Tuesday, September 7, 2010

உச்ச‌நீதி ம‌ன்ற‌ தீர்வும் பிர‌த‌ம‌ர் ப‌திலும்




உச்ச‌ நீதிம‌ன்ற‌ம், ஊட‌க‌ங்க‌ள் காட்டிய‌ உணவு பொருட்க‌ளின் அழிவை காண‌ச் ச‌கியாது இப்ப‌டி பாதுகாப்பின்றி அழிவ‌தை, ஏழைம‌க்க‌ளுக்கு ப‌கிர்ந்த‌ளிக்க‌ ஆணையிட்ட‌து.

உண‌வு அமைச்ச‌ர் ஐசிசி,ஐபிஎல் கிரிக்கெட் பொறுப்புக‌ளுக்குப் பின், ஏழைக‌ளை,அத்திய‌வ‌சிய‌ப் பொருள்க‌ளின் விலை உய‌ர்வை ப‌ற்றி சிந்திக்க‌ நேர‌மின்றி இருக்கிறார். பிர‌த‌ம‌ர் அவ‌ரைக் காக்க‌, உச்ச‌நீதி ம‌ன்ற‌ம் அர‌சு ந‌ட‌வ‌டிக்கையில் த‌லையிட‌க் கூட‌தென்கிறார்.

இவர்க‌ள், அம்பானிக்காக‌ பெட்ரோல் விலையை ஏற்றுவார்க‌ள்.
ஷேர் மார்க‌ட்டுக்காக பார்டிசிபேட்ரி ம‌சோதா கொண்டுவ‌ருவார்க‌ள்.
தோல் தொழில் ஏற்றும‌திக்காய், பாலாறு ம‌ண‌லாறு ஆகும்,
அந்த‌ ம‌ண‌லையும் அவ‌ர்களே அள்ளி கொள்ளை அடிப்பார்க‌ள்.

நில‌த்த‌டி நீரை அந்நிய‌(கோக்/பெப்சி) க‌ம்ப‌னிக‌ளுக்கு விற்று,
விவ‌சாய‌த்தை, நில‌வ‌ள‌த்தை, உயிர‌ன‌த்தை அழிப்பார்க‌ள்.
ம‌க்க‌ள் குடிக்க‌ த‌ண்ணீருக்கு ஒரு லிட்ட‌ர் பாட்டில் ப‌தினைந்து ரூபாய்க்கு வாங்க‌ வேண்டும்.
 (அரிசி விலை கிலோ ஒரு ரூபாய் தான். ஆச்சரியமான பூமி).
 37 ச‌த‌வீத‌ம் இந்திய‌ர்கள் வ‌றுமைக் கோட்டுக்கு கீழ்,ஆப்பிரிக்க‌ ம‌க்க‌ளைவிட‌ மோச‌மாய் ஆன‌ல்,அந்நிய‌ வ‌ங்கிக‌ளில் அதிக‌ம் இருப்ப‌து இந்திய‌ப் ப‌ண‌ம் தான்.

கார‌ண‌ம், நாட்டை ஆளுமை செய்யும், சோனியாவுக்கு, இந்திய நாட்டை,மக்க‌ளைப் ப‌ற்றி எதுவும் தெரியாது. ஆனால் அர‌சிய‌ல்வ‌திக‌ளை ந‌ன்கு அறிவார் போலும். (ராஜிவ் பிர‌த‌ம‌ராகும் வ‌ரை, சோனியாவிட‌ம் இந்திய‌ பாஸ்போர்ட் இல்லை) http://en.wikipedia.org/wiki/Sonia_Gandhi

பிர‌த‌ம‌ரும், உள்துறை அமைச்ச‌ரும், திட்ட‌ க‌மிஷ‌ன் துணைக‌ளும் ப‌டித்த‌துஆக்ஸ்போஃடு,கேம்பிரிட்ஸ்,ஹார்வாடு ப‌ல்க‌லை க‌ழ‌க‌ங்க‌ளில்.
இவ‌ர்க‌ளுக்கு எஜ‌மான் வோட்டுப் போட்ட‌ இந்திய‌ன் இல்லை. க‌ட‌ன் த‌ருவ‌தாய் கார‌ட் காட்டும் உல‌க வ‌ங்கிதான்.

