Tuesday, August 31, 2010

வாரிசு வருகிறார்.

மக்க‌ளாட்சி ம‌லர்ந்து அறுபதாண்டுக‌ள் தாண்டிய‌ பின்பும்,

சுத‌ந்திர‌ இந்தியா ஒருசில‌ குடும்ப‌ங்க‌ளின் பிடியில்தான் இருக்கிற‌து. முத‌ல் சுத‌ந்திர‌தின‌த்தில் கொடியேற்றிவ‌ரின் வாரிசுக‌ள் தான் இன்னும் அந்த‌ க‌யிற்றை கையில் வைத்திருக்கிறார்க‌ள்.

 நாற்ப‌தில் நாய் குண‌ம் என்பார்க‌ள். ஆனால், நேரு குடும்ப‌த்தில் அப்போதுதான் முடி சூட்டு விழா ந‌ட‌க்கும். இந்திரா(1966), ராஜிவ்(1984) பிர‌த‌ம‌ரான‌து அந்த‌ வ‌ய‌துக‌ளில் தான்.

ராகுலும் நாற்ப‌தைத் தாண்டுகிறார்.

பிர‌த‌மர் ம‌ன்மோக‌ன்சிங் யுபிஏ இர‌ண்டில் மிக‌ப்பின்னுக்கு த‌ள்ள‌ப்பட்டு, பிர‌ணாப்,சித‌ம்ப‌ர‌ம் முன்ன‌னியில். பிர‌த‌மரின் பிர‌தான‌, பிரியாமான‌ யுஎஸ் அணு எரிச‌க்தி ம‌சோதா (ச‌வான்/ஜெட்லி உட‌ன்ப‌டிக்கை ம‌ற்றும் ப‌ல‌ திருத்த‌ங்க‌ளுக்கிடையே) ஒருவ‌ழியாய் க‌ள‌ம் க‌ண்ட‌டைந்துவிட்ட‌து. அந்த‌ நிறைவோடு, உட‌ல்ந‌ல‌ம் கார‌ண‌ங்க‌ளால் ம‌ன்மோக‌ன்சிங் ஓய்வுக்கு செல்ல‌, ம‌குட‌ம் வாரிசுக்கு வர‌லாம்.

சூடிக்கொள்ள‌ வேண்டிய‌ ‌ த‌லைமை, யுபிஏ கூட்டின் அழுத்த‌த்தை தாங்குமா? என்ற‌ எண்ண‌த்தில் திட்ட‌ம் நிலுவையில் ஊச‌லாடுகிற‌து.

பிர‌த‌ம‌ர் ப‌த‌வி, பாட்டியும் த‌ந்தையும் வ‌கித்த‌ கால‌ம் போல‌ த‌ன்னிட்ச்சையாய், தனிக்க‌ட்சி ப‌ல‌த்துட‌ன் இருக்க‌ வேண்டுமென‌ ‌ராகுல் விரும்புவ‌தாய் தெரிகிற‌து.

தாய்க்கோ பிள்ளைக்கு, க‌ல்யாண‌ம்தான் ஆக‌வில்லை, பிர‌த‌ம‌ராவ‌து ஆக‌ட்டுமென‌‌ ஆசை. நூறு கோடி ம‌க்க‌ளுள்ள‌, அறிவுஜீவிக‌ள் நிறைந்த‌ இந்த‌ பார‌த‌/இந்திய‌ தேச‌த்தில், பார‌ம் சும‌க்க‌, பாவ‌ம் நேரு குடும்ப‌ம் த‌விர‌ வேறு எந்த‌ நாதியுமே இல்லையோ!

ம‌ன்மோக‌ன், ராகுல் பிரிய‌ப்ப‌டும் போது வில‌கிக் கொள்கிறேன் என‌ எப்போதோ அறிவித்து விட்டார்.

பார‌த‌நாடு, ராகுல் த‌யாராவ‌த‌ற்காக‌ காத்துக்கொண்டிருக்கிற‌து.

7 comments:

  1. நாடு.. பேசிப் பேசி.. அலுத்து விட்டது...

    ReplyDelete
  2. வெறும்பய வருகைக்கு ந‌ன்றி.
    ம‌க்க‌ளுக்கு ச‌லிக்க‌வில்லையா?
    சரியாய் ச‌லித்து பார்க்க‌வில‌லையா?

    ReplyDelete
  3. அண்ணே அடுத்தது கண்டிப்பாக தொங்கு பாராளுமன்றம்தான் அமையும் ...

    ReplyDelete
  4. ராகுல் வந்து என்ன செய்வார் ஒன்றும் செய்ய முடியாது

    ReplyDelete
  5. சௌந்தர் said:
    //ராகுல் வந்து என்ன செய்வார் ஒன்றும் செய்ய முடியாது//
    கொள்ளுத் தாத்தாவின் காஷ்மீர்,சீனா,பாக் பிர‌ச்ச‌னைக‌ளை தீர்ப்பார்.
    இந்திரா பாட்டியின்,ந‌க‌ர்வாலா,பிரிந்த‌ன்வாலா,அவ‌ச‌ர‌கால‌ அத்துமீற‌ல்,
    ஆப‌ரேஷ‌ன் புளு ஸ்டார்,சீக்கிய‌ர்மீதான தாக்குத‌ல்க‌ள், அப்பா மீதான‌,
    போப‌ர்ஸ்,உற‌வுக்காரான‌ குவாட்ட‌சேரி வ‌ழ‌க்கு, இவ‌ற்றைக் கூட‌ ஒன்றும் செய்ய‌மாட்டாரா?

    கே.ஆர்.பி.செந்தில் said...
    தொங்கு பாராளும‌ன்ற‌ம் தான் எனினும், காங்கிர‌ஸை தாங்கும் பாராளுமென்றால் ஓகே தான்.
    இன்னும் ஐந்து வ‌ருட‌ம் காத்திருக்க‌ முடியாதே!

    ReplyDelete
  6. இந்திரர்கள் மாறலாம்... ஆனால் இந்திராணி அப்படியேதான் இருப்பாள் என்பது புராணம்... ஆள்வோர் மாறலாம்... ஆளப்படுவோர் நிலை???

    ReplyDelete
  7. விந்தைமனிதன் said...
    //இந்திரர்கள் மாறலாம்... ஆனால் இந்திராணி அப்படியேதான் இருப்பாள் என்பது புராணம்... ஆள்வோர் மாறலாம்... ஆளப்படுவோர் நிலை???//
    இதில் மாறாத‌தை மாற்ற‌வும், மாறுவ‌தை மாற்றாம‌லும் நாட்டை வீணா(க்)கிக் கொண்டிருக்கிறோமா?

    ReplyDelete