1, ரஜினி. 2, ஐஸ்வர்யாராய். 3, டைரக்டர் சங்கர், 4, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு.
1, ரஜினி.
அப்பாவி ரசிகர்களின் முட்டாள்தனத்தினை முதலீடு செய்து பணம் பண்ணும் பொய் முக நடிகர் ரஜினி, தென்னிந்திய மக்களுக்காக, மார்க்கட்டுக்காக.
(அசல் தோற்றம், இமயமலை ஏற்றம், எளிமையானவர், அடக்கமானவர், உண்மை தவிர பொய்யே சொல்லாதவர், பக்திமான், அநியாயத்தை சினிமாவுக்கு வெளியிலேயும் எதிர்ப்பவர். இம்மேஜை பற்றி கவலைப் படாதவர் என்ற ஒரு இம்மேஜை ஏற்படுத்திக் கொண்டவர். அதனால் படித்த கும்பல் கூட நம்புகிறது. எம்ஜியாருக்கே இந்த படித்த கும்பல் குறைவு)
2, ஐஸ்வர்யாராய்.
அந்நியர்களின் அழகுசாதன முதலீட்டு அழகி, வட இந்திய அமிதாப் குடும்பப் பின்னனி மற்றும் ரஜினியின் பல வருடக் கனவுக் கதாநாயகி (முன்பு கருப்பு என நிராகரிப்பு) ஐஸ்வர்யராய், அகில உலக குறிப்பாய் வட இந்தியா சந்தைக்காய்.
மக்கள் தொகை மிகுந்த, பொறாமை குணங்கள் கொண்ட, எளிதில் ஏமாறும் இந்திய மக்களிடம் அலங்காரப் பொருளை விற்க, பதினாறு ஆண்டுகளுக்கு முன் (1994) ஒரே ஆண்டில், மேலைநாடுகள் நடத்திய வியாபர தந்திரத்தால் (மிஸ் இந்தியாவின் இரண்டாம் இடத்திலிருந்த) ஐஸ்வர்யராய் உலக அழகியாவும் (MISS WORLD) சுஸ்மிதா சென் பிரபஞ்ச அழகியாகவும் (MISS UNIVERSE) முடிசூட்டப்பட்டனர். அதன்பின் இந்திய குக்கிராமச் சந்தைகளில் கூட உதட்டுச்சாயங்கள் விற்பனை ஆகின்றன.
3, டைரக்டர் சங்கர்.
போதையின் வீச்சு அறிந்து தெளிந்த விற்பன்னர். மோதி நொறுங்கி எரியும் கார்களைக் கூட கோடிகளில் புத்தம் புதுவாய் வாங்கி ரசிகர்களை ஏமாற்றாத, தயாரிப்பாளர்களை மட்டும் மாற்றும், ஊருக்கு மட்டும் உபதேசி. (கணக்கில்லாது பணம் கொட்டி, "கருப்புப் பண ஒழிப்பு"
பற்றியே படமெடுக்கும் மேதாவி)
4,சன் பிக்சர்ஸ் தயாரிப்பு.
1967 முதல் டெல்லியில் கோலேச்சிய எம்பி, விபி சிங் முதல் வாஜ்பாய் வரையான, மந்திரிசபைகளின் மந்திரியாகிய மாறனின் மகன்,ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராய் இருக்கும் தாத்தாவின் பேரன். தென்னாசியாவின் மிகப்பெரிய வணிக, பணக்கார குடும்பத்தலைவனின் தயாரிப்பு.
இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்பது போல், இந்த காரணிகள் மட்டுமின்றி, தொலைக்காட்சி, பத்திரிக்கை, எஃப் எம்களின் கூச்சல், போஸ்டர், திரை அரங்குகளின் ஆக்கிரமிப்பு.
கிளர்ச்சியூட்டும், தயாரிக்கப்பட்ட போலி ரசிக பால், பீர் குளிப்பாட்டல்.
பானக் காத்தாடி போன்ற படங்களின் நூல்களெல்லாம் அறுக்கப்பட்டு வானில் கலந்து விட்டன.
"இனிமேலாவது நல்லதுக்கு கூட்டுச் சேருங்கப்பா"
இது அப்பாவி தமிழன் வார்த்தை.





Poda dubukku
ReplyDelete/Anonymous said...