போபால் துய‌ர‌த்திற்காய் 'டௌ' கெமிக்க‌ல்ஸ் வாச‌லில் ந‌ம் ம‌க்க‌ள் எதிர்ப்பு குர‌லெழுப்பி ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌த‌ற்கு, அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமாவின் உத‌வியாள‌ர்,திட்ட‌க‌மிஷ்னுக்கு, 'என்ன‌ கூச்ச‌ல் அங்கே? ச‌த்த‌ம் அதிக‌மானால் உல‌க‌வ‌ங்கி வாச‌லை அடைத்து விடுவோம்' மெயில் அனுப்புகிறார்.

ந‌ம் ஆங்கில‌ ஊட‌க‌ம், திட்ட‌க‌மிஷ‌னிட‌ம் இந்த‌ மிர‌ட்ட‌ல் மெயில் ப‌ற்றி அலுவாலியாவிட‌ம் கேட்டால்,ப‌தில் கூறாம‌ல் "டீ கேட்டேனே, எங்கே?" என்று ஊட‌க‌த்தை புற‌க்க‌ணிக்கிறார்.

ம‌க்க‌ளுக்காக‌ வாழ்ந்த‌, லால் ப‌க‌தூர் சாஸ்திரி போன்ற‌ ("ஜெய் கிஸான், ஜெய் ஜ‌வான்") பிர‌த‌ம‌ர்க‌ள் அம‌ர்ந்த‌ பிர‌த‌ம‌ர் இருக்கை இன்றோ, தேவ‌ஹ‌வுடா,ம‌ன்மோக‌ன் சிங் போன்ற‌வ‌ர்க‌ளால் நிர‌ப்ப‌டுகிற‌து.

ம‌க்க‌ளின் த‌ர‌ம், தேர்ந்தெடுக்க‌ப்ப‌டும் த‌லைவ‌ர்க‌ளின் த‌ர‌த்தால் ம‌திப்பிட‌ப்ப‌டுகிற‌து.

இந்த‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு இவ‌ர்க‌ளே போதும் தான். ‌

2 comments:

  1. நிலத்தால் அமைகிறது நீரின் மாண்பு. அப்படித்தானே வாசன்? நம் காலம் இந்த எருமைகளின் முதுகில் சவாரி செய்வதுடன் முடிந்துவிடுமெனிலும் அடுத்த தலைமுறை பல தியாகங்களுக்குத் தயாரானாலொழிய காத்திருக்கும் சொர்க்கம் கானல் நீராகிவிடும். பெருமூச்சுக்களுடன் நகர்கிறேன் வாசன்.

    ReplyDelete
  2. உங்க‌ள‌வ‌ர்க‌ளின் அவேச‌ பெருமூச்சு, புயலாகி இந்த‌ போலிக‌ளை விர‌ட்டி,இளைய‌ த‌லைமுறைக்காய் விவேக‌த்தை விதைக்காதா? ஒவ்வொரு உயிரும், இன‌மும் வாழ்வ‌தே த‌ன்னின‌த்தை மேம்ப‌டுத்தி,இய‌ல்போடுயிணைந்து, மேலும் மேலும் ப‌ல்கி பெருக்க‌த்தானே? ஏனிந்த‌ ம‌னித‌ வில‌ங்குக‌ள் ம‌ட்டும்,அத‌நின் வில‌கி இய‌ற்கையையும் அழித்து இவ‌னின் த‌லைம‌றைக‌ளையே அழிக்கிறான்.

    ReplyDelete