Wednesday, February 15, 2012

பொய்க‌ள் பொய்த்த‌ன‌
                                மெய்க‌ள் ஜெயித்த‌ன‌.

                             

உட‌ன் பிற‌ப்புக‌ள் அல்ல‌து இர‌த்த‌தின் இர‌த்த‌ங்க‌ள‌து போஸ்ட‌ர் அல்ல‌ இது.

ப.சித‌ம்ப‌ர‌ம் அவ‌ர்க‌ளுக்காக‌ ஒட்ட‌ப்பட்டுள்ள‌ விள‌ம்ப‌ர‌ம் இது.

2ஜி சிறப்பு நீதிம‌ன்ற‌ம், "சித‌ம்ப‌ர‌த்தின் மீதும் ஸ்பெக்ட்ர‌ம் ஊழ‌ல் க‌றை ப‌டிந்திருக்கிற‌து" என சுப்ர‌ம‌ணிய‌ சுவாமி சும‌த்திய‌ குற்ற‌சாட்டை த‌ள்ளுப‌டி‌(நீதிப‌தி ஷைனி)செய்த‌ பின் சென்னை சுவ‌ர்க‌ளில் மின்னிய‌ விள‌ம்ப‌ர‌ வாக்கிய‌ங்க‌ள் இது.

பொய் பொய்க்க‌ வேண்டும், நிஜ‌ம் ஜெயிக்க‌ வேண்டும் என்ப‌தே மக்க‌ளின்க‌ளின் வேண்டுத‌லும்.

ஆகவே பாம‌ர‌னின் இந்த‌ சில ‌பொய்யா..மெய்யா? சந்தேக‌ங்க‌ளை ம‌ட்டும் தீர்த்து வையுங்க‌ள் க‌ன‌ம் ம‌ந்திரியாரே.

நீங்க‌ எம்பி தேர்த‌ல்ல‌ ஜெயிச்ச‌து, பொய்யா..மெய்யா?

நீங்க‌ 2001 ஆம் ஆண்டின் அலைவ‌ரிசை விலையும் 2008 ன் விலையும் ஒன்றாகவே இருக்கும் என பொருள‌தார‌ (காம்பிரிஸ்ட்) மேதையாக‌ (நிதி அமைச்ச‌ர் என்ப‌தை ம‌றந்து விட்டு) ஒத்துக்கொண்ட‌து  பொய்யா..மெய்யா?

நீங்க‌ நிர்வாகியாக‌ இருந்த‌'வேதாந்தா'வின் வள‌த்திற்காக ப‌ழ‌ங்குடியின‌ரை அவ‌ர்க‌ள் ம‌ண்ணில் இருந்து அக‌ற்ற‌ அவர்க‌ளை மாவோஸ்ட்டுக‌ள் என முத்திரையிட்டு வெளியேற்ற முய‌ற்சிப்ப‌து பொய்யா..மெய்யா?

நீங்க‌ 2007 ல் பார்டிசிபேட்ரி நோட்(மொருஷிய‌ஸ் ஆக்ட்)மூல‌ம் அந்நிய‌ க‌ருப்புப் ப‌ண‌ங்க‌ளை வெள்ளையாக்கி, நாட்டின் ம‌த்திய‌ ஏற்றும‌தியாள‌ர்க‌ளை நசித்த‌து, பொய்யா..மெய்யா?

உங்க‌ குடுப‌த்தினர‌து க‌றுப்பு ப‌ணம் (300 கோடி) அந்நிய‌வ‌ங்கில் இருப‌ப‌தாய் விக்கிலீக் சொல்வ‌து  பொய்யா..மெய்யா?

நீங்க‌ சென்னை காம‌ராஜ் அர‌ங்கில் முல்லை பெரியாறு விவ‌கார‌த்தில் கேர‌ள‌ அர‌சின் ந‌ட‌வடிக்கை த‌வ‌று எனச் சொன்ன‌து பொய்யா..மெய்யா?

நன்றி ஐயா, மேலும் ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள், நீங்க‌ இவைக‌ளுக்கு ப‌தில் அளித்த‌ பின்.

 சத்திய‌மே ஜெய‌தே.

(இரண்டு ப‌ட‌ங்க‌ள். கூகுளுக்கு நன்றி!)