பாசிச அதிகார மையங்களுக்கு எதிராக போரடுபவர்கள், மொத்தத்தில்,
அரசியல்வாதிகளை, அவர்களின் வாரிசுகளை வணங்கி வாழ்த்துப்பா பாடாதவர்கள், அவர்களால் அல்லறும் அபலைகளுக்கு ஆதரவு தருபவர்கள் ஆகிய அனைவரும், இந்தியவின் தேசத்துரோகிகள்.

ஆதி வாசிகளை விரட்டிவிட்டு காடுகளை அழித்து கனிமவளம் திருடுபவர்கள்,
அரசுக்கு வரவேண்டிய வருவாயை, பொய் கம்பனிகளுக்கு விற்று, தனதாக்கிக் கொள்பவர்கள்,
பங்குச்சந்தையை, ஆட்டு மந்தைகளாக்கி, கறுப்பு ஆடுகளால் பல கோடி சம்பாதிபவர்கள். விளையாட்டு போட்டி தொடங்கும் முன்பே, போட்டி போட்டு பணம் பண்ணிய தலைவர்கள்,


உயிரைப் பணயம் வைத்து,நாடு காக்கும் ராணுவத்தினருக்காக வாங்கும் ஆயுதங்களில், இவர்கள் வயிறு வளர்க்க ஊழல் புரிந்தவர்கள்.
பாதுகாப்பு படையினரின் கவச அங்கி வாங்குவதில் கூட காசு பார்ப்பவர்கள். இவர்கள் தான் தே(க)சம் வளர்க்கும் தேசீயவாதிகள்.
நடுநிலை தினசரிச் செய்திகளில், முன்னாள் காவலதிகாரி கஞ்சா வளர்க்கிறார். முந்தைய சட்டமன்ற உறுப்பினர் ஐடி அதிகாரியாய் வேடமிட்டு ஏமாற்றுகிறார். இன்றைய ராஜ்ய சபை உறுப்பினர், நீதிமன்றத்தை ஏமாற்ற, போலி ஆவணம் சமர்ப்பித்திருக்கிறார். நீதிபதிகள் லஞ்சத்தை நிர்ணயிக்கச் சொல்கிறார்கள்.
அதிகாரத்தால் அப்பாவிகளின் நிலங்களை வாங்கி அந்நிய கம்பனிக்கு அதிக விலைக்கு விற்கும் அதிகார அரசியல் மையங்கள். வளரும் புறநகரின் மனை, நிலம் விற்பனை அதிகாரங்களை பங்கிட்டுக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் அடியாட்கள். தனியார் பஸ், ஆட்டோ உரிமையாளர்கள். பல்லாயிரம் சதுரடி பரப்புள்ள அடுக்குமாடிக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள்,தியேட்டர் வளாகங்கள் இவைகளின் பெரும் பகுதி உரிமையும், ஆளுமையும் அரசியல்வாதிகளிடம் தான். போபால் குற்றவாளியை விமானத்தில் தப்ப வைப்பவர்கள், சிறந்த தொழில் விற்பன்னர் விருது வாங்கியவரே,கம்பனியை ஏமாற்றியதற்காக கைதாவார்.
இவர்கள் தான் இந்திய தேசத்தை காக்க, வளர்க்கப் பிறந்த கர்ம வீரர்கள். இன்னும் என்னென்ன இடர்களோ, இத்தகைய மக்களின் ஆட்சியில். உலகிலேயே "படித்த முட்டாள்கள்" நிறைந்த நாடு, நமது நாடு மட்டும் தான். இது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நன்றாய் தெரியும். தப்புச் செய்பவனைத் தான் தலைவனாக்குவான் இந்தியன்.



நீங்கள் சுழற்றும் சவுக்கு ஒருவர் விடாது தாக்குகிறது மூலைமுடுக்குகளுக்கும் துரத்தித் துரத்தி.வெப்பமும் வேகமும் தகிக்கிறது வாசன்.
ReplyDeleteதனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் ...அந்நியன்
ReplyDeleteசுந்தர்ஜி, நீங்கள் சவுக்கு வாசகரா?
ReplyDeleteஆக, வெள்ளைக்
ReplyDeleteகாரர்களிடமிருந்து,
நாட்டை மீட்டுக்,
கொள்ளைக்
காரர்களிடம்,
கொடுத்து விட்டோம்
நாம்!!!!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/
/அன்புடன்,
ReplyDeleteஆர்.ஆர்.ஆர்./
Thank You.
அழகாய், அருமையான வார்த்தைகளில் ரத்தினச் சுருக்கமாய் !!