
அந்நிய கம்பனிகள் முதன் முதலில் இந்தியாவிற்கு கப்பலில் வியாபாரத்திற்காய் வந்த போது, அவர்களுக்கு, அப்போதைய முகலாய மன்னர்களும், பிற குறுநில மன்னர்களும் அளித்த பெரும் சலுகைகளை, வரவேற்புகளை, இன்று இந்திய மைய அரசும், மாநில அரசுகளும் அந்நிய முதலீட்டு கம்பனிகளுக்கு செய்கின்றன. அன்று அரசர்களுக்கு மேலைநாட்டு சாராயங்களும், பொருள்களும், இன்னபிறவும் தந்து கிழகிந்தியக் கம்பனி இடங்களை பெற்றுக் கொண்டு அரசையே தன் விருப்பத்திற்கு வளைத்தது. மன்னர்களில் ஒருவருக்கொருவரை பகைவர்களாக்கி, அவர்களுக்குள் சண்டையிட்டு, அனவரும் வலுவிலந்த பின் நாட்டையே பிடித்துக் கொண்டனர். வளங்களை எல்லாம் சூறையாடி, இருப்பு பாதை அமைத்து எல்லாச் செல்வங்களையும், கப்பலில் அவர்களது நாடு கொண்டு சேர்த்தனர். அவர்களும், அவர்களது நாடும் சுபிட்சமானது. இந்தியா அடிமையானது.

இப்போது, அதே சரித்திரம் வேறு பெயரில் ஆட்சியாளர்களையும், அதிகார மையங்களையும் தனியாய் கவனித்து திரும்பி வந்திருக்கிறது. அப்போதைய சிலர், பிரிட்டிஷ்காரன் புகழ் பாடி அவர்களது பிழைப்பை மட்டும் பார்த்து கொண்டது போல், இன்றும் சிலர் அந்நிய கம்பனிகளின் நோக்கம் அறியாது, வீடு, அலுவலகம் வாடகைக்கு விடுவது முதல், பெண்களைத் திருமணம் செயது கொ/கெடுப்பது வரை `அந்நிய கம்பனிதான் (MNC)' என மோகம் கொண்டு அலைகின்றனர்.

ஜான் பெர்கின்ஸ் எழுதிய 'பொருளாதர அடியாளின் வாக்குமூலம்' கூற்றுப்படி, வல்லரசுகள், உலகமயமாக்கல் எனும் பெயரில், வளரும் நாடுகளின் ஆட்சியாளர்களையும், அதிகார மையங்களையும், தங்களின் வலைகளில் லஞ்சங்களால் வீழ்த்தி, தொழில் புரட்சியை ஆரம்பிப்பார்கள். அரசுகளும் சிறப்பு சலுகைகளாய், பாதி விலைக்கு விளைநிலங்களை அழி/ளித்து தொழிற்சலை வளாகமாக்கும். ஐந்தாண்டு மானியங்கள், தடையற்ற மின்சாரம், தண்ணீர்,நாற்கர சாலை வசதிகள் செய்து தரப்படும். இரவும் பகலும், இவர்களுக்கு ஆசியாவின் 'வியர்வை பன்றிகள்' என்றழைக்கப்படும், இந்திய கூலிகள் ஊழியம் புரிய கிடைப்பார்கள். அந்நிய முதலாளிகள், அரசியல்/அதிகார மையங்களை மறைமுகமாய் டீல் செய்து கொள்வர். (ஒரு யூனிட் உற்பத்திக்கு இவ்வளவு அல்லது மாதா மாதம் கவர்)

ஊழியர்களின் அடிப்படை வசதிகள், நலனில் அக்கறை கொள்ளும் யூனியன்களை பிரித்து, கலைத்து, மீறினால் காவல்துறையை ஏவி, ஊழியர்களை அடிமையாக்குவார்கள். ஆட்சியிருப்பவர்கள் தங்களது பங்கில் மட்டும் கவனமாயிருப்பர். அரசு பங்குச்சந்தை குறியீட்டையும், ஜிடிபி தர வரிசை எண்ணையும் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

மக்கள் கிடைத்த ஓசி டிவியில் கரண்ட் இருக்கும் போது அலைவரிசைக்கு பணம் கட்டி விட்டு, கட்டிங் விட்டு இந்தியனாய் கவிழ்ந்து கிடப்பான். திரையில் 200 கோடி தயாரிப்பில் அந்நிய கம்பனி மாதிரி ஜொலித்துக் கொண்டிருப்பார் வேஷதாரி.

என்று மாற்ற/மாறப் போகிறோம்? மக்கள் ஆட்சியின் மூலமான, அடிப்படையான வாக்காளனுக்கு லஞ்சம் கொடுத்து தேர்வாகும் ஆட்சி, மக்களாட்ச்சியா? லஞ்ச ஆட்சியா?

