அலகாபத்தின் தலைமை நீதி மன்றத்தில் நடந்த, ராமர்/பாப்ரி நிலப்பிரச்சனையின் அறுபதாண்டுகால வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 24ல், இல்லை 28ல் என இழுபட்டு, இறுதியாய் உச்ச நீதிமன்ற அறிவிப்பின்படி 30ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. தீர்ப்புக்காய், அறுபதாண்டு காலம் ஆக்கப் பொறுத்த மக்கள், காமன்வெல்த் கேம்ஸ் வரை ஆறப் பொறுக்க மாட்டார்களா? ஏன் இந்த உணர்வு பூர்வமான பிரச்சனையின் தீர்வு இந்த நேரத்தில்? என்ற மிகச்சரியான கேள்விகளுக்கு ஒரே சரியான பதில்.
வழக்கை விசாரித்துவந்த மூவரணி நீதிபதிகளில் ஒருவரான டி.வி சர்மா, செப்டம்பரில் ஓய்வு பெருகிறார். வழக்கின் தீர்ப்பை மாத கடைசிக்குள் அறிவிக்காவிடில், பின்வரும் புது நீதிபதி வழக்கை மறுபடியும் முழுவதுமாய் (இன்னும் 60 வருஷமா?) விசாரித்த பின்பே தீர்ப்பு தயாராகும். நடைமுறை சிக்கல்களையும், தாமதங்களையும் கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம், அலகாபாத் தலைமை நீதிமன்றதிற்கு 30ஆம் தேதி மாலை 3.30க்கு தீர்ப்பு என ஆணையிட்டுள்ளது.
பாரதபிரதமர், நாட்டின் நலன் கருதி, மக்கள் அனைவரும், நீதிமன்ற தீர்ப்புக்கு பணிந்து அமைதி காக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் யாவரும், ஆண்டானுக்கு ஒரு நியாயம், அடிமைகளுக்கு ஒரு தீர்ப்பு என வழமை மாறாது அடங்கி இருக்கனும்.
இதே பிரதமர், மூன்று வாரங்களுக்கு முன்னாள் (06 செப்டம்பர்) உச்சநீதி மன்றம், "அரசால் பாதுகாக்க இயலாது வீணாகும் உணவு தானியங்களை, நம் தேச ஏழைகளுக்கு வழங்குங்கள்" என்று உணவமைச்சருக்கு இட்ட கட்டளையை தாங்க முடியாது, "உச்ச நீதிமன்றம், அரசின் பாலிசியில் தலையிடக்கூடாது" என, அவர்களையே கடிந்து கொண்டார்.
பின்னே,
(சரத் பவார் கோபப்பட்டா, மஹாராஷ்ட்ரா, புது டெல்லி இரண்டுளையும் காங்கிரஸ் பவர் போயிருமே?)
காங்கிரஸின் சட்டத்துக்கு மரியாதை, இன்னும் எப்படின்னு, தங்க தலைவின் மாமியார் இந்திராவிடம் கற்றுக் கொள்ளுங்கள். 1975 ஜுன் 12ஆம் தேதி, இதே அலகாபத் நீதிமன்றம் "இந்திரா, லோக் சபா தேர்தலில், ராஜ் நாரயணனை எதிர்த்து ஜெயித்தது செல்லாது, மேலும் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதால் இவர், மேலும் ஆறு ஆண்டுகளுக்கு, தேர்தலில் நிற்கும் தகுதியும் இழக்கிறார்" என்று தீர்ப்பு வழங்கியது.
சட்டத்தை மதித்து, சிங் மாதிரி ஒருவரிடம் ஆட்சியை கொடுத்து விட்டு, சோனியா மாதிரி ரிமோட்டை வைத்துக் கொள்ளத் தெரியாத (சிங் மாதிரி ஆட்கள் அப்போ இல்லையோ)இந்திரா என்ன செய்தார்? அவசர அவசரமாய் அவரைக் காப்பாற்றிக் கொள்ள, பதின்மூன்று நாட்களில் (25 ஜுன்) நாட்டுக்கு "அவசர நிலை" (எமெர்ஷென்ஸி) கொண்டு வந்தார். அந்த இருபத்து ஒரு வார இருண்ட காலம் 1977, மார்ச் 21ல் (பல மேலை நாட்டின் நெருக்கடியால்) முடிந்து, ஜனதா கட்சியை தொடங்க உதவினார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வார்த்தையை மதித்து,
நாம் நாட்டைக் காப்போம். ஜெய்ஹிந்த்!!
இன்றைய தினசரியில் பார்க்கும்போது நானும் என் மனைவியிடம் இதைத்தான் சொல்லிகொண்டிருந்தேன்.பிரதமர் ஒரு தீர்ப்புக்கு முன்னால் இத்தனை உதார் விடுவதும் மூன்று வாரத்துக்கு முன்னால் இதே உச்சத்தை விமர்சித்ததும்----விடுங்கள் யாரும் ஒரு மாதத்துக்கு முந்தையவற்றை நினைவில் வைத்திருப்பதில்லை.
ReplyDeleteSAME blood for us Sundarji, but the Politians are having SHAME blood. What shall we do rather than just screaming in the blogs.
ReplyDeleteசூடு பறக்கிறது ... செய்தியின் தன்மையும் ,பதிவும்.
ReplyDelete@ நிலா மகள் said...
ReplyDelete/சூடு பறக்கிறது ... செய்தியின் தன்மையும் ,பதிவும்./
உங்களது வருகைக்கும்,முதல் பின்னேட்டத்திற்கும் எனது நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ரொம்ப சரி. நாமும் நாட்டைக் காப்போம்!
ReplyDeleteஜெய் ஹிந்த்!!!
/ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
ReplyDeleteரொம்ப சரி. நாமும் நாட்டைக் காப்போம்!
ஜெய் ஹிந்த்!!!/
'AAMEN' How to say in Roman, RRR?