Wednesday, October 13, 2010

தந்தி..ப‌ட‌ப‌ட‌ப்பு.

தந்தியை அனுப்புவ‌து ம‌ட்டும‌ல்ல‌ அதை ப‌டித்து புரிந்து கொள்வ‌தும் கூட‌ ஒரு க‌லை தான்.


இப்ப‌டித்தான், த‌பால்க‌ள் ம‌ட்டுமே ஒரே தொட‌ர்பாய் இருந்த‌ காலத்தில், எங்க‌ள் கிராம‌த்தில் ஒரு 'ப‌ர்மா ரிட்டார்ன்' ப‌ணக்கார‌ருக்கு, எஸ் ஐ ட்ரெயினிங்கிள் இருக்கிற‌ அவ‌ரின் த‌ம்பி " SEND 500 BY WIRE" என த‌ந்தி அனுப்பியிருந்தார். கிராம‌த்துல அப்ப‌ப்ப‌ ந‌ட‌க்கிற‌ ப‌ங்காளிகள் ச‌ண்டை, வ‌ர‌ப்பு த‌க‌ராறு போன்ற‌ கார‌ண‌ங்க‌ளால், எங்க‌ ப‌ங்காளிட‌ம் அவ‌ர்க‌ள் பேச‌க் கூட மாட்டார்க‌ள். ஊர்ல‌ ப‌டிச்சுக்கிட்டு இருக்கிற‌ ப‌ச‌ங்க‌ளும் கொஞ்ச‌ப்பேர்க‌ள் தான். ப‌டிச்சு முடிஞ்ச‌வுங்க‌ளெல்லாம், வேலைக்கு வெளியூர் போய்ட்டாங்க‌.

நம்ம ஆளு, ம‌த்த‌ ப‌டிச்ச‌ ப‌ச‌ங்க‌ட்ட‌ த‌ந்தியைக் காமிச்சு விவ‌ர‌ம் கேட்டுருக்காரு, ஒருத்த‌ன் "500 அடிக்கு வ‌ய‌ர் அனுப்ப‌ச் சொல்லிருக்கு"ங்கிறார். ம‌ற்ற‌வ‌ரோ 'வ‌ய‌ர் 500 பீசு'ன்றுக்கார்.

                                           
க‌டைசியா ச‌ண்டைக்கார‌ன்னாலும் ப‌ர‌வாயில்லையினுட்டு, த‌ய‌க்க‌த்தோட‌, என்னை 'த‌ம்பி'ன்னு கூப்பிட்ட‌ரு. (அப்பா, புள்ளை எதோ த‌ப்புப் பண்ணிட்டானோ! ச‌ண்டைகார‌ வீட்டுல‌யிருந்து வ‌ந்திருக்காங்க‌ளேன்னு டென்ச‌னாகிட்டாங்க‌.) காலேசு டீனேசு திமிர‌ல்ல‌ நானோ, என்ன‌ங்க‌ ன்னுட்டு போனா, த‌ந்தியை காமிச்சு 'ப‌டிச்சுக் கொஞ்சம் விவ‌ர‌ம் சொல்லுங்க‌ த‌ம்பி'ன்னாரு‌. அப்பா கிட்ட‌யிருந்த‌ டென்ச‌ன் என‌க்கு ட‌புளா‌ வ‌ந்திருச்சு. ப‌டிச்சா, கிளிய‌ரா புரிய‌லை, விள‌ங்கியும் விளங்காம‌ விடிகாலைப் பொழுது மாதிரி ம‌ங்க‌ல‌, புரியுர‌ மாதிரி இருக்கு ஆனா முழுசா புரிய‌ல.

சுத்தியிருக்கிற‌ ஆளுக‌ள நோட்ட‌ம் விட்டா,‌ பாதிக் கும்ப‌ல் இவ‌னுக்கும் தெரிய‌க்கூடாதுன்னு சாமி கும்பிடுதுக‌. அண்ணாச்சியோ, இது க‌டைசி சாய்ஸ், ச‌ண்டைக்கார‌க் குடும்ப‌த்திக்கிட்டயே வ‌ந்தும் த‌ந்தி விஜ‌ய‌ம் தெரிய‌லைன்னா, ப‌க்க‌த்து பெரிய‌ ஊர்ல‌ அல்ல‌து போஸ்டாப்பிசுல‌ கேட்டு அவ‌ரோட‌ இம்மேஸை அங்கே குறைக்க‌னுமேன்னு கூச்ச‌ம். அப்பாவுக்கோ, ப‌ய‌புள்ளைக‌ளா, ஊர்ல த‌ந்தி ப‌டிக்கிர‌துக்கு ச‌ண்டைகார‌ப் ப‌ய‌லுக‌ கூட‌ ஏம்புள்ளைகிட்ட‌த்தான் வ‌ந்திருக்காங்க‌ன்னு ஒரு சிலிர்ப்பு.
ஊர் கும்ப‌ல் கூடி சுத்துப் போட்டுட்டாங்க‌.
 (இரண்டு வேற‌,வேற‌ கோஷ்டி ஒன்னா கூடியிருக்கே)
                                                     
