத்துக்கான புதை குழி நம்மவர்களாலேயே தோண்டப்பட்ட அவலம். வேறு எந்த இனத்துக்கும் இல்லை இந்த இழி நிலை. குற்ற உணர்வோடு கழிக்கிறேன் ஒவ்வொரு நொடியையும்...

    ReplyDelete
  7. பாரதிக்குமார் said...
    //நம் இனத்துக்கான புதை குழி நம்மவர்களாலேயே தோண்டப்பட்ட அவலம். வேறு எந்த இனத்துக்கும் இல்லை இந்த இழி நிலை.//
    'குடி உய‌ர‌, கோன் உய‌ரும்' என்ற‌து முதுமொழி.
    ஆனால் கோன் உய‌ர‌ குடிக‌ள், குடிகார‌ர்க‌ள் ஆக்க‌ப்ப‌டுகிறார்க‌ள்.
    சாராய‌ த‌யாரிப்பு ம‌ற்றும் விநியோக‌ம் அதிகார‌ குடியிட‌ம்.

    ReplyDelete