ReplyDeletePoda dubukku/
Hope you ENJOYED.
ayyo ayyo, enna oru vayitherichchal, poda po, saga modalla ethayavathu sathichchuttu saavu, ippadi vayiru erinji seththuratha
ReplyDeleteaha.. aha.. kamal kitta oruthar kettaram, neenga ippadi kodi kanakkula kotti padam edukarathavida, oru periya factory arambitcha pala perukku nanamaiya irukkumle... athuku avaru enakku therinchatha than seiyamudiyam appadeenar.. (same answer here ! )
ReplyDelete@ஆரியன்,
ReplyDeleteஆட்டுக்கு மஞ்சள் தண்ணியூத்தி, மாலை போடுறதைப் பாக்கிறிங்க.
பின்னால், வெட்டருவாள் மறைஞ்சிருக்கிரதை, நாங்க பார்க்கிறோம்.
இது வயிற்றெரிச்சல் இல்லை, மனக் குமுறல்.
பின்னோட்டத்திற்கு நன்றி, சிவபார்கவி.
தெரிந்த தொழில் செய்வதைத்தான் கீதையே சொல்கிறது.
வலுத்த மாடுகள், கூட்டு சேர்ந்து மூலைக்கு ஒன்றாய் நின்று,
மற்ற மாடுகள் மேய்ச்சலுக்கு வரவிடாமல், பாய்ச்சல் காட்டும் போது,
வழிப்போக்கன், அந்த கொழுத்த மாடுகளை கல்லொறிந்து விரட்டத்தான் செய்வான்.
அவர்களின் கூட்டணி படம் பற்றியதல்ல பிரச்சனை, அவர்கள் மட்டுமே இனி படம் பண்ண முடியும் என்கிற அதிகார ஆணவம் தான் பிரச்சனை.
ஒரு பார்வைக்கு அவரின் சார்பு வாதத்துக்கான நாகரீகமான வார்த்தைகள் கூடத் தராத முதிர்ச்சி வேறெதைக் கொடுத்துவிடும் வாசன்? இந்த வித வியாபாரம் பெரிய அரசியல் பின்னணியுடன் நடக்கிறது என்பதுதான் வேடிக்கை.
ReplyDelete@ சுந்தர்ஜி. said...
ReplyDelete/இந்த வித வியாபாரம் பெரிய அரசியல் பின்னணியுடன் நடக்கிறது என்பதுதான் வேடிக்கை./ அரசியலின் சிலந்தி பின்னல்கள் பின்னால், இந்த ஸ்டார்கள் நிற்பதால், அப்பாவி ரசிகர்கள்
இவ்ரகளால் கவரப்பட்டு, அரசியல்வாதி சிலந்திகளிடம் சிக்கி இரையாகிறார்கள். அந்த அப்பாவிகளை அவர்களுக்கு தீனியாக்குவது, இந்த "நல்லவன்" வேஷம் போடும் கூத்தாடிகள் தான்.
ungal pathuvum oru publicity thaan... :) indraya kaala kattaththil "controversy" yum oru publicity thaan... mikavum "effective"aana publicity...
ReplyDeletethavira intha vishayangal ellaam therindavarkal intha koottangalil illavey illai endraa koorukireergal? ellaam therinthavarkal nam makkal. aanaal athaip patri avarkalukku akkarai illai. avarkalukku intha vishayangal yaavum oru "Lunch-time topic". avvalavuthaan...
enthiran naanum paarthen.. kaasai iraiththuk kondu thaan paarthaen.. koottaththirkku kuraivillai.. maamikal muthal kuzhanthal varai ellorum irunthaarkal.. ivvvalavu hype thevai illai thaan... enna seivathu?
Matangi Mawley said...
ReplyDelete/ungal pathuvum oru publicity thaan... :) indraya kaala kattaththil "controversy" yum oru publicity thaan... mikavum "effective"aana publicity.../
(Let me bill them for the PUBLICITY)
/ellaam therinthavarkal nam makkal. aanaal athaip patri avarkalukku akkarai illai. avarkalukku intha vishayangal yaavum oru "Lunch-time topic". avvalavuthaan.../
Thats why I have mentioned:
இம்மேஜை பற்றி கவலைப் படாதவர் என்ற ஒரு இம்மேஜை ஏற்படுத்திக் கொண்டவர். அதனால் படித்த கும்பல் கூட நம்புகிறது. எம்ஜியாருக்கே இந்த படித்த கும்பல் குறைவு. He is also a scientific cheat.
//ivvvalavu hype thevai illai thaan... enna seivathu?//
This HYPE ONLY is thier strength. Seduce the public by all means (I mean) MEDIA`S