க‌டைசியா, யாரு செய்த‌ புண்ணிய‌மோ (யாரு, அப்பா ப‌டிக்க‌ வ‌ச்ச‌துதான்) அங்க‌ங்கே ப‌டிச்ச‌ வார‌ந்திரியோ, மாத‌ இத‌ழோ, எப்ப‌வாவ‌து போன‌ லைப்ர‌ரி புக்கிலயோ ப‌டிச்ச‌ விஷ‌ய‌ம் ப‌ளிச்சுன்னு பிளாஷ் அடிச்ச‌து. 'ஒங்க‌ எஸ் ஐ ட்ரெயினிங் த‌ம்பி, 500 ரூபாயை த‌ந்தி ம‌ணியாட‌ர் ப‌ண்ண‌ச் சொல்லிருக்காரு'ன்னேன். வ‌ய‌ர்ன்னா க‌ம்பி வ‌ழி த‌ந்தின்னு ஒரு அர்த்த‌ம் இருக்கிற‌தை மூளை, ஒரு மூலையிலயிருந்து சொல்லிருச்சு.
அப்பாவுக்கு த‌ன் ம‌க‌னைச் சான்றோனாய் கேட்ட‌ புலாங்கித‌ம். அண்ண‌ங்கார‌ருக்கு புதிர் புரிஞ்ச‌ திருப்தி.
(500 ரூபாய் அனுப்புற‌து வேற‌ விச‌ய‌ம்).

 அப்புற‌ம் என்ன‌!! கொஞ்ச‌ கால‌ம் நாம‌தான் ஹீரோ. சும்மாவே ஸ்டைல் காட்டுவோம். இப்ப‌ ச‌ங்க‌ரும், கூட‌வே ச‌ன் குழும‌மும் சேர்ந்த மாதிரி, சேட்டைக்கும், ஸ்டைலுக்கும் கேட்க‌னுமா என்ன‌? ஒரே ஓவ‌ர் ப‌ந்தா, குஷி தான் க‌ாலேஷ் ரிச‌ல்ட் வ‌ர‌ வ‌ரைக்கும்.....

11 comments:

  1. தங்களின் தந்தி படபடப்பு படித்தேன். நகைச்சுவையாக நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

    நான் ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி அவர்களிடம் கேட்டிருந்த சந்தேகத்திற்கு தாங்கள் விளக்கம் அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்,
    வை. கோபாலகிருஷ்ணன்.

    ReplyDelete
  2. Shri வை. கோபாலகிருஷ்ணன்,
    Mr.வெறும்பய,
    வெயிலோன் 'த‌ந்தி ம‌ர‌ம்' ப‌திவினை ப‌டித்த‌ பி‌ன், பின்னோட்டமிட எழுதுகையில், ப‌ழைய‌ நினைவுக‌ள் மிக‌ அதிக‌மாகி விட்ட‌தால், ப‌திவாக மாறிவிட்ட‌து. ந‌ன்றி இதனை..ம்.. ர‌சித்த‌மைக்கு

    ReplyDelete
  3. மகிழ்ச்சி அன்பு ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  4. கட்டுக் கட கட்டுக கட..கடகட்டு கடகட கட்டு.....தந்தி பாஷைல நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கேன்.புரிஞ்சுகிட்டீங்கதானே வாசன்?

    ReplyDelete
  5. ந‌ன்றி சுந்தர்ஜி,
    நான் ப‌ட‌ ப‌ட‌ப்புட‌ன் எழுதிய‌தை, நீங்க‌ க‌ட‌க்,கட்டு, க‌ட‌ க‌ட‌ன்னு விம‌ர்சிச்சிட்டிங்க‌.
    அருமையான‌....

    ReplyDelete
  6. /K.B.JANARTHANAN said...அட்டகாசம் போங்க!/
    Thanks a lot for your visit & the commends, dear K.B.Jana.

    ReplyDelete
  7. நினைவுகளை அசைப்போட்ட விதம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  8. /Priya said...
    நினைவுகளை அசைப்போட்ட விதம் நன்றாக இருக்கிறது./

    நன்றி ப்ரியா, த‌ங்க‌ளின் ப‌திவில் கிட‌க்கும் முன்நினைவோட்ட‌ங்க‌ளின் முன் இது ஒரு மின்'மினி' அள‌வுகூட‌ தேறாது.

    ReplyDelete