தேனீ வளர்ப்பவனைப் போல்,தேன் எடுத்து பிழைக்கும் கூட்டம், கூடையில் தேன் தடவி தேனீக்களை கவர்ந்து பின் அவைகளிடமிருந்தே தேனைத் திருடிப் பிழைப்பது போல, அரசியல்வாதிகள் பணம் கொடுத்து மக்களை வாங்கி, அவர்களிடமிருந்தே ஐந்து வருடங்களுக்கு ஆட்சித் தேனை அனுபவிக்கிறார்கள். ஓட்டை விற்ற நாமும்...நல்லா அனுபவிக்கிறோம்.
ஒரு தப்பை மறுபடி மறுபடி செய்வதும் தப்பிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதிருப்பதும் நம் ஆதார குணம்.பல நூற்றாண்டுகள் தாண்டிய புராதன ஜீன்கள் ஹிமாலயத்தையும் கங்கையையும் போல.உங்கள் புண்ணியத்தில் பழையவற்றை மரத்தடி நிழலில் அசைபோடும் மாடு போல அசைபோடுகிறேன் வாசன்.
ReplyDeleteஇப்போது, அதே சரித்திரம் வேறு பெயரில்
ReplyDeleteதெரியாமல் விழுந்தது அப்போது.
தெரிந்தே விழுவது இப்போது
பயம்மா இருக்கு? நாம எங்கே தான் போகிறோம்??
ReplyDeleteindia-virkum pak-irkum america moham ondril thaan oththup poikirathu.. athil kooda nam inthiya thorththup poi vidumo endra achcham enakku.. indru (23rd oct 2010, Hindu) paper-il pak ku 2. something million dollars america nithi uthavi aliththirukkirathu- to fight terror- endru padiththaen...
ReplyDeleteenna kodumai ithu!?
சுந்தர்ஜி said...
ReplyDeleteஅந்தப் 'பல நூற்றாண்டுகள் தாண்டிய புராதன ஜீன்கள் ஹிமாலயத்தையும் கங்கையையும்", இவர்கள் கல்லுடைக்கும் பரங்கிமலையாயும், கழிவுகள் கலக்கும் கூவமாயும் மாற்றிவிடும் அபாயம் இருக்கிறதே, அசை போட,நல்லவற்றை மேய்ந்திருக்க வேண்டுமே,சுந்தர்ஜி?
ரிஷபன் said...
/இப்போது, அதே சரித்திரம் வேறு பெயரில்
தெரியாமல் விழுந்தது அப்போது.
தெரிந்தே விழுவது இப்போது/
Same old POISON in the new GLOBALISATION bottle
/ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
பயம்மா இருக்கு? நாம எங்கே தான் போகிறோம்??/
காட்டு(ஓட்டு)வெள்ளம் போகிற போக்கில், எங்கு போவோம், எங்கு ஒதுக்கப்படுவோம் என்பதுதான் புதிரான திகில்.
Matangi Mawley said...
/.. athil kooda nam inthiya thorththup poi vidumo endra achcham enakku.. indru (23rd oct 2010, Hindu) paper-il pak ku 2. something million dollars america nithi uthavi aliththirukkirathu- to fight terror- endru padiththaen...
enna kodumai ithu!?/
யுஎஸ்,பாக்,இந்திய நாடுகளின் தலைவர்கள் ஆடும் ஹைஸ்டேக் பந்தயம் இந்த 'பயங்காரவாத எதிப்பு' ஆட்டம். எங்கும் தோற்றுப் பலியாவது, அப்பாவி மக்கள், அவர்களது வரிப்பணம், எதிர்கால வளங்களும் தான். ஆள்பவர்கள் எப்போதும் எல்லாப் வகையான பாதுகாப்புக்களுடனும்.
கும்பகர்ணன் தூக்கத்தில் எப்போதோ ஒரு முறை ரொம்பவே மெல்லப புரள்வானாம். அந்த புரளலில் பூமி கிடுகிடுத்துப் போகுமாம்.. ஜனம் கூட ஒருநாள் இந்த சாக்காட்டுத் தூக்கத்தில் இருந்து புரளும் என்றே நம்பித்தான் ஆக வேண்டும்.. தற்போதோ, ஆவது ஒன்றுமில்லை.. வாரும்... சீரியல் மிஸ் ஆயிடும்!
ReplyDeleteமோகன்ஜி, ஜனம் சாக்காட்டுத் தூக்கத்தில் எனில் விடியல் வரலாம்.
ReplyDeleteஜனநாயகம் தூக்கிலப்படும் துக்கத்தில் அரற்றுகிற ஜனங்கள் என்ன செய்ய?
நிஜம் சுடுகிறது!
ReplyDeleteChitra said...
ReplyDelete/நிஜம் "சுடுகிறது"!/
Then it was meant HEAT,
but NOW it means SHOOT.
Thanks for your visit plus comment.
சமூக விழிப்புணர்வு கட்டுரைக்கு ஒரு சல்யூட்
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete/சமூக விழிப்புணர்வு கட்டுரைக்கு ஒரு சல்யூட்/
வணக்கம் சி.பி.செந்தில்குமார் . நன்றி, தங்களின் வழ்த்துக்களுக்கும் முதல் வருகைக்கும்.